16 March 2014

பங்குச் சந்தையில் நஷ்டம் ஏன்? லாபம் பெற வழிகள்.

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


பங்குச் சந்தையில் ஏன் பெரும்பாலோனோர் நஷ்டம் அடைகிறார்கள்? லாபம் பெற வழிகள்.

ஒரு விசயத்தில் ஏன் தோல்வி பெறுகிறோம் அல்லது பெற்றோம் என்பதனை  அறிந்தாலே,வெற்றி பெறுவது எளிது. பங்குச் சந்தையில் அனைவரும் எப்படி லாபம் பெறலாம் என்பதில் தான் கவனம் வைக்கிறார்களே ஒலிய, தோல்வி எதனால் வந்தது அல்லது வருகிறது  என்பதை அறிய ஒரு பொழுதும் முற்படுவது இல்லை. நாம் இப்பொழுது பங்குச் சந்தையில் பெரும்பாலோனோர் ஏன் நஷ்டம் அடைகிறார்கள் என்பதனைப் பற்றி பார்ப்போம். இதனை தவிர்த்தாலே லாபம் பெறுவது கட்டாயம் தவிர்க்க இயலாத ஒன்றாகி விடும். 

1. தினசரி வணிகம் (intra day trade ) மட்டுமே செய்வதால்.

நாம் எவ்வளவு தான் முன் ஜாக்கிரதையாக வர்த்தகம் செய்தாலும், தினசரி வணிகம் என்பது நிச்சயமாக பணத்தை இழக்கும் காரணிகளில் மிக மிக முக்கியமான ஒன்றாகும். பங்குச் சந்தைக்கு ஊக வணிகம் என்ற பெயரும் உண்டு. ஊகம் என்றால் வரலாம் அல்லது வராமல் போகலாம் என்பதில் ஒன்று தான் பதிலாக இருக்க முடியும். உதாரணமாக இன்று மழை வருமா? சிலர் வரும் என்போம், சிலர் வராது என்போம். ஆனால் முடிவு ஏதாவது ஒன்று தான் இருக்கும். இது தான் ஊகம். இன்று மழை வரும் என்று உங்கள் நண்பரிடம் பெட் கட்டுகிறீர்கள், இந்த வருடத்திற்குள் கட்டாயம் மழை வரும் என்று பெட்  இரண்டில் எது நடக்க வாய்ப்பு அதிகம். நான் சொல்ல வருவது என்ன வென்றால் பங்குச் சந்தையில் பணம் பண்ணும் அணைத்து நபர்களும், நிறுவனங்களும்  ஒருபோதும் தினசரி வணிகம் மட்டும் செய்வது இல்லை. நீங்கள் தினசரி வர்த்தகம் மட்டுமே செய்வபராக இருந்தால் உங்கள் பணத்தை இன்று வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்றோ ஒரு நாள்  கட்டாயம் இழப்பது உறுதி.

2. ஒரே துறை - ஒரே தரம் முதலீடு.

நீங்கள் வட்டிக்குப் பணம் தரும் தொழில் செய்ய முடிவு செய்து உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு லட்சம் ரூபாய் வட்டிக்கு கொடுக்க முடிவு செய்கிறீர்கள். ஒரு லட்சம் ரூபாயினை ஒரே நபருக்கு கொடுப்பதற்கும், பத்தாயிரம் வீதம் பத்து நபர்களுக்குக் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் ஒரே துறை முதலீடு என்பது. ஒரே தரம் முதலீடு என்பது நூறு ரூபாய் விலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு மொத்தமாக  வாங்குவது. எந்த ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர், மீச்சுவல் பண்டு நிறுவனங்கள் ஒரு வருடம் ஒரு தரம் மட்டும்  முதலீடு செய்து விட்டு, அடுத்த வருடம் விலை குறைந்தாலும் வாங்காமல் இருப்பது இல்லை. மொத்தத்தில் லாபம் வருமே  ஒலிய, வாங்குகின்ற அனைத்தும் லாபமாக ஒருவருக்கும் நடந்ததும் இல்லை, நடக்கப் போவதும் இல்லை. மார்க்கெட் திடீர் சரிவுகளை சந்திக்கும் பொழுது ஒரு சில துறை பங்கு கீழே செல்லும் பொழுது, சில துறைப் பங்குகள் கட்டாயம் மேலே செல்லும். கடந்த வருடம் வங்கிப் பங்குகள் நன்கு கீழே சென்ற அதே நேரம், தகவல் தொழில் நுட்பம், மருந்துத் துறைப் பங்குகள் நல்ல உச்சத்திற்கு சென்று உள்ளன.

நீங்கள் ஒரு பண்ணை அமைக்க முடிவு செய்து கோழி மட்டும் வளர்பதற்கும், கொஞ்சம் கோழி, சில ஆடுகள், மாடுகள், நாட்டுக் கோழி, வான் கோழி இப்படி வளர்த்தல் லாபமும் அதிகம், கோழிக்கு நோய் வந்து கோழி ஒருவேளை இறந்தால் ஆடுகள், மாடுகள், வான் கோழி அந்த நஷ்டத்தை ஈடு செய்யும். அது மட்டும் இன்றி ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொன்றும் பலன் தரும். சில குறுகிய காலப் பலன், சில நடுத்தர காலப் பலன், சில நீண்ட காலப் பலன் அதே சமயம் பெரிய லாபம். 

3. ஊகம் முடிவில் சோகம்.

உங்கள் ஊருக்கு அருகில் பெரிய தொழிற்சாலை, அல்லது மருத்துவக் கல்லூரி வரப் போகிறது என்ற செய்தி வந்ததும், சந்தை விலையினை விட அதிகம் கொடுத்து இடம் வாங்கி வைத்துக் கொள்வது போல் தான் ஊக வணிகம் என்பது. வந்தால் கொள்ளை லாபம், ஒரு வேளை வராவிட்டால் உங்கள் நிலைமை அதோ கதிதான். அது போல்தான் பங்கிலும் விரட்டி விரட்டி வாங்குவது என்பதும். இன்று ஒரு லட்சம் சந்தை மதிப்புள்ள இடத்தினை தொழிற்சாலை வரும் என நம்பி ஐந்து லட்சம் கொடுத்து வாங்குவதற்கும், ஒரு லட்சம் மதிப்புள்ள இடத்தை பேரம் பேசி 50000 அல்லது 75000 குறைத்து வாங்கு வதற்கும் உள்ள வித்தியாசம் தான்  pe ratio  பார்த்து ஒரு பங்கினை வாங்குவதும். தொழிற்சாலை வந்தாலும் நல்ல லாபம், வராவிட்டாலும் ஒரு லட்சம் சந்தை விலைக்கு விற்றால் கூட  லாபம் தான், கட்டாயம் சந்தை விலைக்கு விற்கவும் இயலும். ஆனால் ஐந்து லட்சம் கொடுத்து வாங்கிய இடத்தை தொழிற்சாலை வராவிட்டால் ஐந்து லட்சம் வர பல ஆண்டுகள் கட்டாயம் ஆகலாம், சில நேரம் சந்தை விலை ஐந்து லட்சம் வராமல் கூடப் போகும் அபாயம் உண்டு.

4 . கண்ணை விற்று கலர் டிவி வாங்குவது.

ஒரு பங்கினை குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் தான், அப்பொழுது தான் அதிக விலைக்கு விற்க முடியும். குறைந்த  விலை தான் என்பதற்காக நொண்டிக் குதிரையினை வாங்கி கிண்டி ரேசில் விட முடியுமா? ஒரு கார் பஞ்சர்  ஆகியும் ஓடாமல் நிற்கலாம், என்ஜின் சீஸ் ஆகியும் ஓடாமல் நிற்கலாம். அது போல்தான் ஒரு பங்கு தற்காலிகமான காரணத்தினால் விலை வீழ்ச்சி  வந்து இருக்கலாம், நிறுவனத்தின் தொடர் நஷ்டத்தினால் விலை வீழ்ச்சி வந்து இருக்கலாம், அது போல்தான் விலை குறைவு என்பதற்காக நஷ்டத்தில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செயவார்கள். அது நொண்டிக் குதிரை தான்.  உங்கள் குதிரை இலக்கினை  அடைவதற்குள் பந்தயம் முடிந்து விடும்.

5.  பூசாரி கடவுள் அல்ல.

நான் இங்கு பூசாரி என்பது, ப்ரோக்கர், இண்டிகேட்டர் விற்பவர் ,சாப்ட் வேர் விற்பவர் , எங்க டிப்ஸ் யூஸ் பண்ணினால் படுத்துக் கெடந்தாலும் பணம் கொட்டும், அடுத்த மாதமே  நீங்கள் தான் அம்பானி, இப்படி இருந்த என்  கிளைன்ட் எப்படி ஆயிட்டார் பாருங்க, நீங்க நடத்து வாங்க  கொஞ்ச நாளுல காருல போகலாம், வீட்ட வித்து பயபடாம  பணம் போடுங்க பங்களா வாங்கிக்கலாம், பொண்டாட்டிய (நகைய) அடமானம வைங்க அடுத்த மாசம் மீட்கலாம், இப்படி எல்லாம் சொல்பவர்கள் தான் பூசாரி. அம்பாளுக்கு ஒரு பொங்கல வச்சுடுங்கோ, உங்க பொண்ணு கல்யாணம் பேசா நடந்துடும் என்பார்கள் அல்லவா? இது போல்தான் நான் மேலே சொன்னவர்கள் எல்லாம்,ஜாக்கிரதை பல குடும்பங்கள் இவர்களின் வாக்குறிதிகளால் நாசமாகி உள்ளன. மிக மிக மிக கவனம் தேவை.

பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:

1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. 

2.  எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம்  பண்ணலாம் என்பவர்கள்  உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை  வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.

3. எங்க இண்டிகேட்டர் நூறு சதவீதம் லாபம் தரும் என்பதும் ஆயிரம் சதவீதம் பொய். மார்கெட் பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய இண்டிகேட்டர் அல்ல. அதாவது ஒரு இண்டிகேட்டர் பை காட்டினாள் பை பக்கமோ,அல்லது ஒரு இண்டிகேட்டர் செல் காட்டுவதால் மார்கெட் செல் பக்கமோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு விஷயம் துல்லியமாக  இருந்தால் அந்த விசயத்திற்கு அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் காபிரைட் வாங்கி இருக்கும். நூறு ரூபாய் போட்டால் தினம் நூறு ரூபாய் கிடைக்கும் என்றால், எல்லா நிறுவனங்களும் முதலீட்டு நிர்வாகிகளை (fund managers ) வீட்டுக்கு அனுப்பி இருக்கும். அந்த இண்டிகேட்டர் அல்லது சாப்ட்வேர் மட்டும் போதுமே. தயவு செய்து யாரும் கண்டுபிடிசுடாதீங்காப்பா, எங்களுக்கு வேலை போய்டும். ஹா,ஹா,ஹா....  ஒரு இண்டிகேட்டர் அல்லது எதுவும் லாபமும் தரும் நஷ்டமும் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

4. தினமும் கட்டாயம்  இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல.   ஓவர்  ஆல் நீங்கள்  எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .

5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள்.  காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை. 

6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.

7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

8. வெற்றியாளர்கள் நாளுக்கு ஒரு இண்டிகேட்டர், நாளுக்கு ஒரு டிரேடிங் சிஸ்டம் பாலோ செய்வது இல்லை.

9. ப்ரோக்கர் தரும் அதிகமான மார்ஸின்  ஆபத்தானது. வெற்றியாளர்கள் அவர்களின் முதல் தொகையினை வைத்து மட்டுமே வர்த்தகம் செய்வார்கள், பெரும் பாலும் அவர்கள்  ப்ரோக்கர் தரும் மார்ஸின் பயன் படுத்துவது இல்லை. ஏன் எனில் உங்களுக்கு லாபம்  வந்தாலும், நஷ்டம் வந்தாலும் ப்ரோகருக்கு கட்டாயம் கமிசன் வந்து விடும். 

10.  நூறு ரூபாயில் லாபம் பார்க்க இயலாதவர்கள் நூறு கோடி கொடுத்தாலும் லாபம் பார்க்க இயலாது.

11. சரியான டிரேடிங் மனநிலை ( trading psychology)  இல்லாதவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லை.

12. பங்குச் சந்தை பணம் காய்க்கும் மரம் அல்ல. ஒரு நியாமான தொழிலில் என்ன வருமானம் கிடைக்குமோ அதை விட அதிகம் எதிர்பார்த்து பங்கில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது.

13.  நீங்கள் கற்றுக் கொள்வதை எல்லாம் கொட்ட பங்குச் சந்தை குப்பைத் தொட்டு அல்ல. தினமும் தெரிந்து கொள்ளுங்கள், ஆனால் தினமும் புதிது புதிதாக வணிக முறைகளைக் கையாள வேண்டாம்.
A GOOD ANALYST CAN NOT BE A GOOD TRADER -
A GOOD TRADER CAN NOT BE A GOOD ANALYST.

14. இண்டிகேட்டர், முதலீடு நிர்வாகம், டெக்னிகல், வர்த்தக மனநிலை , மாறாத வர்த்தகத் திட்டம் எல்லாம் கலந்த கலவைதான் வெற்றி என்பது. ஒன்றை மட்டும் வைத்து வெற்றி என்பது இயலாது. அளவுகளில் மாற்றம் உண்டு, ஆனால் அவசியம். சாம்பருக்கு காய், காரம், உப்பு ,தண்ணீர் எனபதைப் போல.

15. நேற்று லாபம் வந்தது போல் இன்றும் ,அவருக்கு லாபம் வந்து விட்டதால் உங்களுக்கும் லாபம் வர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ப்ரோக்கர் அல்ல. 

16. மார்க்கெட் சரிகின்ற பொழுது நீங்கள் மிக்க மகிழ்ச்சி  அடைந்தால் , நீங்கள் தான் சரியான முதலீட்டாளர். நேற்று நூறு ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருள் அதே தரத்துடன் இன்று 50 ரூபாய்க்கு கிடைத்தால், நீங்கள் மகிழ்ச்சி தான் அடைய வேண்டும்.  ஆனால் நீங்கள் எப்படி, எந்த வகையில் உங்கள் பணத்தினை நிர்வாகம் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து. 

17. உங்களுக்கு நஷ்டமாகின்ற ஒரு தொகை யாரோ ஒருவருக்கு அல்லது சிலரருக்கு லாபமாக போகிறது என்பதே உண்மை. லாபம் அடைகிறவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நீங்களும் செய்யாமல், லாபம் மட்டும் வர வேண்டும் என்றால் எப்படி வரும்? 

18. கடவுளிடம் வேண்டாதீர்கள். நீங்கள்  மேலே செல்ல வேண்டும் என்று வேண்டுகிற அதே நேரம் யாரோ ஒருவர் அதே கடவுளிடம் கீழே செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருப்பார். பாவம் கடவுள் என்ன செய்வார்? அவர் கன்பீஸ் ஆக மாட்டாரு?  சின்னப் புள்ளத் தனமால இருக்கு. இங்கு செய்யும் தொழில் தான் தெய்வம்.

19. மாடு பத்து ரூபாய்க்கு வாங்கி, சாட்டை நூறு ரூபாய்க்கு வாங்குவதை போல, சிலர் ப்ரோக்கரேஜ் ஆயிரக் கணக்கில் இருக்கம், ஆனால் லாபம் நூற்றுக் கணக்கில் கூட இருக்காது.
தேவை இல்லாமல் இண்டிகேட்டர், வகுப்பு என விரயம் செய்ய வேண்டாம். குளத்தை விட, ஒரு புத்தகம் அதிகம் நீச்சல் கற்றுத் தர முடியாது. உங்களால் முடிந்த தொகையினைக் கொண்டு ஒரு பத்து சதவீதம் மட்டும் ரிஸ்க் எடுத்து அல்லது டெமோ அக்கௌன்ட் , பேப்பர் டிரேடிங்கில் வர்த்தகம் செய்தாலே போதுமானது. 



20. குறுகிய காலம், குறிகிய நீண்ட காலம், நீண்ட காலம் வர்த்தகம் அவசியம். இதில் ஒன்றினை  மட்டும் செய்தவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லவே இல்லை. 

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.