25 April 2014

பங்குச் சந்தை - மாறவே மாறாத உண்மைகள்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:

1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. 

2.  எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம்  பண்ணலாம் என்பவர்கள்  உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை  வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.

3. எங்க இண்டிகேட்டர் நூறு சதவீதம் லாபம் தரும் என்பதும் ஆயிரம் சதவீதம் பொய். மார்கெட் பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய இண்டிகேட்டர் அல்ல. அதாவது ஒரு இண்டிகேட்டர் பை காட்டினாள் பை பக்கமோ,அல்லது ஒரு இண்டிகேட்டர் செல் காட்டுவதால் மார்கெட் செல் பக்கமோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு விஷயம் துல்லியமாக  இருந்தால் அந்த விசயத்திற்கு அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் காபிரைட் வாங்கி இருக்கும். நூறு ரூபாய் போட்டால் தினம் நூறு ரூபாய் கிடைக்கும் என்றால், எல்லா நிறுவனங்களும் முதலீட்டு நிர்வாகிகளை (fund managers ) வீட்டுக்கு அனுப்பி இருக்கும். அந்த இண்டிகேட்டர் அல்லது சாப்ட்வேர் மட்டும் போதுமே. தயவு செய்து யாரும் கண்டுபிடிசுடாதீங்காப்பா, எங்களுக்கு வேலை போய்டும். ஹா,ஹா,ஹா....  ஒரு இண்டிகேட்டர் அல்லது எதுவும் லாபமும் தரும் நஷ்டமும் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

4. தினமும் கட்டாயம்  இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல.   ஓவர்  ஆல் நீங்கள்  எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .

5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள்.  காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை. 

6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.

7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

8. வெற்றியாளர்கள் நாளுக்கு ஒரு இண்டிகேட்டர், நாளுக்கு ஒரு டிரேடிங் சிஸ்டம் பாலோ செய்வது இல்லை.

9. ப்ரோக்கர் தரும் அதிகமான மார்ஸின்  ஆபத்தானது. வெற்றியாளர்கள் அவர்களின் முதல் தொகையினை வைத்து மட்டுமே வர்த்தகம் செய்வார்கள், பெரும் பாலும் அவர்கள்  ப்ரோக்கர் தரும் மார்ஸின் பயன் படுத்துவது இல்லை. ஏன் எனில் உங்களுக்கு லாபம்  வந்தாலும், நஷ்டம் வந்தாலும் ப்ரோகருக்கு கட்டாயம் கமிசன் வந்து விடும். 

10.  நூறு ரூபாயில் லாபம் பார்க்க இயலாதவர்கள் நூறு கோடி கொடுத்தாலும் லாபம் பார்க்க இயலாது.

11. சரியான டிரேடிங் மனநிலை ( trading psychology)  இல்லாதவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லை.

12. பங்குச் சந்தை பணம் காய்க்கும் மரம் அல்ல. ஒரு நியாமான தொழிலில் என்ன வருமானம் கிடைக்குமோ அதை விட அதிகம் எதிர்பார்த்து பங்கில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது.

13.  நீங்கள் கற்றுக் கொள்வதை எல்லாம் கொட்ட பங்குச் சந்தை குப்பைத் தொட்டு அல்ல. தினமும் தெரிந்து கொள்ளுங்கள், ஆனால் தினமும் புதிது புதிதாக வணிக முறைகளைக் கையாள வேண்டாம்.
A GOOD ANALYST CAN NOT BE A GOOD TRADER -
A GOOD TRADER CAN NOT BE A GOOD ANALYST.

14. இண்டிகேட்டர், முதலீடு நிர்வாகம், டெக்னிகல், வர்த்தக மனநிலை , மாறாத வர்த்தகத் திட்டம் எல்லாம் கலந்த கலவைதான் வெற்றி என்பது. ஒன்றை மட்டும் வைத்து வெற்றி என்பது இயலாது. அளவுகளில் மாற்றம் உண்டு, ஆனால் அவசியம். சாம்பருக்கு காய், காரம், உப்பு ,தண்ணீர் எனபதைப் போல.

15. நேற்று லாபம் வந்தது போல் இன்றும் ,அவருக்கு லாபம் வந்து விட்டதால் உங்களுக்கும் லாபம் வர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ப்ரோக்கர் அல்ல. 

16. மார்க்கெட் சரிகின்ற பொழுது நீங்கள் மிக்க மகிழ்ச்சி  அடைந்தால் , நீங்கள் தான் சரியான முதலீட்டாளர். நேற்று நூறு ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருள் அதே தரத்துடன் இன்று 50 ரூபாய்க்கு கிடைத்தால், நீங்கள் மகிழ்ச்சி தான் அடைய வேண்டும்.  ஆனால் நீங்கள் எப்படி, எந்த வகையில் உங்கள் பணத்தினை நிர்வாகம் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து. 

17. உங்களுக்கு நஷ்டமாகின்ற ஒரு தொகை யாரோ ஒருவருக்கு அல்லது சிலரருக்கு லாபமாக போகிறது என்பதே உண்மை. லாபம் அடைகிறவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நீங்களும் செய்யாமல், லாபம் மட்டும் வர வேண்டும் என்றால் எப்படி வரும்? 

18. கடவுளிடம் வேண்டாதீர்கள். நீங்கள்  மேலே செல்ல வேண்டும் என்று வேண்டுகிற அதே நேரம் யாரோ ஒருவர் அதே கடவுளிடம் கீழே செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருப்பார். பாவம் கடவுள் என்ன செய்வார்? அவர் கன்பீஸ் ஆக மாட்டாரு?  சின்னப் புள்ளத் தனமால இருக்கு. இங்கு செய்யும் தொழில் தான் தெய்வம்.

19. மாடு பத்து ரூபாய்க்கு வாங்கி, சாட்டை நூறு ரூபாய்க்கு வாங்குவதை போல, சிலர் ப்ரோக்கரேஜ் ஆயிரக் கணக்கில் இருக்கம், ஆனால் லாபம் நூற்றுக் கணக்கில் கூட இருக்காது.
தேவை இல்லாமல் இண்டிகேட்டர், வகுப்பு என விரயம் செய்ய வேண்டாம். குளத்தை விட, ஒரு புத்தகம் அதிகம் நீச்சல் கற்றுத் தர முடியாது. உங்களால் முடிந்த தொகையினைக் கொண்டு ஒரு பத்து சதவீதம் மட்டும் ரிஸ்க் எடுத்து அல்லது டெமோ அக்கௌன்ட் , பேப்பர் டிரேடிங்கில் வர்த்தகம் செய்தாலே போதுமானது. 

20. குறுகிய காலம், குறிகிய நீண்ட காலம், நீண்ட காலம் வர்த்தகம் அவசியம். இதில் ஒன்றினை  மட்டும் செய்தவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லவே இல்லை. 

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.