13 November 2014

பங்கிலும் நீதான் கிங்கு......4

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.


இதுவரை நாம் கண்டது :

1. PE RATIO
2. SHARE HOLDING PETTERN ( SHP )
3. VOLUME

மேலே சொன்ன விசயங்களை நன்கு புரியும் வரை படியுங்கள் . பங்குச் சந்தை என்பது ஒரு தொழில். சும்மா பணம் காய்க்கும் மரம் இல்லை.  சில கட்டுப்பாடுகளும், ஒழுங்குகளும் இருந்தால் மட்டுமே பணம் பண்ண இயலும்.
இந்தத் தளத்தில் உள்ள அனைத்துப் பதிவுகளையும் நன்கு புரியும் படிப் படித்து கட்டாயம் வணிகத்தில் பயன் படுத்துங்கள். விலை மதிப்பில்லாதவைகள்.

நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போகிறீர்கள் , அதுவும் ஹார்ட் சம்பந்தமானது என்று வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பெரிய ஹாஸ்பிட்டல் செல்கிறீர்கள் , அடிக்கடி செக் அப் செய்யச் செல்வதால் சீப் டாக்டர் நன்கு அறிமுகம் ஆகி விட்டார். உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய நாள் குறித்தாகி விட்டது. அந்த நாளன்று எல்லாம் தயார்,நீங்களும் ரெடி, பணம் எல்லாம் லட்சக் கணக்கில் கட்டியாகி விட்டது. உங்களை அட்மிட் செய்தாகி விட்டார்கள். அறுவை சிகிச்சை செய்யும் முன்னர் அந்த சீப் டாக்டர் வந்து ( பல அறுவை சிகிச்சை செய்து பெயர் பெற்ற மருத்துவர் ) நான் அவசர மாகச் செல்ல வேண்டி இருப்பதால் என்னுடைய அசிஸ்டன்ட் உங்களுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்கிறார் என்று உங்களிடம் சொல்கிறார். நீங்களும் அரை குறை மனதுடன் சரி என்கிறீர்கள். அவர் அதோடு நிறுத்தாமல் நீங்கள் தான் அவரின் முதலாவது  நோயாளி என்று வேறு சொல்கிறார்.

உங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை, அவர் அதோடு நிறுத்தாமல், அவர் கண்டிப்பாக இந்த அறுவை சிகிச்சையினை நல்ல முறையில் செய்வார் என்று நினைக்கிறேன், பார்க்கலாம் என்று வேறு சொல்கிறார். நீங்களோ பெட்டில் இருந்து இரங்கி ஓடுகிறீர்கள், டாக்டர் உங்கள் பின்னாலேயே ஓடி வந்து, ஒரு வேலை உங்களுக்கு ஏதாவது ஆகி விட்டால் ஆபரேஷன் ப்ரீ, காசே தர வேண்டாம் என்கிறார்.

உங்களுக்கு வேர்த்துக் கொட்டுமா? இல்லையா ? உங்களுக்கு எப்படி இருக்கும்? இருவரும் டாக்டர் தான் ... அவர் இரண்டாவது டாக்டருக்குச் சொன்ன அனைத்து விசயங்களும் அவருக்கும் பொருந்தும். ஆனால் நாம் முதல் டாக்டர் என்றால் சரி என்கிறோம்.இரண்டவது நபர் என்றால் ஆபரேஷன் வேண்டாம் என்கிறோம்.

இருவருக்கும் இருக்கின்ற ஒரே ஒரு வித்தியாசம் ஒருவர் அனுபவம் உள்ளவர், மற்றவர் அனுபவம் இல்லாதவர். அது போல்தான் நிறுவனங்களும் புதிய நிறுவனம், அனுபவம் உள்ள நிறுவனம் என்ற இரு வகை உண்டு. புது மருத்துவர் என்பதால் நன்றாக ஆபரேஷன் செய்ய மாட்டார் என்று அர்த்தம் இல்லை. ஆனால் நாம் அவரிடம் நம் உடம்பைக் கொடுக்க மாட்டோம் அல்லவா?

4.அதுபோல் தான் ஒரு நிறுவனம் குறைந்த பட்சம் 25 வருட அனுபவ மாவது கட்டாயம் இருக்க வேண்டும்.ஏன் எனில் நீண்ட கால அனுபவம் இருந்தால் தான் பல ஏற்ற இறக்கங்களிலும் நிறுவனம்,  நல்ல அனுபவம் பெற்ற தாக இருக்கும்.  நீண்ட கால அனுபவம் உள்ள நிறுவனம் உள்ள நிறுவனம் நல்ல ஒரு தலைமையின் கீழ் செயல்பட வாய்ப்பு அதிகம் உண்டு. நிறுவன லாபம் ஒரே சீராகவும் இருக்க வாய்ப்பு உண்டு. உதாரண மாக  SBI 1955  இல் நிறுவப் பட்ட ஒரு நிறுவனம் ஆகும். புயல் மழை காற்று அனைத்தையும் கண்ட மரத்தின் வேர் தான் பூமிக்கு மிக ஆழமாகச் சென்று இருக்கும் என்பது மறுக்க முடியாதது.

அது போல் அந்த நிறுவனத்தினை தொடங்கிய, இயக்குனர்களும் நல்ல அனுபவ சாலிகளாக மாறி இருப்பார்கள். பல போட்டியாளர்களைச் சாமாளித்த அனுபவமும் அவர்களிடம் இருக்கும். நிறுவன இயக்குனர்களின்  தகவல் பற்றியும் அறிந்து கொள்வது கூடுதல் சிறப்பு. இதனையே நாம் நிறுவனத் தகவல் (COMPANY INFO ) என்ற பிரிவின் கீழ் பார்க்கிறோம். 25 வருட அனுபவம் இல்லாத நிறுவனத்தைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. நீங்கள் வட்டிக்கு கடன் கொடுத்தால் எப்படியோ, நீங்கள் முதலீடு என்பதை விட கடன் கொடுப்பதாக நினைத்து முதலீடு செய்ய வேண்டும். சாதாரணக் கடன் என்றாலும் அவன் தர வில்லை என்றாலும் துண்டைப் போட்டு வாங்கி விடலாம். ஆனால் நஷ்டம் வந்தாலும் பரவா இல்லை, கடனைத் தர வேண்டாம் என்பது போன்றது தான் இது. எனவே கூடுதல் கவனம் தேவை.

பார பட்சம் பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும். அடிப்படையில் ஆட்டம் கண்ட நிறுவனங்களை தெரிவு செய்யாதீர்கள். வாரன் பப்பாட் அதிகம் இந்த விசயத்தில்  கவனமாக இருப்பாராம். அவர் MICROSOFT நிறுவனப் பங்குகளைக் கூட இது வரை வாங்கிய தில்லை என்றால், நான் சொல்ல வருவது புரிகிறதா? யார் என்ன சொன்னாலும் அடிப்படையில் பொருந்தாத விசயமாக இருந்தால் தூக்கித் தூரப் போட்டு விடுங்கள். யார் வாங்கினாலும் வாங்கி விட்டுப் போகட்டும். அதிகப் படியானோர்  பங்குச் சந்தையில் என்ன செய்கிறார்களோ, அதனை நீங்களும் எப்பொழுது செய்யாமல் இருகிரீர்களோ, அப்பொழுதுதான் நீங்கள் லாபம் ஈட்ட இயலும். ஏன் எனில்  அந்த அதிகப் படியானோர் இதுவரை லாபம் சம்பாதித்ததே இல்லை.
எந்த ஒரு தொழிலும் வெற்றி அடைவோர் என்ன செய்கிறார்களோ; அதைச் செய்யாமல் வெற்றி மட்டும் வர வேண்டும் என்றால் எப்படி வரும்.

                                                                                                                                தொடரும்.........

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.