25 April 2014

பங்கு வணிகத்தில் ரிஸ்க் இல்லையா ?

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

நீங்கள் பங்குச் சந்தை, பொருள் வணிகம், போரெக்ஸ் வணிகம் போன்ற எந்த ஒரு வணிகத்திலும் நீங்கள் வர்த்தகம் செய்ய நினைத்து,  முதலீடு செய்த உடனே, அதாவது நீங்கள் டிரேடே செய்ய வேண்டாம், உங்கள் பணத்தை முதலீடு செய்து வைத்து இருக்கும் போதே நீங்கள் சந்திக்க வேண்டிய ரிஸ்க்குகள் தான் நான் சொல்லப் போவது எல்லாம்.

ரிஸ்க் என்பது ஒரு விபத்து போல, நடக்கலாம் இல்லை நடக்காமல் இருக்கலாம்,ஒரு வேளை  உங்களுக்கு நடக்காமல் இருக்கலாம், மற்ற ஒருவருக்கு நடக்கலாம், நடந்து இருக்கலாம்,இல்லை பின்னாளில் நடக்கலாம்,நான் சொல்லப் போகின்ற ரிஸ்க்குகள் அனைத்தும் தனியாகவோ, கூட்டாகவோ நடக்கலாம்.

நான் உங்களைப்  பயம் காட்டுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். இது போன்ற சில நிகழ்வுகளைத்  தங்களின் முதலீடுகளில் சந்தித்துப்  பணத்தை இழந்தவர்களையும், வாழ்க்கையினைத்  தொலைத்தவர்களையும் நான் கண் கூடாகக் கண்டத்தின் விளைவே இந்தப் பதிவு.

விபத்து என்பது மற்றவருக்கு நடக்கும் போது ஒரு செய்தி மட்டுமே ,நமக்கோ நம் குடும்பத்தினருக்கோ நடந்தால் தான்  அது ஒரு சம்பவம். அதுபோல் தான் முதலீடு சம்பந்தமான செயல்பாடுகளிலும், யார் என்ன சொன்னாலும் கண் மூடித் தனமாக நம்பாதீர்கள். ஒருவருக்கு லாபம் வந்ததால் உங்களுக்கும் லாபம் தான் வர வேண்டும் என்றோ, அவர் சில ரிஸ்க்குகளை  கண்டிராததால் நீங்களும் அவர் போலவே லாபம் ஈட்டலாம் என்ற முட்டாள்தனமான செயல் பாடுகளில் மிக மிக மிகக் கவனமாக இருங்கள்.



நீங்கள் முதலீடு செய்த உடன் ( நீங்கள் டிரேடே  செய்யாமல் - அதாவது உங்கள் பணத்தை டிரேடிங் அக்கௌண்டில் சும்மா வைத்து இருக்கும் போதே ) நீங்கள் சந்திக்க வேண்டிய ரிஸ்க்குகள்.

1.  நாடுகள் சம்மந்தமான ரிஸ்க். ( COUNTRY  RISK  )

2.  தொழில்நுட்பம் சம்மந்தமான ரிஸ்க். ( TECHNICAL  RISK  )

3.  தனிமனிதர் சார்ந்த ரிஸ்க்.  ( PERSONAL RISK  )


 நாடுகள் சம்மந்தமான ரிஸ்க். ( COUNTRY  RISK  )


நீங்கள் உங்கள் முதலீடுகளை இந்தியாவில் வைத்து இருக்கலாம், ஆனால் அமெரிக்காவில் இடி விழுந்தால் இந்தியாவில் இருக்கும் உங்கள் தலையில் ரத்தம்  வரும். நீங்களே நினைத்தாலும் தடுக்க முடியாது. இது தான் கண்ட்ரி ரிஸ்க் என்பது.
அது மட்டும் இல்லை மிக நெருக்கடியான சூழ்நிலைகளில் உங்கள் பணத்தினை அவர்கள் பயன் படுத்த முழு அதிகாரம் உண்டு. சில நிறுவங்களின் தலைமை அலுவலகம் ஆப் ஷோர் ( off shore )கண்ட்ரிகளில்   இருக்கும், இந்த சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இவ்வகையான நிறுவனங்கள் எந்த ஒரு நாட்டின் சட்ட திட்டத்திற்கும் உட்படாது. சில நாடுகளில் நிறுவனங்கள் ஒரு சில நாட்களில் நொடித்து விட்டதாக அனுமதி பெற்று நிறுவனம் கலைக்கப் பெரும். உங்கள் பணம் கடலில் தொலைத்த காசாகிவிடும். கவனம் தேவை. நாம் டிரேடு செய்து நஷ்டம் வருவது எல்லாம் அப்பறம் தான்.

ஒரு அரசு அனுமதி தந்த நிறுவனத்தினை, வேறொரு அரசு  அனுமதி ரத்து  செய்யலாம். திடீரென அரசின் கொள்கை (GOVERNMENT  POLICIES ) மாற்றங்கள் வரலாம். இது எல்லாம் நடக்கலாம், நடக்காமல் இருக்கலாம், இது தான் ரிஸ்க் என்பது. நடந்தால் நம் பணத்தினை எப்படி காப்பாற்றுவது ?  இதற்குத் தான் விஷயம் தெரிந்த வர்களிடம் பயிற்சி பெற்று வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது. ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தார் போல் டிரேடு செய்வதன் வாயிலாகவும், சரியான முதலீட்டு நிர்வாகம் மூலமாகவும் நாம் நம் பணத்தினைப்   பாதுகாக்க இயலும்.


தொழில்நுட்பம் சம்மந்தமான ரிஸ்க். ( TECHNICAL  RISK  )


நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் பல லட்சம் பணம் வைத்து இருக்கிறீர்கள், திடிரென வங்கி ஒரு வாரம் வேலை நிறுத்தம் செய்கிறது. உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப் பட்டாலும் உங்கள் பணத்தைப் பெற முடியாது அல்லவா? நீங்கள் டிரேடு செய்கிறீர்கள் உங்கள் ஏரியாவில் உள்ள செல்போன்  டவரில் இடி விழுந்து , சரி செய்ய ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் ஆகலாம் என்றால்? உங்கள் பணம் அமரிக்காவில் முதலீடு செய்யப் பட்டு உள்ளது, திடிரென பல இடங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல், ஒசாமா தாக்கியது போல, நீங்கள் டிரேடு செய்யவே இல்லை, உங்கள் டிரேடிங் அக்கௌண்டில் தான் பணம் இருக்கிறது, ஆனால் அமெரிக்க அரசு ஒரு மூன்று மாதம் அணைத்து நாடுகள் சம்மந்தமான எல்லா பண வரவு செலவு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தால் ? நீங்களே நினைத்தால் கூட உங்கள் பணத்தை எடுக்க முடியாது அல்லவா? இது தான் தொழில் நுட்பம் சம்மந்தமான ரிஸ்க் என்பது. 

இதுவும் நடக்கலாம், நடக்காமல் போகலாம், அல்லது என்றோ ஒரு நாள் நடக்கலாம், உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு நடக்க வில்லை என்பதற்காக, இன்று முதலீடு செய்த உங்களுக்கும் நடக்காது என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? நான் மாதம் மாதம் இவ்வளவு தருகிறேன் என்று உங்கள் நண்பரின் பணத்தினை நீங்கள் பொறுப்பு எடுத்து  முதலீடு செய்து வைத்து  இருக்கும் போதோ, அல்லது நீங்கள்  யாரோ ஒருவரின் பேச்சை நம்பி வட்டிக்குப் பணம் வாங்கி முதலீடு செய்த நேரத்திலோ இது நடந்தால், உங்கள் நிலைமை என்ன? இப்பொழுது புரிகிறதா? எவ்வளவு திறமையான முதலீட்டு நிர்வாகிகளை வைத்து இருந்தாலும், மார்கெட் ரிஸ்க் என்று எல்லா  நிறுவனங்களும் சொல்கின்றன என்று.

மறுபடியும் சொல்கிறேன் மார்கெட்டில் ரிஸ்க் இல்லை என்று சொல்கிறவர்கள் , யாராக இருந்தாலும் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். 

தனிமனிதர் சார்ந்த ரிஸ்க்.  ( PERSONAL RISK  )

தனி மனிதர் ரிஸ்க் எனபது , டிரேடு செய்கிற நமக்கு உடல் நிலை சரி இல்லாமல் போகலாம், அல்லது நம் பணத்தினை யாரவது டிரேடு செய்து தரும்பொழுது அவருக்கு திடிரென டெங்கு வந்து ஒரு மாதம் டிரேடு செய்ய இயலாத சூழல் வரலாம்.
நாம் ஒரு வாரம்  வெளியூர் செல்லலாம். நம்மிடம்  சரியான டிரேடு மனநிலை இல்லாமல் இருக்கலாம், நமது பணத்தினை சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாமல் போகலாம், திடிரென நமது வேலையினை இழக்கும்  சூழ் நிலை வரலாம், இது போல ஆயிரக்கணக்கான காரணங்கள் தனி மனிதர் ரிஸ்க்கில்  வரும்.


மேலே நான் சொன்ன ரிஸ்க்  பொதுவானவை .RISK DISCLAIMER ,RISK WARNING , BUSINESS TERMS ,TERMS OF USE .....ETC போன்றவைகளில் வரும் பயங்கரமான  ரிஸ்க்கு களும்   உண்டு.இதற்கெல்லாம் அர்த்தம் தெரியவே நீங்கள் பல லட்சம் செலவு செய்து வழக்கு அறிஞர்  களை அமர்த்த வேண்டும்.
பொறுமையாக வாசியுங்கள்,பல முறை வாசியுங்கள் .நான் ஏன் சொல்கிறேன் என்றால் நாம் டிரேடு செய்யாமலே இவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்றால் , டிரேடு செய்யும் பொழுது எவ்வளவு கவனமாகச் செயல் பட வேண்டும் என்பதற்கே.

பின் குறிப்பு: நான் உதாரணத்திற்காக ஒரு நிறுவனத்தினை பயன் படுத்தி உள்ளேன் . 99 %  சதவீத நிறுவனங்கள் இந்த வகையான ரிஸ்க் களை எல்லாம் அவர்களின் வெப் சைட்டில் கூட சொல்வது இல்லை. அவர்கள் எல்லாம் போலி என்பதில் சந்தேகமே வேண்டாம், ஏன் எனில் இவ்வகையான ரிஸ்க் களை எல்லாம் கட்டாயம் சொல்ல வேண்டும் என்பது சட்டமாகவே உள்ளது.

ரிஸ்க்குகள்:












12. RISK WARNING  (MORE THAN 110 RISKS UNDER   THIS )


இந்த ரிஸ்க் எல்லாம் ஒரு தடவை நீங்கள் சும்மா படித்து முடிக்கவே கட்டாயம் 2-3 மணி நேரம் ஆகும்.(உங்களுக்கு ஆங்கிலம் நன்கு பிழை இல்லாமல் படிக்க முடியும் என்றால் மட்டும்)

பங்கு வணிகத்தில் ரிஸ்க்எல்லாம்   இல்லை , எங்க இண்டிகேட்டர், ரோபோட்,...........ETC வாங்கினால்,சேர்ந்தால் ,முதலீடு செய்தால் போதும் என்று சொல்லும் அதிமேதாவிகளே ...நீங்களும் கொஞ்சம் படித்தால் நாட்டுக்கு நல்லது.

பங்குச் சந்தையில் ரிஸ்க் இல்லை என்று கூறும் அதிமேதாவிகளுக்குச் சமர்ப்பணம் .


பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.