26 May 2014

ஆறே மாதத்தில் இரட்டிப்பு


பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.



ஆறே மாதத்தில் இரட்டிப்பு  - கதையல்ல நிஜம் 

ஆம்... நான் சொல்வது முற்றிலும் நிஜம்.  ஆனால் இந்தப் பகுதி முழுதும் நீங்கள் படிக்காமல், தலைப்பை மட்டும் வைத்து கண்மூடித் தனமாக நம்பினால் நான் பொறுப்பு அல்ல. 

நான் உங்களிடம் ஒரு விதை தந்தால், நீங்கள் இரண்டு விதைகளாகத்  திரும்ப என்னிடம் தர உங்களுக்கு எவ்வளவு நாட்கள் தேவைப்படும்? உதாரணமாக ஒரு மாவிதையினை எடுத்துக் கொள்வோம். சற்று ஆழமாகச்  சிந்திப்போம். ஒரே ஒரு விதை, மிகுந்த கவனமாகப் பராமரிக்க வேண்டும். விதையினை நிலத்தில் முளைக்கப் போட்டு துளிர்  விடும் நேரம் மிக மிகக்  கவனம் தேவை. ஒரு சிறு எறும்பு கூட அந்த துளிரான மாங்கன்றினை சேதப் படுத்தக் கூடும். கவனம் தேவை,மிக மிகக்  கவனம் தேவை.

நாட்கள்  சில மாதங்களானால், ஒரே ஒரு விதை சிறிய கன்று. வேலி அடைத்து மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டிய காலம் அது . ஆடுகள் கடித்துத்  தின்ன மிக அதிக வாய்ப்பு உண்டு. வேலி ,உரம், நீர் போன்ற ஏற்பாடுகளின் நேரம் அது தான்.

இப்படியே மாதங்கள்  சில வருடங்களானால், அந்த மாங்கன்று  ஒரு மரமாக மாறி இருக்கும், வேலி  தேவை இல்லை, உரம், நீர் கூட அடிக்கடி தேவை இல்லை. எறும்பு இல்லை, ஒரு எருமை கூட அந்த மரத்தில் மோதினாலும், மரத்திற்கு ஒரு சேதமும் நிகழாது. பூபூத்து, காயாகி, கனியாகி விடும். என்ன ஒரு ஆனந்தத் தருணம் அது.  இப்பொழுது நீங்கள் என்னிடம் இரண்டு விதைகளாக திரும்பத்  தந்து விடலாம் அல்லவா? ஒன்று இரண்டாகத் தோரயமாக ஒரு ஐந்து வருடங்கள் என வைத்துக் கொள்வோம்.

அப்பாடா ...... உங்களுக்கு ஒரு  விதையினை   இரண்டு விதைகளாக என்னிடம்  தர ஐந்து  வருடங்கள் ஆகி இருக்கிறது. ஆனால் அடுத்த விதையினை என்னிடம் தர நீங்கள் மறுபடி ஐந்து வருடம் காத்து  இருக்க வேண்டாம். ஒரு வருடம் காத்து இருந்தால் போதும் அல்லவா? வருடம் வருடம் விதை தரும். இப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், மறுபடி ஒரு விதையினை எடுத்து மீண்டுமாக நட்டு வைத்து மரமாக்க  விரும்புகிறீர்கள். அது விதை தர மீண்டும் ஒரு ஐந்து வருடம். முதல் மரம் தந்தது வருடம் ஒரு விதை என்றால், 10 வது  வருடத்தில் இருந்து வருடம் வருடம் இரண்டு விதைகள் .

2000 வருடம் முதல் 2020 வரை - 20  ஆண்டுகள்  ஒப்பீடு:

மரம்                                கனி தருதல்                                                கனிகள்  எண்ணிக்கை 

1 வது மரம்-2000        (2000+ 5 ) 2005 ஆண்டு முதல்
                                                           2020 ஆண்டு வரை   -                               16

2 வது மரம் -2005       (2005+5 )  2010     "               "             -                             11

3 வது மரம் - 2006      (2006+5)    2011     "               "            -                             10

5 வது மரம் - 2007     (2007+5)     2012    "               "            -                              09

6 வது மரம் - 2008     (2008+5)     2013   "               "             -                              08

7 வது மரம் - 2009     (2009+5)     2014    "               "            -                              07

8 வது மரம் - 2010     (2010+5)     2015    "               "            -                              06

9 வது மரம் - 2011     (2011+5)     2016   "               "             -                              05

10 வது மரம் - 2012   (2012+5)    2017    "               "             -                              04

11 வது மரம் - 2013     (2013+5)    2018    "              "            -                              03

12 வது மரம் - 2014     (2014+5)    2019    "               "            -                             02

13 வது மரம் - 2015     (2015+5)    2020    "               "           -                               01  

14 வது மரம் - 2016     (2016+5)    2021   "               "             -                   

15 வது மரம் - 2017    (2007+5)    2012    "               "              -

16 வது மரம் - 2018    (2007+5)    2012    "               "             -

17 வது மரம் - 2019     (2007+5)    2012    "               "            -

18 வது மரம் - 2020    (2007+5)    2012    "               "              -

மொத்தம் 82 கனிகள் 20 வருடத்தில் . தோராயமாக,   82 கனிகள் (வகுத்தல் ) /  20 ஆண்டுகள்   =  வருடத்திற்கு  4 கனிகள். அதாவது மூன்று மாதத்திற்கு  1 கனி. சில மரம் காய்க்காமல் போகலாம். எனவே 2 தள்ளுபடி. எனவே  6 மாதத்திற்கு 1 கனி. நான் தந்த ஒரு விதை ஒவ்வொரு ஆறு மாதமும் இரட்டிப்பு .

நம்ம விஷயம் :

வருடம் வருடம், இரண்டு இரண்டு விதைகள் போட்டால்? இதனையே மீண்டும் மீண்டும் 50 வருடம் செய்தால்?  இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? பணக்காரர் ஏன் மேலும் மேலும் பணக்காரர் ஆகிறார் என்று.?

உலகில் உள்ள எட்டாவது அதிசயம் என்ன தெரியுமா? அது தான் கூட்டு  வட்டி. 

நேரம் ( நல்ல நேரம் கெட்ட  நேரம் அல்ல ), நாம் கொடுக்கும் கால அளவு +  நம் முதலீடு +  வட்டி அல்லது நாம்  டிரேடில் எடுக்கும் லாபம் . இது மூன்றும் சேர்ந்த கலவை தான் அந்த எட்டாவது  உலக அதிசயம்.

நான் தந்த முதல் விதை தான் நமது டிரெடில் முதலீடு செய்யும் தொகை. ஒரே ஒரு விதை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக  மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக  மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக  மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக  மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகக் கவனம் தேவை. ( தவறுதலாக டைப்  செய்ய வில்லை இதை விட அதிகமான மிகக் கவனம் தேவை)

மறுபடி கூட நம் முதல் தொகையினை ஏற்பாடு செய்து முதலீடு செய்யலாம். ஆனால் இழந்த காலம் திரும்ப வருமா? 2000 இல் விதை போட்டு 2004 இல் மரம் பட்டுப் போனால் ( அதாவது நம் பணம் எல்லாம் - லாபமும் சேர்த்து டிரேடில்  லாஸ் வந்தால்) மறுபடி 2004 இல் விதை போட்டு காய்க்க 2009 ஆகி விடும். எனவே காலம் தான் மிகப் பெரிய முதலீட்டுக் கருவி. 

ஆனால் 99% சதவீத டிரேடர்கள் விதை போட்ட சில மாதங்களில் கனி பறிக்க வேண்டும் (இரட்டிப்பு) என்ற பேராசை என்னும் ஆவலில் சிக்கி விதை கன்றாகக்  கூட வளருவதும் வளர விடுவதும்   இல்லை.  

எப்படி டிரேடு செய்ய வேண்டும்? செய்யக் கூடாது?

1.நாம் முதலீடு செய்கின்ற தொகைக்கு 30% மேல் ரிஸ்க்  கூடவே கூடாது. 

2.  நம் முதல் தொகை (முதல் தடவை) இரண்டு மடங்கு  ஆக 3-5 வருடமாவது காத்திருக்க வேண்டும்.  மாதம் 2.5 % என்பதே நல்ல  வருமானம் தான். ( மாதம் 10% 20%30% எடுக்க முடியும் ஆனால்  கண்டிப்பாக போதுமான இடைவெளி தேவை) மேலே சொன்ன மரம் உதாரணம்  போல.

3. நாட்கள் செல்லச் செல்ல நமது லாபத்தில் மட்டுமே டிரேடு செய்யும் மனநிலை வர வேண்டும். அசல் + எடுத்த லாபம் எல்லாம் சேர்த்து ரிஸ்க் எடுக்கக் கூடவே கூடாது. ஆண்டவனால் கூட உங்களைக் காப்பாற்ற முடியாது.

4. ஒரு தரம் நீங்கள் உங்கள் முதலீட்டை பொறுமையாக மிகக் கவனமாக (எவ்வளவு நாட்கள் என்பது முக்கியம் இல்லை)இரட்டிப்பு செய்து விட்டால், எல்லா விதமமான நெளிவு சுளிவுகளும் நன்கு கற்று அறிந்த ஒரு டிரேடராக நீங்கள் நிச்சயமாக மாறி இருப்பீர்கள். ஏன் எனில் உலக அளவில் 5% டிரேடர்கள் கூட தங்கள் அசல் தொகையினை கூடக் காப்பாற்றுவது இல்லை.

5.ஸ்திரமான மனநிலை ( St rong Trading Mindset ) அவசியம்.


6. எடுத்த லாபத்தில் 30%  மட்டும் தான் மறுபடி முதலீடு செய்ய வேண்டும்.  70% லாபம் ரிஸ்க் இல்லாத முதலீடாக முதலீடு செய்ய  வேண்டும். FIXED DEPOSIT ,GOLD ,LAND  என்பது போல.

7. அரைகுறை அறிவு கொண்டு செய்யும் ஆராய்ச்சி உங்கள் முதலுக்கே மோசம் செய்து விடும்.

8. நீங்கள் பொறுமையில்  எருமையைக் கூட மிஞ்சி விட வேண்டும். சரியான வாங்குமிடம், விற்குமிடம் வரும் வரை அவசரம் கூடவே கூடாது. மார்க்கெட் செல்ல வேண்டிய இடத்திற்கு கட்டாயம் செல்லும். எப்பொழுது செல்லும் என்பதை நம்மால் துல்லியமாகக் கணிக்க முடியாது, ஆனால் செல்லும் வரை நம்மால் காத்திருக்க முடியும். நம்மால் முடிந்ததை நாம் சரியாகச் செய்ய வேண்டும்.  சந்தை செய்ய வேண்டியதை சந்தை செய்யும்.

9. அவசரக் காரர்களின் கைகளில் உள்ள பணத்தை பொறுமை சாலிகளிடம் கொண்டு சேர்க்கும் மைதானம் தான் பங்குச் சந்தை, கரன்சி (போரெக்ஸ் மார்க்கெட் ) பொருள் வணிகம் எல்லாம்.

10. கடன் வாங்கியோ, அடமானம் வைத்தோ,எதிர்காலத் தேவைக்கான ஒன்றினை முதலீடாக  வைத்தோ டிரேடு கூடவே கூடாது. மிகக் குறைந்த  ரூபாயில் வணிகம் செய்யலாம், குறைந்த தொகையில் தான் வணிகம் செய்ய வேண்டும் . அதில் லாபம் எடுத்து எடுத்து தான்  நமது முதல் தொகையினைப்  பெருக்கிக் கொள்ள வேண்டும். இது தான் ஆரோக்கியமான வணிக முறை. ப்ரோக்கர் தரும் அதிக மார்ஷின் ஆபத்தில் தான் முடியும்.


ஒவ்வொரு ஆறு மாதமும் உங்கள் முதலீட்டைக் கண்டிப்பாக நீங்களும் இரட்டிப்பு செய்யலாம்.  ஆனால் கடந்த ஆறு ஏழு  வருடங்ககளில் அல்லது  வரப் போகின்ற அடுத்த ஆறு ஏழு  ஆண்டுகளில் நீங்கள்  எப்படி டிரேடு செய்தீர்கள் அல்லது செய்வீர்கள்  என்பதைப் பொருத்து மட்டுமே. 



பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.