18 December 2013

சொன்னது நடக்கும்- ஆனால் நடக்காது

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


சொன்னது நடக்கும்- ஆனால் நடக்காது

பெரும்பாலான கம்பனிகள் எங்களிடம் அக்கௌன்ட் ஓபன் பண்ணுங்கள்,நாங்கள் ப்ரீயா டெய்லி டிப்ஸ் தருவோம், நீங்கள் டிரேடு செய்யலாம் என்பார்கள். பரவா இல்லையே என்பது போல தோன்றும், ஆனால் அவர்களின் நோக்கம் எல்லாம் கமிசன் எடுப்பதிலேயே இருக்கும். உங்களுக்கு லாபம் வந்தாலும்,நஷ்டம் வந்தாலும் அவர்களுக்குக்  கமிசன் வந்து விடும். அது மட்டும் இல்லை கமிசனுக்கு ஆசை பட்டு ஒரே டிரேடில் 90% க்கு  மேல் ரிஸ்க் எடுப்பார்கள். அதுமட்டும் இல்லை உங்களுக்கு லாபம் வர மாதிரியே டிப்ஸ் கொடுத்தால் ( அப்படி எல்லாம் ஒன்னும் கொடுக்க முடியாது,அது வேற விஷயம்) நீங்கள் ஒரு சில டிரேடுலியே இன்றைக்கு போதும் என்ற மனநிலைக்கு  கூட வரலாம், அதனால் வேண்டும் என்றே கூட கமிசனுக்காகச்  சதி செய்கிறவர்களும் உண்டு.

ஒரு சரியான டிரேடு முறை என்பது குறுகிய கால மற்றும் நீண்ட காலக் கலவை தான், ஆனால் கமிசன் உடனே வர வேண்டும் என்பதற்காக அவர்கள் நீண்ட காலம் பற்றிச்  சொல்வதே இல்லை. டிரேடில் 99%  மக்கள் லாஸ் தான் பண்ணுவார்கள், காரணம் 99% டிரேடர்கள் தினசரி (intra day ) வர்த்தகம் மட்டும் செய்வதால் தான். அது மட்டும் இல்லை, ஒரு டிரேடில் இன்டிகேட்டரின் பங்கு வெறும் 30% மட்டுமே,முதலீட்டு நிர்வாகத்தின்(fund mangaement) பங்கு 40%. டிரேடிங் சிஸ்டம்மின் (technical,analysations, economic datas) பங்கு 20%, இது அனைத்தையும் விட முக்கியமானது வர்த்தக மனநிலை (trading phsycology ). இதன் பங்கு 10 % கட்டாயம் தேவை.இது எல்லாம் சேர்ந்த கலவை தான் டிரேடு. இந்தக் கலவையில் டிரேடு செய்யா விட்டால் உடனடியாக இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் கட்டாயம் நஷ்டம் வந்து விடும்.

ஆனால் எல்லாரும் முக்கியத்துவம் கொடுப்பது வெறும் இண்டிகேட்டரில் மட்டும் தான், டிரேடு செய்து பணம் இழக்கிறார்களோ, இல்லையோ இண்டிகேட்டர் வாங்கியே பணம் இழந்தவர்கள் நிறைய பேர்கள் உண்டு. இண்டிகேட்டர் என்பது குருடனுக்கு குச்சி மாதிரி தான், அதை வைத்து மெதுவாக நடக்க வேண்டுமே ஒலிய ஒலிம்பிக்கில் எல்லாம் ஓடக் கூடாது. அது போக சிலர் எங்கள் இண்டிகேட்டர் நூறு சதவீதம் கரெக்ட்டா வேலை செய்யும், இத வச்சு டிரேடு பண்ணினா  சைக்கிள்ள போற நீங்க கார்ல போய்டலாம்னு சொல்வார்கள், ஆனா அவன் கண்டிப்பா கார்ல போவான், உங்க கிட்ட கடைசியா சைக்கிள் கூட இருக்காது. மார்க்கெட் மூவ்மென்ட் எப்போதும் ஒரு இண்டிகேட்டர் பை காட்டுவதனால் பை பக்கமோ, செல் காட்டுவதனால் செல் பக்கமோ போகாதுங்க. இந்த உண்மை புரியவே சிலருக்கு ஐந்து வருடங்கள் கூட அசால்டா ஆயிருது. மார்க்கெட் என்பது பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய,இண்டிகேட்டர் கிடையாது. ஒரு இண்டிகேட்டர் 5 நிமிட சாட்ல பை காட்டுது, 15  நிமிடத்துல செல் காட்டுது, 1 மணி நேர சாட்ல செல்லுனே வச்சுக்குவோம், 4 மணி நேர சாட்ல பை காட்டினா மார்க்கெட் எங்க தாங்க போகும். இப்ப புரியுதா.?

ஒரு உதாரணம் சொல்றேன். இதைப் புரியிற வரைக்கும் படிங்க, எத்தனை தடவை ஆனாலும் பரவா இல்லை. நீங்க ஒரு காய்கறி கடை வைக்கப் ப்ளான் பண்றீங்க. நீங்க ஒரு நூறு கிலோ தக்காளி வாங்கிப் பக்கத்துல இருக்க உழவர் சந்தையில் விற்கப் ப்ளான் பண்றீங்க.
அங்க உங்கள மாதிரியே நூறு கிலோ தக்காளி வச்சு விற்கிற கடை ஏற்கனவே ஒன்பது இருக்கு. உங்களோட சேர்த்து மொத்தம் பத்துக் கடைகள். இன்றைக்கு தக்காளி மொத்த வரவு  (10*100) 1000 கிலோ.சரியா?
அந்த ஆயிரம் கிலோவை, கிலோ ஐந்து  ரூபாய்க்கு வாங்கி இருந்தால், ஐந்துக்கு  மேல விற்றால் தான் லாபம் பார்க்க முடியும்,இல்லையா? எந்த கடையில் தக்காளி விலை கேட்டாலும் விலை ஐந்து ரூபாய்க்கு மேல தான் இருக்கும், குறைத்து விற்றால் கண்டிப்பாக நஷ்டம் வரும்.
இந்த சூழ்நிலையில் திடீரென்று, ஒரு லாரி நிறைய சுமார் பத்தாயிரம் கிலோ தக்காளியினை அந்த மார்க்கெட்டிற்குக்  கொண்டு வந்தால் அன்று உங்கள் நிலைமை என்ன? சற்று யோசியுங்கள்.

அவன் வந்தால் எனக்கு என்ன என்கிறீர்களா? நீங்கள் ஒரு நூறு கிலோ தக்காளியினையே கிலோ ஐந்து ரூபாய்க்கு வாங்கி இருந்தால்,அவன் பத்தாயிரம் கிலோ தக்காளியினை மொத்தமாக வாங்கும் போது அவன் கிலோ தக்காளி ரெண்டு ரூபாய்க்கு கூட வாங்கி இருப்பான் இல்லையா?
இப்பொழுது விஷயம் என்ன வென்றால், ஐந்து ரூபாய்க்கு வாங்கியதை நீங்கள் ஆறு ரூபாய்க்கு விற்கும் அதே நேரத்தில், ஒருவன் இரண்டு ரூபாய்க்கு வாங்கி வெறும் மூன்று ரூபாய்க்கு (உங்களை விட மூன்று ரூபாய் குறைவு ) விற்றால்,

அவன் தக்காளி முதலில் விற்குமா? இல்லை ஆறு ரூபாய்க்கு விற்கும் உங்கள் தக்காளி முதலில் விற்குமா?  அவனைப் போல நீங்களும் விற்க வேண்டும் எனில், நீங்கள் வாங்கின விலையை விட இரண்டு ரூபாய் நஷ்டத்தில் தான் விற்க வேண்டும். இதில் வேடிக்கை என்ன வென்றால் மாலை 6 மணிக்குள் வேறு  விற்றாக வேண்டும், 6 மணிக்கு மேல் நீங்கள் கடை வைத்தாலும் வாங்க ஒருவரும் இருக்க மாட்டார்கள். வேறு வழியே இல்லை விற்றாக வேண்டும். 

இப்படித்தான் இன்றைக்கு ஷேர் மார்க்கெட்,போரெக்ஸ் மார்க்கெட் இல்லை எந்த ஒரு மார்க்கெட்டிலும் தினசரி வர்த்தகம் ( INTRA DAY ) செய்றவங்க நிலைமை எல்லாம் இருக்கும். இதே கதை தான் ஷேர் மார்கெட்டிலும், நாமதான் நூறு கிலோ தக்காளி வியாபாரிகள் ( SMAAL INVESTORS OR INDIVIDUAL TRADERS ) பத்தாயிரம் கிலோ தக்காளி வியாபாரிகள் (BANKS,CORPORATE AND BIG INVESTORS) இன்றைக்கு புதன் கிழமை கூட்டம் இருக்காது,அதனால் நூறு கிலோ வேண்டாம், 70 கிலோ போதும், இன்றைக்கு சண்டே நிறைய கூட்டம் வரும்,எனவே ஒரு 100 கிலோ அதிகமா வாங்கலாம் என்று முடிவு பண்ணுகிறோம் இல்லையா? இது தான் இண்டிகேட்டர்.

நாம வித்தாலும்,இல்ல அழுகிப் போய் கீழே கொட்டினாலும் அத பத்தி எனக்கு கவலை இல்லை என்று, நம்மிடம் வந்து டோக்கன் போட்டு காசு வாங்குவாங்க தெரியுமா அவங்கதான் நாம ஷேர் மார்கெட்டுல ப்ரோக்கர்ஸ். 6 மணிக்கு சந்தையை விட்டு நம்மைக் காலி பண்ண சொல்றாங்க இல்லையா? அது தான் INTRA DAY.  இப்ப புரியுதா தினசரி வர்த்தகம் பண்ணினா ஏன் லாஸ் வருகிறது என்று? நாம் வைத்து இருக்கும் டிரேடுக்கு ( positon ) எதிராக வால்யும் கூடினால் அன்று நாம் காலி. 99% டிரேடர்ஸ் இப்படி தான் லாஸ் ஆகுறாங்க. அவர்கள் டிரேடிங் சிஸ்டம், முதலீட்டு நிர்வாகம்( FUND MANAGEMENT ) பற்றி எல்லாம் தெரிவதும் இல்லை, தெரிஞ்சாலும் ப்ரோக்கர்ஸ் செய்ய விடுவதும் இல்லை.

சரி மறுபடி தக்காளி வியாபாரத்துக்கு வருவோம், நூறு கிலோ தக்காளிய நஷ்டத்துக்கு விற்க முடியாது, இங்க தான் நாம் முதலீட்டு நிர்வாகம் ( FUND MANAGEMENT ) பண்ணனும். எப்படிப் பண்ணுவது?
பத்தாயிரம் கிலோ  தக்காளி கொண்டு வந்தவர், கிலோ மூன்று ரூபாய்க்கு விற்கிறார் இல்லையா? அவரிடம் உடனே நாம் சென்று ஒரு முன்னூறு கிலோ தக்காளி வாங்க வேண்டும். ஏற்கனவே கிலோ 5 ரூபாய் வீதம்,நூறு கிலோ வாங்கி இருக்கிறோம்,அதற்கு முதல் போட்டது, 5*100 கிலோ = 500 ரூபாய். இப்பொழுது இவரிடம் வாங்கிய 300 கிலோவின் முதல் 300* 3 ரூபாய் ஒரு கிலோ = 900 ரூபாய். மொத்த முதல் 500 + 900 = 1400 ரூபாய். கைவசம் தக்காளி இருப்பு 100 (பழையது) + 300 (புதியது ) = 400 கிலோ. இப்பொழுது ஒரு கிலோ தக்காளியின் கொள்முதல் விலை 1400 ரூபாய் / 400 கிலோ = 1 கிலோ நம் தக்காளியின் விலை வெறும் 3.50 காசுகள் தான்.

இப்பொழுது நாலு ரூபாய்க்கு விற்றாலும் லாபம்தான், பத்தாயிரம் கிலோ தக்காளி விற்பவரின் விலையினை  விட நாம் கொஞ்சம் தான் அதிகம். மறு நாள் போட்டி இல்லாமல் இருந்தால் ஒரு நூறு கிலோ மட்டும், கிலோ 6 ரூபாய்க்கு விற்றால் கொள்ளை லாபம். இப்பொழுது புரிகிறதா முதலீட்டு நிர்வாகத்திருக்கு ஏன் 40% முக்கியத்துவம் என்று.? ஆனால் நாம் இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை,டோக்கன் போடுறவன மட்டும் நம்பி தக்காளி வியாபாரம் செய்தால் எப்படிங்க லாபம் வரும். ஒரு தக்களிக்கே இப்படி என்றால், ஷேர் மார்க்கெட்டில் முதலீட்டு நிர்வாகம் தேவையா? இல்லையா? கண்மூடித்தனமா டிரேடு செய்து விட்டு மார்க்கெட் சூதாட்டம் என்றால் யார் என்ன செய்ய முடியும். அது மட்டும் இல்லை, சந்தை நிலவரம் தெரியாமல் கிலோ 5 ரூபாய் என்று 100 கிலோ வாங்காமல் 1000 கிலோ வாங்கி இருந்தால், ஆண்டவனால கூட அந்த வியபாரியைக் காப்பாற்ற முடியாது இல்லையா? இது மாதிரி தாங்க. நாம் எவ்வளவு ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்யப் போகிறோம்.எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும்,எவ்வளவு லாபம் என்பதை எல்லாம் ஆராயாமல் டிரேடு செய்தால் என்ன செய்ய முடியும். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சாம்பார் போல்தான், அது அது தேவையான அளவிற்குக் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் நாம் இண்டிகேட்டர் தாண்டி நாம் யோசிப்பதும் இல்லை, கமிசனுக்காக ப்ரோக்கர்களும் யோசிக்க விடுவதில்லை.

இங்கு மனநிலையும் மிக  முக்கியம், பத்தாயிரம் கிலோ வந்ததும்,போச்சுடான்னு நஷ்டத்துக்கு வித்துட்டு வீட்டுக்குப் போய் இருந்தா? நான் சொல்வது புரிந்து கொள்ள முடிகிறதா?
அதனால் ஒருத்தர் அவர் ப்ரோகார இருந்தாலும்,இல்லை ஒரு தெரிஞ்ச டிறேடரா இருந்தாலும்  சொன்னதெல்லாம் நடக்கும் என்று கண் மூடித்தனமாக நம்பி டிரேடு செய்ய வேண்டாம். துணைக்கு ஆள் தேடும் டிரேடர்கள் நிறைய உண்டு. உன்னைய நாய் எத்தன எடத்துல கடிச்சு இருக்கு? மூனா, நல்ல வேலை என்னைய ரெண்டு எடத்துல தான் கடுச்சு இருக்கு என்று ஆறுதல் அடைபவர்கள் நிறையப் பேர் சந்தையில் இருப்பார்கள். ஆனால் கையப் புடுச்சு, தோல் மேல கைபோட்டு அன்பா, நாய் இருக்கிற பக்கம் கூட்டிப் போனது அவனாத்தான்  இருப்பான்,ஜாக்கிரதை.


பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.