22 January 2014

மெல்ல மெல்லப் பணம்- 2

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

மெல்ல மெல்லப் பணம்- 2

பணம் பண்ணப் பல வழிகள் இருக்கின்றன, அது அனைத்தைப் பற்றியும் ஒரு அலசல். அதாவது ஜீரோ டூ ஹீரோ .இரண்டு கேள்விகளோடு பதிவிற்குள் செல்வோம்.

1.ஒரே நாளில் விதை போட்டு,மரமாக்கி,பழம் பறிக்க முடியுமா?
2. மொத்த உலகிலும் வாங்குபவர்கள் பணக்காரர் ஆகி இருக்கிறார்களா? இல்லை விற்பவர்கள்  பணக்காரர் ஆகி இருக்கிறார்களா?
ஒரே நாளில் விதை போட்டு,மரமாக்கி,பழம் பறிக்க முடியாது என்பது கட்டாயம் உண்மைதான்,ஆனால் ஒரே நாளில் விதை மட்டுமாவது போட முடியாதா? அந்த வாய்ப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது,இன்று விதை போடாமல் நாம் என்றுமே மரமாக்கவோ இல்லை பழம் பறிக்கவோ முடியாதே? அந்த விதை ஒரு பைக்,கார்,வீடு...எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் அடிப்படையில் எல்லாம் பணம் சார்ந்தது தான். அது அனைத்தையும் அடைய உதவுவதே இந்தப் பதிவின் நோக்கம்.
எவ்வளவு முதலீடு வேண்டும்? மெம்பர்ஷிப் பணம் ஏதாவது கட்ட வேண்டுமா? ஏமார்ந்து விட்டால் என்ன செய்வது? இது எல்லாம் நம்புற மாதிரி இல்லையே! நான் ஏற்கனவே நொந்து போய் இருக்கிறேன்! சேல்ஸ் பண்ணனுமா? ஆள் பிடிக்கணுமா? ஈமு கோழி வாங்கனுமா? இப்படிப் பல கேள்விகள் மொத்தமாகவோ, சில்லரைகளாகவோ வருகிறதா? ஒரு ஆணி கூட.........வேண்டாம்.

ஒரு மாறாத உண்மை:

1.கடல் முழுதும் மீன்கள். பெரிய வலை போட்டால் நிறைய மீன்கள்,மீன் கிடைக்காவிட்டால் நிறைய வருத்தம்,நிறைய இழப்பு....சின்ன வலை கொண்டும் மீன் பிடிக்கலாம்,தூண்டில் கூட போதும். வந்தால் மீன்,போனால் புழு. ஆனால் கரையிலேயே கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தால்? கடல் முழுதும் மீன்கள் இருந்தும் உங்களுக்கு என்ன பிரயோஜனம்? அதுபோல்தான் உலகம் எங்கும் பணம், நம்மைச் சுற்றி எங்கும் பணம் இருக்கிறது,நம் பாக்கெட்டைத் தவிர.

2. நாம் கிழக்கே ஒரு ஊருக்குப் பயணம் போக முடிவு எடுத்து, மேற்கு நோக்கியே சென்றால் நாம் நினைத்த ஊர் எப்படி வரும்? ஒன்று நாம் கிழக்கு நோக்கிப் பயணத்தை மாற்ற வேண்டும், இல்லை மேற்கே இருக்குமாறு நாம் செல்ல வேண்டிய ஊரினை மாற்ற வேண்டும். அது போல்தான் நாம் இத்தனை நாள் வாழ்ந்து,சம்பாதித்தது ஒன்றும் பெரிதாக இல்லை என்றால், ஒன்று நம் வாழ்வை மாற்ற வேண்டும், இல்லை சம்பாதிக்கும் வழிதனை மாற்ற வேண்டும்.

நம் விஷயம்:

நீங்கள் முதலீடு செய்தும் பணம் பண்ணலாம். அதாவது ஒரு 10 லட்சம் ரூபாய் பேங்க் FD யில் போட்டால், தோராயமாக உங்கள் மாத வருமானம் 7000 முதல் 10000 ரூபாய். ஒரு குடும்பத்தை நடத்தி விடலாம். ஆனால் 2020 இல் இந்தப் பணம் கட்டாயம் போதாது. மீச்சுவல் பண்டில் 15% - 20% வருட வருமானம் கிடைக்கலாம்.ரிஸ்க் இருக்கிறது. கந்து வட்டியும் பணம், கல்விச் சாலைகள் கூடப் பணம்.உங்கள் முதலீட்டைப் பொறுத்து எங்கும் பணம், எதிலும் பணம். வெறும் 10000 ரூபாய் வைத்து, 5 ரூபாய் வட்டிக்கு விட்டு, அடுத்த 25 வருடம் வரை அவனை ஆண்டவன் காப்பாற்றினால் அவன் சம்பாதிக்கும் மொத்தத் தொகை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய். நம்ப முடியவில்லையா? இது தான் உண்மை.
என்ன ஒரு ஆச்சர்யம் பார்த்தீர்களா? இது எப்படி என்கிறீர்களா? இது தான்  முதலீடு+ கூட்டுவட்டி+ ரிஸ்க் செய்யும் சித்து விளையாட்டு. வெறும் பத்தாயிரம் ரூபாய் இந்த வேலை செய்யும் என்றால், பத்து லட்சம் என்னவெல்லாம் செய்யும்?
எல்லாம் சரிதான்! ஆனால் என்னால் முதலீடு செய்யவோ, ரிஸ்க் எடுக்கவோ முடியாது என்கிறீர்களா? கவலையை விடுங்க உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. நம்பிக்கை என்னும் ஒரு விதை இருந்தால் போதும்.
அடுத்து நம் கேள்வி, இந்த உலகில் வாங்குபவர்கள் பணக்காரர் ஆகி இருக்கிறார்களா? இல்லை விற்பவர்கள் பணக்காரர் ஆகி இருக்கிறார்களா? வாங்குபவர்கள் என்றால் நம் வாழ் நாளில் மளிகைச் சாமான் மட்டுமே எவ்வளவு லட்சத்திற்கு வாங்கி இருப்போம், பின் நாம் ஏன் இன்னும் பணக்காரர் ஆக வில்லை?

விற்பவர்கள் தான் என்றால் பல வருடம் நம்மை விற்று ஒரு இடத்தில் உழைத்தும் ஏன் இன்னும் பணக்காரர் ஆகவில்லை? ஒரு உண்மை இங்கு மறைந்து இருக்கிறது...அது தான் ரகசியம். அந்த ரகசியம் புரிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் பணம் பண்ணி இருக்கிறார்கள். மளிகைச் சமான் வாங்குவது மட்டும் இல்லாமல் 10 -20 வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு இடம் வாங்கி இருந்தால்? 10000 வேண்டாம் ஒரு 1000 ரூபாயினை கூட்டு வட்டியில் 30,40, 50 வருஷம் வைத்து இருந்தால்? அடிப்படை உண்மை என்ன வென்றால் இதுவரை  நாம் வாங்கியதும் சரி இல்லை,விற்றதும் சரி இல்லை, அந்த ரகசியம் என்னவென்றால் நாம்  வாங்கியதும் என்றுமே ஒரு முதலீடாக இல்லை, நாம் விற்றதும் என்றுமே முதலீடாக இல்லை. அதாவது அதில் இருந்து ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை, எல்லாம் செலவாக மட்டுமே இருந்து இருக்கிறது. நம் செலவுகளில் இருந்தும் வருமானம் வரும்படியான வாய்ப்பை நாம் உருவாக்கவே இல்லை.இது தான் அந்த ரகசியம்.
இன்று முதல் உங்கள் செலவுகளில் இருந்தும் ஒரு வருமானம் பெரும் வாய்ப்பை உருவாக்கவே இந்தப் பதிவு. அதாவது உங்கள் செலவுகள்,வெறும் செலவாக மட்டும் இல்லாமல் ஒரு வருமான மாகவும் மாறப் போகிறது. செலவே முதலீடு. செலவுகள் சேமிப்பாக மட்டும் இருந்தால், ஒரு நாள் அதுவும் ஏதோ ஒரு காரணத்திற்காக செலவாக மாறிவிடும், அது முதலீடாக மாறவேண்டும். செலவே முதலீடாக மாறும் போது கட்டாயம் வருமானம் வரும்.

ஒரு உண்மை:

இதுவரை நம் வாழ் நாளில் மளிகைச் சாமான்கள் மட்டும், எத்தனை லட்சத்திற்கு வாங்கி இருப்போம்? கல்யாணம், தீபாவளி,பொங்கல் ....எல்லாம் சேர்த்துக் குறைந்த பட்சம் 1 லட்சம் இருக்கும் இல்லையா? ஒரு கணக்கிற்காக 1970 முதல் 2014 வரை 1 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலங்களில் எப்பொழுது எல்லாம் 10 ரூபாய்க்கு மொத்தமாகவோ இல்லை சில்லறையாகவோ செலவு செய்தோமோ? அப்பொழுது எல்லாம் வெறும் 1 ரூபாய் எடுத்து, சேமித்து குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் ஒரு பேங்க் அல்லது பங்குச் சந்தை அல்லது தங்கம் அல்லது இடம் வாங்கி இருந்தால்?
அதாவது 1970 இல் ஜனவரி முதல் டிசம்பர் வரை நாம் 10000 ரூபாய் செலவு செய்து இருந்தோம் என்றால், நாம் சேமித்து வைத்து இருக்க வேண்டிய தொகை 1000 ரூபாய். இந்த 1000 ரூபாயினை ஒரு பேங்க் அல்லது பங்குச் சந்தை அல்லது தங்கம் அல்லது இடம் வாங்கி இருந்தால்? அதன் மதிப்பு இன்று என்னவாக இருக்கும்.?
1980 இல் 10000 செலவுக்கு மறுபடி ஒரு 1000 + 1970 இன் 1000 முதலீடு
+ அந்த 1000 ரூபாயின் 10 வருடக் கூட்டு வட்டி அல்லது வேறு முதலீட்டின் வளர்ச்சி. இப்படியே 1970 முதல் 2013 வரை நாம் செய்து இருந்தால் இன்று நம் கைகளில் எவ்வளவு இருக்கும்? அதாவது 10 ரூபாய் செலவு செய்தால் 1 ரூபாய் கட்டாயம் முதலீடு செய்து இருக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அந்த மாத சேமிப்பு அந்த மாதமே முதலீடாக மாற வேண்டியதைத் தவிர்க்கக் கூடாது.
தங்கமோ இல்லை இடமோ வாங்கி இருந்தால்? இன்று அதன் மதிப்பு பல லட்சம் கண்டிப்பாக இருக்கும். ஒரு உண்மை என்னவென்றால் செலவு வெறும் ஒரு லட்சம், சேமிப்பு அதிலும் சில ஆயிரம் ஆனால் வருமானம் மட்டும் பல லட்சங்கள். ஒன்று யோசியுங்கள் வெறும் 1000 ரூபாய்க்கு 1970 இல் தங்கம் வாங்கினால் எவ்வளவு வாங்கலாம்? இன்று 1000 ரூபாய்க்கு எவ்வளவு வாங்கலாம்? இன்று அனைவரிடமும் 1000 இருக்கிறது 1970 இல் இருந்த தங்கத்தின்  விலை இன்று இல்லையே? இதே போல்தான் 2025,2050 விலை கூடுமா குறையுமா? இன்று இருக்கும் விலையினை விட குறையும் என்றால் நீங்கள் முதலீடு செய்ய வேண்டாம்.
ஒரு உண்மை தெரியுமா? நாம் 1000 ரூபாய் செலவு செய்தால், அதன் மூலமாக நாம் பெரும் பொருள் அல்லது சேவையின் உண்மையான மதிப்பு தோராயமாக வெறும் 300 ரூபாய் மட்டுமே,மீதம் இருக்கும் 700 ரூபாய் இடைத் தரகர்கள் கைகளில், அதனால் தான் அம்பானி கூட 50 பைசா தீப்பெட்டி விக்கிறார், ஏன் எனில் 50 காசில் 70 சதவீதம் அவர் கல்லாக்கட்டி விடுவார்.

அதே போல் இன்று நாம் 2000 ரூபாய்க்கு தோராயமாக 1 கிராம் தங்கம் வாங்க முடியும் எனில், 2025 இல் 2000 ரூபாய்க்கு எவ்வளவு தங்கம் வாங்க முடியும்? நான் சொல்ல வரும் விஷயம் புரிகிறதா?
1980-90  களில் வெறும் 10000 ரூபாய்க்கு ஷேர்ஸ் (SHARES ) வாங்கி இருபவர்களின் கைகளில், இன்று அதன் மதிப்பு பல கோடிகள்.
செலவே முதலீடு என்று நான் ஏன்சொல்கிறேன் என்றால் ...பெரும்பாலும் செலவை நாம் நினைவில் வைப்பது இல்லை,ஆனால் முதலீட்டை நினைவில் வைத்து இருப்போம்,எனவே இந்த வகையான முதலீட்டுச் செலவை நாம் பல வருடங்களுக்கு மறந்து விட வேண்டும். 2014 இல் வாங்கி 2015 இல் நல்ல வளர்ச்சி இருந்தாலும், லாபத்தை எடுத்து மறு முதலீடு செய்ய வேண்டுமே ஒலிய செலவு செய்யக் கூடாது. இந்த வகையான முதலீட்டை ஒரு செலவாகவே கருதி மறந்து விட வேண்டும், எனவே தான் இதன் பெயர் முதலீட்டுச் செலவு. மறுபடியும் சொல்கிறேன் பொருளாதார ரீதியாக உலகம் பெரிய மாறுதலுக்குள் செல்லப் போகிறது. இன்று இருக்கும் விலை, வரும் வருடங்களில் கண்டிப்பாக இருக்கப் போவதில்லை. எனவே நீண்ட கால முதலீட்டுச் செலவையும் கட்டாயம் கவனம் வையுங்கள். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் "செலவே முதலீடு".
விதைக்க வேண்டிய காலம், தூங்காதீர்கள்,விதைக்காமல் ஒரு நாளும் மரமாகாது,பழம் கிடைக்காது. சிகரெட் பிடிப்பவர்கள் என்றால் , ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் குறைத்துக் கொண்டு,முதலீட்டு செலவாக மாற்றுங்கள். ஒரு சிகரெட் 3 ரூபாய் என்றால் மாதம்  30 சிகரெட்கள்  * 3 ரூபாய்  = 90 ரூபாய். மாதம் 90 ரூபாய் முதலீட்டுச் செலவு செய்யலாம் . முதலீட்டுச் செலவு என்பது செலவுகளில் இருந்தே வருமானம் வருவது தான். 50 ரூபாய்க்குள் இன்று பல தரமான , நல்ல வளர்ச்சி தரும் பங்குகள் இருக்கின்றன. வாங்கி வையுங்கள்,மாதம் மாதம் தவறாமல் வாங்குங்கள். லாபம் வரும் பொழுது தங்கம்,நிலம், மீச்சுவல் பண்ட்டில் எல்லாம் மீண்டும் மீதும் முதலீடு  செய்யுங்கள்.  10 ரூபாய் செலவு செய்தால் 1 ரூபாய், 100 ரூபாய் செலவு செய்தால் 10, 1000  ரூபாய் செலவு செய்தால் 100 ரூபாய்க் கட்டாயம் முதலீட்டுச்  செலவு செய்யுங்கள். முதலில் கஷ்டமாகத்  தோன்றலாம். ஆனால் விதைக்காமல் பலன் இல்லைஇப்படிச்  செய்வது தான் முதலீட்டுச் செலவு. மொத்தமாக  10000 ரூபாய் முதலீடு என்பது பலருக்கும் இயலாத காரியம். அந்த வகையான முதலீட்டில் ரிஸ்க் அதிகம். நீங்கள் முதலீடு செய்கின்ற அந்தக் குறிப்பிட்ட மாதங்களில் என்ன விலையோ அதை மட்டுமே உங்களால் வாங்க இயலும். ஆனால் மாத மாதம் முதலீடு செய்வதால் விலை குறைந்தால் கூட மறுபடி வாங்க வாய்ப்பு உண்டு. ஆனால் மொத்தமாக  10000 ரூபாய் முதலீடு செய்வது என்பது வெறும் முதலீடு. ஆனால் மாத மாதம் நாம் செய்ய வேண்டியதோ முதலீட்டுச் செலவு. யார் வேண்டுமானாலும் செய்யலாம். இன்று ஒரு சிகரெட் குடித்து விட்டு அதை அடுத்த வருடமும் நினைவில் வைப்பீர்களா? அதுபோல் தான் இதுவும்.
இப்படி நீங்கள் மாதாமாதம் வாங்கிப் போடுவதால், வருடம் வருடம் டிவிடென்ட் கிடைக்கும், கோழி வளர்த்தல் முட்டை கிடைக்கும் அல்லவா? அது மாதிரி, அது மட்டும் இல்லை போனஸ் கிடைக்கும், முட்டையில் இருந்து ஒரு புது கோழி கிடைக்கும் அல்லவா? அது மாதிரி தான் இதுவும். அதாவது லாபத்தில் பங்கு தரும் முறைதான் இந்த டிவிடென்ட், போனஸ் எல்லாம். போனஸ் என்பது ஒரு ஷேர் வைத்து இருந்தால் இன்னொன்று இலவசம் என்பது போல இருக்கும். எதிலுமே ஆரம்பம் அற்பமாகத் தான் இருக்கும், ஒரு சிறு விதை போல....ஆனால் மரமாகி, கனி தந்தால்,தந்து கொண்டே இருக்கும்.நீங்கள் உண்டு,உங்கள் குடும்பம்,உங்கள் ஊர்,தேசமே உண்டு மகிழலாம்.
அது மாத்திரம் அல்ல பங்குச் சந்தையில் அதிகப் படியான நபர்கள் நஷ்டம் பெறக் காரணம், ஒரு குறிப்பிட்ட விலையில் மட்டுமே  அவர்கள் பங்குகளை வாங்கி லாப நஷ்டத்தில் இருப்பார்கள். ஒரு பெரிய விலை ஏற்றம் வரும் பொழுதோ, விலை வீழ்ச்சி வரும் பொழுதோ  அதிகப் படியானோர் மறு முதலீடு செய்வதில்லை. அதாவது 10000 ரூபாய் வைத்து இருந்தால்  10000 ரூபாய் முழுதும் ஒரு நூறு ரூபாய் ஷேர் நூறு அல்லது  ஆயிரம் ரூபாய் ஷேர்  பத்து என்று மாத்திரமே இருக்கிறது. இது ஒரு ஆரோக்கிய மான  முதலீடு அல்ல.

இது எப்படி இருக்கிறது என்றால், நீங்கள் ஒரு அடகுக் கடை நடத்த முடிவு செய்து ,நகை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்கிறீர்கள். 1 கிராமுக்கு 2000 ரூபாய் கொடுத்தீர்கள் , அடுத்த மாதம் 1 கிராம் விலை 1800, அப்பொழுது உங்கள் கையில் பணம் இல்லை  யாருக்கும் கடன் வழங்க வில்லை. அடுத்த 6 மாதத்தில் கிராம் விலை 1300, இப்பொழுதும் பணம் இல்லை  கடன் வழங்குவதில்லை, அடுத்த ஒரு வருடத்த்ல் கிராம் விலை 2500 என்றால், தோராயமாக உங்களுக்கு  500 ரூபாய் லாபம் தான் என்றாலும், 1300 ரூபாய் செல்லும் போதும் நீங்கள் கடன் வழங்கி இருந்தால் உங்கள் மொத்த லாபம் 1200 +500 = 1700 ரூபாய் அல்லவா?
இப்படிதான் 99% டிரேடர்கள் முதலீடு செய்கின்றனர்அது மாத்திரம் அல்ல பத்துப் பேருக்குக் கடன் கொடுத்தால் , சரியாக வட்டியோ அல்லது அசலோ கொடுகாதவர்களிடம் பணத்தை வாங்கி,சரியாகக் கொடுப்பவர்களுக்கு சேர்த்துக் கொடுப்போம் இல்லையா ? அது போல் பங்கு வணிகத்திலும் மறு ஆய்வு செய்ய வேண்டும். இது தான் தொழில் நடத்தும் முறைகள். இது எல்லாம் சந்தையில் செய்யாமல் லாபம் மட்டும் எப்படி வரும்? நான் சொன்ன இரண்டு முறைகளும் மாதாமாதம் முதலீடு செய்தால் மட்டுமே சாத்தியம். எனவே தான் சொல்கிறேன் முதலீட்டுச் செலவு தான் சிறந்தது என்று.
எனவே ஜாக்கிரதை...விதைக்க வேண்டிய நேரம்,தூங்காதீர்கள். உங்கள் குழந்தை களுக்கும் கூடப் பழக்குவியுங்கள். பசுமாடு,கோழி வளர்ப்பது போல்தான் இதுவும்இந்த முறையில் இன்னொரு பயன் என்ன வென்றால்  நீங்கள் மாதாமாதம் தவறாமல் பயிற்சி பெறுவதன் மூலம்,சில வருடங்களில் சந்தையின் போக்கு உங்களுக்கு நன்கு பிடி படும்.
இப்பொழுது சொல்லுங்கள் முதலீடு தேவையா? செலவே தான் முதலீடு. ஆள் பிடிக்க வேண்டுமா? இதை செய்ய வில்லை என்றால் தான் ,கஷ்டம் வரும் பொழுது ஆள் மாத்திரம் அல்ல அடுத்தவர் கால் கூடப் பிடிக்க வேண்டியது வரும். பொருள் வாங்கனுமா? நீங்கள் வெறும் பொருள் மாத்திரம் வாங்க வில்லை, முதலீடு செய்கிறீர்கள், பொருள் வாங்குதல் என்பது வெறும் செலவு,முதலீட்டுச் செலவு என்பது ஒரு வரவு.நான் ஏற்கனவே நொந்து போய் இருக்கேன் ....முதலில் நீங்கள் தான் கட்டாயம் செய்ய வேண்டும். ஏமாந்துட்டா என்ன பண்றது? இதை மாத்திரம் நீங்கள் மாதாமாதம் சரியாகச் செய்தால், அடுத்த 10- 20 வருடம் நீங்கள் முன்னோக்கிச் செல்கிறீர்கள், காலம் கூட உங்களை ஏமாற்ற முடியாது.அது மாத்திரம் அல்ல, எல்லா முதலீடுகளும் உங்கள் பெயரில் தான் இருக்கிறது, உங்கள் சந்ததி சந்ததியாக வைத்துக் கொள்ளலாம். இது எல்லாம் நம்புற மாதிரி இல்லையே ?இது ஒன்னும் கண் கட்டி விதை இல்லை. கடந்த 5- 10 வருடத்தின் விலை நிலவரமும், இன்றைய விலை நிலவரமும் அதுபோல் இன்றைய விலை நிலவரமும் அடுத்த 10 - 20 ஆண்டுகளின் விலை நிலவரமும் எப்படி இருக்கிறது? எப்படி இருக்கப் போகிறது? என்ற சராசரி அறிவு இருந்தால் போதும். கட்டாயம் கூடுமே ஒலிய குறையாதுஇதுக்கெல்லாம் MBA  படிக்கத் தேவை இல்லை.
இதில் ஏமாற ஒன்றும் இல்லை, உங்கள் காசு ஒரு பைசா கூட ஒருவருக்கும் போகாது. மக்களிடம் பொதுவாக  இருக்கின்ற  அலட்சியங்களில் ஒன்று தான் , தேடி வரும் நன்மையை அலட்சியம் செய்வது. ஒன்றை நினைவில் வையுங்கள், பால் நம் வீடு தேடி வருகிறது என்பதால் அது மதிப்பு குறைவோ,மதுபானம் நாம் தேடிச் செல்கிறோம் என்பதால் அது மதிப்பு உயர்வோ அல்ல. பெரிய பெரிய முதலீட்டு  ஆலோசகர்கள்  பல ஆயிரங்களில் பணம் பெற்றுக் கொண்டு  சொல்கிறார்கள், நான் இலவசமாகச் சொல்கிறேன் . எனவே அலட்சியம் தவிர்த்தல்...என்றுமே உங்களுக்குத் தான்  நல்லது.சாலையில் வேகம்,புகைப் பழக்கம்.......இது எல்லாம் கூட  அலட்சியம் தான்.
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பொருளாதார ரீதியில் நன்றாக இருக்க நான்  ஏன் திரும்ப திரும்பச் சொல்லணும்?
இதுதாங்க புண்ணியத்தை  சம்பாதித்தல் என்பது. பணம் மட்டும் சம்பாதித்தால் போதுமா? இந்த தகவல்கள் மூலமாக ஒரு குடும்பம் நன்றாக இருந்தாலே போதும்.கட்டாயம் அனைவரும் நன்றாக இருப்பீர்கள். புது வருடத்தில்  புதுமை பொங்கட்டும். புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உதவி என்றால் அழையுங்கள். வாழ்த்துக்கள்.


பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.