13 November 2014

பங்கிலும் நீதான் கிங்கு....3

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.


முதலாவது PE RATIO. இரண்டாவது  SHARE HOLDING PATTERN (SHP ). இதனைப் பார்த்து ஒரு பங்கினை வாங்கும் மனநிலை வந்து விட்டாலே நீங்கள் 35% சதவீதம் வெற்றிகரமான பங்குகளை வாங்கிட இயலும். 

ஒரு இடத்தினை விலை குறைவாக மட்டும் வாங்கினால் போதுமா ? 5 லட்சம் மதிப்புள்ள இடம் தான் 2 லட்சத்திற்கு கிடைத்து விட்டதும் வாங்கி விட்டால் மட்டும் போதுமா ? நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் வாங்கின இடத்தை 3 லட்சத்திற்கோ அல்லது  4 லட்சத்திற்கோ விற்க முயலும் போது யாருமே வாங்க ஆர்வம் காட்டாமல் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆனால் சந்தை விலையினை நோக்கும்  போது கட்டாயம் நல்ல விலை தான். ஆனால் நீங்கள் வாங்கிய விலைக்குக் கூட கொடுக்கிறேன் என்றாலும் வாங்கத் தான் யாருமே யாருமே முன் வர வில்லை.. இப்படியும் பல இடங்கள் இன்றும் உண்டு. பேய் பங்களா, கிராமத்தில் சில இடங்கள், பாக்டரி கழிவு வந்து சேரும் இடங்கள் இவை எல்லாம் அதற்கு உதாரணங்கள். அந்த உரிமையாளர் குறைவான விலையில் தரத் தயாராக இருப்பார். ஆனால் நாம் தான் கவனமாக வாங்க வேண்டும்.

ஒரு இடத்தை வாங்குவதை விட முக்கியம் அதனை நாம் விற்க நினைக்கும் வேளையில் லாபத்தில் இல்லாவிட்டாலும், வாங்கிய விளைக்காகவாவது நஷ்டம் இன்றி விற்கும் வண்ணம் இருத்தல் வேண்டும்.  அது மட்டும் இல்லை; நாம் விற்கும் போது எவ்வளவு அதிகமான நபர்கள் வாங்கிட ஆர்வம் காட்டுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு  அதன் விலை கூட வாய்ப்பு உண்டு.
ஒருவரும் வராமல் நாமே தேடிச் சென்று விற்றால் அவர் சொல்வது தான் விலை. நஷ்டத்தில் விற்பதும் தவிர்க்க இயலாத ஒன்று ஆகி விடும்.

அதுபோல் தான் ஒரு பங்கினை மிகக் குறைவான  விலையில் வாங்கினால் மட்டும் போதாது, திரும்ப நாம் விற்கும் போதும்,அதனை வாங்கிட அதிகமான எண்ணிக்கையில் நபர்கள் இருத்தல் வேண்டும். நாம் 100 பங்கு விற்க விழைகையில் 50 நபர்கள் மட்டுமே வாங்கிடத் தயாராக இருந்தால் எப்படி இருக்கும்? அது போல் தான் இதுவும். 

நீங்கள்  ஆயிரம் கிலோ காய்கறி விற்க நினைத்தால் அவ்வளவு கூட்டம் வருகிற சந்தைக்குத் தான் செல்ல வேண்டும்.  அதாவது எங்கு அதிகம் வால்யூம் இருக்கிறதோ, அங்குதான் அதிகம் வியாபாரம் ஆகும் அல்லவா? அது போல்தான் இதுவும்.

3. பங்குகள் வாங்கும் போதும் அதிக எண்ணிக்கையில் வால்யூம் உள்ள  நிருவனங்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். குறைந்த பட்சம்  50000 வால்யுமாவது இருக்க வேண்டும். இந்த அளவு கூட மிக மிகக் குறைவு என்பதனை மறக்கக் கூடாது.  நீங்கள் தேர்ந்து எடுக்கும்  நிறுவனங்கள் NIFTY, NIFTY JUNIOR, NIFTY MIDCAP, CNX IT,BANK NIFTY,CNX INFRA,CNX METAL, CNX AUTO,CNX MEDIA...ETC.  போன்றவைகளில் இருந்தால் கூடுதல் சிறப்பு. எனினும் நல்ல வால்யூம் இருக்கும் பட்சத்தில் வேறு சில நிறுவனங்களையும் தேர்ந்து எடுக்கலாம்.
                           
                                                                                                                        தொடரும்.........

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.