09 November 2014

பங்கிலும் நீதான் கிங்கு....1

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.

பங்குச் சந்தையிலும் பணம் பண்ண வழிகள்:

எந்தச் சந்தையாக இருந்தாலும் பணம் பண்ணுவதற்கு சில மாறாத வழிமுறைகள் இருக்கின்றன. அது மட்டும் இல்லை உலகில் உள்ள அணைத்து வர்த்தக நடை முறைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உள்ளவைதான். முக்கியமான சில விசயங்களைக் கணக்கில் கொண்டு பங்கிலும் பணம் பண்ண வழிமுறைகள் இதோ:

1. பங்குச் சந்தைக்கு ஊக வணிகம் என்ற ஒரு பெயரும் உண்டு. அதாவது வரும் என்று நினைத்து வாங்குவது அல்லது விற்பது. ஒரு உதாரணம் சொன்னால் உங்களால் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

ஒரு இடத்தில்  கல்லுரி அல்லது பேருந்து நிலையம் வர இருக்கிறது என்ற தகவல் வந்ததும், அந்த இடம், அதன் உண்மையான சந்தை மதிப்பினை விட பல மடங்கு விலை ஏறும் அல்லவா? நாமும் வாங்கிப் போட்டால் நல்ல லாபம் பார்த்து விடலாம் என்ற ஆசையில் அதிக விலை கொடுத்து வாங்கி விடுவோம். அதாவது 1 லட்சம் மதிப்புள்ள இடத்தை 5 லட்சம் என்றாலும் வாங்கி விடுவோம். நீங்கள் நினைத்தது போல் பேருந்து நிலையம் வந்தால், 10 - 15  லட்சத்திற்கு கூட விற்று விடலாம். ஒரு வேலை வர வில்லை எனில் உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.  இது தான் ஊக வணிகம் என்பது. இந்த முறையில் தான் 99.99%  முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைகின்றனர்.

இதனை எப்படி தவிர்ப்பது?

ஒரு இடத்தை அதன் சந்தை மதிப்பினை விட மிகக் குறைவான விலைக்கு வாங்குவதே புத்திசாலித்தனம். உதாரணமாக சந்தை மதிப்பு 1 லட்சம் உள்ள இடத்தை 50000 - 75000  என்று வாங்கினால் தான், சந்தை மதிப்பில் விற்றால் கூட லாபத்தோடு விற்க இயலும். அட போங்க பாஸ்......இந்தக் காலத்துல யாரு பாஸ் வாங்கின விலையினை விட கம்மியா விக்கிறான்? எல்லாம் உசார் ஆயிட்டாங்க, எவனாவது கஷ்டத்துக்கு விற்றால் தான் உண்டு, அதுவும் சில நேரம் போட்டிக்கு ஆள் வந்தால் அதுவும் விலை கூடிப் போகிறது என்கிறீர்களா? அதுவும் உண்மைதான்.

உங்கள் ஆதங்கத்தைப் போக்கத் தான் பங்கு வியாபாரம் இருக்கிறது. பணம் எதில் வந்தால் என்ன? இடம் என்றால் வில்லங்கம் எதுவும் இருக்கக் கூடாது, பங்கு என்றால் பெரிய ரிஸ்க்  எதுவும் இருக்கக் கூடாது.இது தான் முக்கியம்.
ஒரு இடம் சந்தை மதிப்பினை விட மிகவும் குறைவாகக் கிடைப்பது என்பது இன்று மிக மிக அறிதான காரியம். ஆனால் பங்குச் சந்தையில் நல்ல தரமான பங்குகள் மிக மிக குறைவான மதிப்பில் கிடைக்கின்றன. இது காலம் காலமாக நடக்கிற விஷயம் தான். அவ்வகையான பங்குகள் கட்டாயம் நல்ல விலைக்குச் செல்லும், இடம் கொடுக்கின்ற மதிப்பினை விட பல மடங்கு லாபம் தரப் போகின்ற பங்குகள் மிக மலிவான விலையில் இருக்கின்றன. அதனைக் கவனமாக நாம் தேர்ந்து எடுப்பதில் தான் அந்த ரகசியம் இருக்கிறது.

எப்படி அதிக விலைக்குச் செல்லும் பங்குகளை - விலை குறைவாக வாங்குவது.?

இது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. வாறன் பப்பாட் (WARREN BUFFET )  போன்றோர் கடைபிடித்த மிக சாதாரண விஷயம் தான் இது.
PE RATIO -  என்ற ரகசியம் தான் அது. PE RATIO  என்பது CMP ( CURRENT MARKET PRICE ) வகுத்தல் EPS ( EARING PER SHARE ).

ஒரு உதாரணம்:
 SBI  வங்கியின் தற்போதைய சந்தை விலை (CMP)                            = RS . 1502.10

SBI  வங்கியின் தற்போதைய ஒரு பங்கு வருமானம் (EPS)              =  RS . 188.93

PE RATIO = 1502 .10 / 188.93  =  7.95.

வாங்கலாமா?

EPS  ஐ விட PE RATIO  குறைவாக இருந்தால் வாங்கலாம். 

 EPS  ஐ விட PE RATIO  அதிகமாக  இருந்தால் கட்டயம் வாங்கக் கூடாது. அது நல்ல விலைக்கு போகலாம்  என்ற ஊகத்தின் அடிப்படையில் வாங்குவது போல்தான்.

சற்று விரிவாகக் காண்போம்.

 ஒரு பங்கு விலை 100,  EPS 10 எனில்  PE RATIO  100 / 10 = 10.  PE RATIO  EPS  சம விலையில் இருப்பதால் தவிர்க்கலாம்.

ஒரு பங்கு விலை 80, EPS 10  எனில் PE RATIO 80 / 10 = 8 . PE RATIO EPS ஐ விடக் குறைவான விலையில் இருப்பதால் வாங்கலாம்.

பின் குறிப்புகள் :
 80  ரூபாயில் வாங்கினால் கட்டாயம் விலை கூடுமா என்றால்,  EPS  ஐ விட  PE RATIO 20%  குறைவாக இருப்பதால் விலை 20 சதவீதமாவது கூட வாய்ப்பு உண்டு.
60 ரூபாயில் வாங்கினால் 40%  விலை கூட வாய்ப்பு உண்டு.
PE RATIO  என்பது ஒரு பங்கினை வாங்க நாம் பயன் படுத்தும் அடிப்படையான விசயங்களில் இதுவும் ஒன்று.

உதரணமாக 2013 மே இல்  SBI  இன் அதிக  விலை RS. 2472.   2013 செப்டம்பர் மாத  EPS  RS. 34.72 .    அப்போதைய PE RATIO 2472 / 34.72  = 71.19
  PE RATIO, EPS  ஐ விட இரண்டு மடங்கு அதிகம் அன்று நாம் வாங்கி இருந்தால், இன்று நமது நஷ்டம் 2472 - 1502 = 970 ரூபாய்.

ஆனால் இன்று PE RATIO , EPS  ஐ விட  76 % சதவீதம் குறைவு. எனவே நாம் வாங்க சரியான நேரம் என்பதின் அறிகுறிதான் இது.  ஒரு பங்கினை 2472  இல் வாங்கி ஆவரேஜ் செய்வதை விட  1502  இல் வாங்கி ஆவரேஜ் செய்தல் என்பது அதிக லாபம் அல்லவா?

நாம் இன்னும் சற்று ரிஸ்க் குறை வாக வணிகம் செய்ய வேண்டுமெனில்

 PE RATIO / EPS  * 100

7.95 / 188. 93 * 100 = 4.20    இருபத்தைந்துக்கு கீழ் இருபது மிக நன்று.  அதாவது இன்னும்  75 %  விலை கூட வாய்ப்பு உண்டு என்று அர்த்தம்.

SBI  இப்பொழுது 1502 அதன்  75%   எனில் 1502 * 75 / 100 = 1126 .
1502 + 1126 = 2628.  என்ற விலை வரையிலாவது செல்ல வாய்ப்பு உண்டு. ஆனால் ஏற்கனவே 3515  வரை சென்ற ஒரு பங்குதான் இது என்பது குறிப்பிடத் தக்கது. 3515 கும் வாங்கி விலை ஏறும் என்று நம்பிக் காத்திருபவரை விட , 1502 க்கு வாங்கி காத்திருக்கும் நீங்கள் நல்ல முதலீட்டாளர் தான்.

இப்பொழுது ஒரு கேள்வி வரலாம். 3515 க்கு வாங்கிய பங்கு 6000  சென்று இருந்தால்? நல்ல நிறுவனம், நல்ல நிருவாகம், 1955  இல் ஆரம்பித்த நிறுவனம் நல்ல அனுபவம் , டிவிடென்ட் நன்றாகத் தருகிறார்கள் இப்படி எல்லாம் ஊகத்தின் அடிப்படையில் தான் 3515 க்கும் வாங்கியவர் நினைத்து இருப்பார். நான் ஏற்கனவே சொன்னது தான். ஊகம் நடந்தால் நல்லது, நடக்க விட்டால் அதோ கதி தான். ஆனால் PE RATIO  நன்றாக உள்ள ஒரு பங்கினை வாங்கினால் நம் நினைப்பது நடந்தாலும் அதிக லாபம், நடக்கா விட்டாலும் மிக மிக குறைவான நஷ்டம்.

ஒரு பேருந்தை விரட்டிச் செல்கிறீர்கள், பிடித்த பாடில்லை, அடுத்தவர்கள் அசிங்கமாக நினைப்பார்கள் என்று இன்னும் வேகமாக ஓடு கிறீர்கள், எப்படியோ தொங்கிப் பிடித்து ஏறி விட்டீர்கள். ஆனால் நீங்கள் நினைத்தது போல் இடம் கிடைக்குமா?ஒரு வேளை ஏறுகிற முயற்சியில் விழுந்தால் என்ன ஆவது? ஆனால் பொறுமையாக அடுத்த பேருந்து வரும் வரை காத்து இருந்தால் இடம் கிடைக்கா விட்டாலும், விழுந்து காயம் காண்பதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை அல்லவா? அது போல் தான்  PE RATIO  பார்த்து ஒரு பங்கினை வாங்குவது. ஒரு பேருந்து போனால் என்ன ? அடுத்தது கட்டாயம் வரும். இப்பொழுது வங்கிப் பங்குகள் நல்ல  PE RATIO  வில் இருக்கின்றன.சென்ற வருடம் IT, PHARMA பங்குகள் நல்ல PE RATIO  வில் இருந்து இந்த வருடம் வரை சில பங்குகள்  60- 75 % கூட வருமானம் தந்து இருக்கின்றன. நான் எல்லாப் பதிவு களிலும்  சொல்வது தான். பொறுமை மற்றும் நிதானமான மனநிலை இல்லாதவர்கள் வர்த்தகத்தைத் தவிர்ப்பது நல்லது என்று.

ஓரளவு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். என்னதான் நல்ல நிறுவனம் என்றாலும் அதன் சரியான விலையில்  வாங்குங்கள். ஓடுகிற மார்கெட்டை விரட்டி விரட்டி வாங்காதீர்கள்.  SBI  நல்ல பங்கு தான்  3515  என்ற உச்ச விலையில் வாங்கி இருந்தால் இன்று மிகப் பெரிய நஷ்டம் தான்.  நல்ல இடம், அதே சமயம் சந்தை விலையினை விட குறைவான விலை, இது தான்  லாப மீட்டலின் அடிப்படை.

                                                                                                                                         தொடரும்.....

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, ஒரு வாரம் நடைபெறும். முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.