25 April 2014

மெல்ல மெல்லப் பணம்- 1பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

மெல்ல மெல்லப் பணம்- 1

அன்பு நண்பர்களே நாம் அன்றாடம் நிறைய விசயங்களைப் பற்றிப்  பேசுகிறோம், அதில் எத்தனை விஷயங்கள் நம் வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது என்பது கேள்விக்குறி தான்.
இன்று நான், நம் அனைவருக்கும் பிரயோசனமான உரையாடலை இங்கு பதிவிட விரும்புகிறேன்.
செலவுகள் நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகிவிட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலை வாசி உயர்வினை கட்டுக்குள் வைத்து, செலவு செய்வது, காட்டில் போய் தவம் இருப்பதை விடக்  கடிதான காரியம் ஆகி விட்டது.


                                                   
                                                              

இந்த நிலைமையிலும் எப்படி பொருளாதாரத் திட்டமிட்டு , சேமித்து ,முதலீடு செய்து நம் வாழ்வை ஒரு படியாவது முன்னேற்றிக் கொள்ள உதவுவதற்காகவே இந்தப் பதிவு.
சேமிப்பு இல்லாத வீடு கூரை இல்லாத வீட்டிற்கு சமம் என்று சொல்லலாம். நான் என்னதான் கஷ்டப் பட்டு உழைத்தாலும் என்னால் சேமிக்க முடியவில்லை என்று புலம்புகிரீர்களா ? நீங்கள் சேமிக்க வேண்டுமெனில் இரண்டு  வழி தான் உண்டு.      

                                                   

ஒன்று :

 நீங்கள் கட்டாயம் உங்கள் செலவுகளைக் குறைக்க அல்லது கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் .
நாம் செய்கின்ற செலவுகளில் சில சதவீதங்கள் வீணானது அல்லது தேவையற்றது என்கிறது ஒரு ஆய்வு. உதாரணமாக நாம் பயன்படுத்துகின்ற பற்பசையினை 5 % சதவிகிதம் முதல் 10 % வரை இருக்கும்பொழுதே 90 % மக்கள் தூக்கி எரிந்து விடுவதாகச்  சொல்கிறது அந்த ஆய்வு. இது ஒரு மேட்டரா என்கிறீர்களா ?இது தான் நிறைய மக்கள் செய்கின்ற தவறு.
எத்தனை பேர் நாம் நமது சைக்கிள் ,பைக் ,கார்களில் பழுது ஏற்ப்பட்டால் உடனே சரி செய்கிறோம்? பத்து ரூபாயில் சரி செய்ய வேண்டிய ஒரு செலவை நூறு ரூபாய் ஆகும் வரை காலதாமதம் செய்வது, நாம் அனைவரும் செய்கிற ஒரு காரியம் தான் என்பதை மறுக்க இயலாது .
நான் ஒரு ரூபாய் கூட வீணாகச்  செலவு செய்வதே கிடையாது ,அப்படியிருந்தும்என்னால் சேமிக்கக முடியவில்லை என்று புலம்பினால் உங்கள் சேமிப்பை உயர்த்த ஒரே வழி.


இரண்டு :

நீங்கள் உங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டாம் ( நீங்கள் தான் ஒரு ரூபாய் கூடவீண்  செலவு செய்வது இல்லையே ) காட்டாயம் நீங்கள் உங்கள் வருமானத்தைதான் இன்னும் பெருக்க வேண்டும்.
ஆம் நண்பர்களே நம் பொருளாதாரத்தில் மேன்மை அடைய ஒன்று நாம் செலவைக் குறைத்து சேமிக்க வேண்டும், செலவு சரியாகச் செய்தும் நம்மால் சேமிக்க முடியாவிட்டால் நம் வருமானத்தை இன்னும் பெருக்க வேண்டும் .இந்த இரண்டைத் தவிர நாம் என்ன செய்தாலும் நாம் பொருளாதார மேம்பாடு அடையவே முடியாது. இது ரெண்டும் செய்ய முடியாவிட்டால் இன்னொரு வழி இருக்கிறது.அந்த வழி உங்கள எங்கயோ கொண்டு போய்டும். அது என்ன வழியா?படத்த பாருங்க உங்களுக்கே புரியும்.என்னங்க பணத்த அச்சு அடுச்சு வேணுனா உங்க பொருளாதாரத்த டெவெலப் பண்ணலாம். ஆனால் நான் உங்களுக்கு சொல்லப்போறது நியாயமான மற்றும் சரியான வழியில் எப்படி சேமிக்கலாம் அல்லது எப்படி நம் வருமானத்தை  உயர்த்தலாம்னு சொல்வதற்காகவே இந்தப்  பதிவு.மெல்ல மெல்லப் பணம் வளரும்.  


பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.