10 December 2013

ஒயிட் லேபில் மற்றும் போலி கம்பெனி மோசடி –ஜாக்கிரதை

 பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


நிறைய ஜாக்கிரதையான விசயங்களை நாம் பார்த்து வருகிறோம், 90% மேலான நிறுவனகள் அனுமதி பெறாத போலி நிறுவனங்கள் என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது. எத்தகைய கவர்ச்சி கரமான விளம்பரங்கள் தந்தாலும் ஏமாற வேண்டாம்.
நீங்கள் முதலீடு செய்கின்ற நிறுவனங்கள் எந்த நாட்டில் உள்ளதோ அந்த நாட்டின் பதிவு மற்றும் அனுமதி கட்டாயம் அவசியம். கவனமாகச் செயல் படவும்,இல்லையெனில் சொந்தச் செலவில் சூன்யம் வைத்தது போலாகி விடும்.
ஒரு நிறுவனத்தின் அனுமதியினை நீங்கள் சரியாகச் சோதனை செய்து முடித்தாலே உங்கள் முதலீடு பெரும்பாலும் வீணாய்ப் போகும் வாய்ப்பு மிகவும் குறைவு.
இப்பொழுது மிகவும் பிரபலமான மோசடி முறைகளில் ஒன்று தான் ஒயிட் லேபில் கம்பெனி என்பது. –ஜாக்கிரதை.
ஒயிட் லேபில் என்பது என்ன? உங்களுக்குப் புரியும்படி ஒரு உதாரணம் சொல்கிறேன். பெப்சி பாட்டிலுக்குள் லோக்கல் குளிர்பானத்தை அடைத்து வைத்து விற்பார்கள், பார்த்து இருக்கிறீர்களா? அதுபோல் தான் இதுவும், ஒரு வேலை இதனை நாம் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஒரு மருந்து பாட்டிலில் போலியான மருந்தைக் கலந்து உங்களிடம் விற்றால் உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? அதுபோல் தான் இந்த ஒயிட் லேபில் கம்பெனி என்பது. நீங்கள் ஒருவேளை அந்த குளிர் பானத்தைக் குடித்து பாதிப்பு வந்தால் பெப்சி உங்களுக்கு நிவாரணம் தருமா? அதுபோல் தான் முறையான அனுமதி இல்லாத நிறுவனத்திடம் நாம் முதலீடு செய்யாமல் எங்கோ முதலீடு செய்தால்,  நமது தவறுக்கு யார் என்ன செய்ய முடியும்?
நீங்கள் டெமோ அக்கௌன்ட் டிரேடு செய்து இருந்தால் நான் சொல்வது உங்களுக்கு இன்னும் தெளிவாகப் புரியும். உங்கள் பெயரில் கூட ஒரு டிரேடிங் கம்பெனி ஆரம்பிக்க முடியும். இப்பொழுது விசயத்துக்கு வருவோம். உதாரணமாக ஒருவர்  எக்ஸ் போரெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு கம்பெனி ஆரம்பித்து சென்னையில் ஆபீஸ் வைத்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன நினைப்பீர்கள், அப்பாட இனிமேல் அமெரிக்காவில் நாம் முதலீடு பண்ண வேண்டாம், இந்தியாவிலேயே அதுவும் தமிழ்நாட்டிலேயே  முதலீடு பண்ணலாம் என்ற நிம்மதியோடு அவரிடம்  சென்று  முதலீடு செய்வீர்கள், அவரும் உங்களிடம் எக்ஸ் கம்பனியின்  டிரேடிங் சாப்ட்வேர், யூசர்ஐடி (user id ) பாஸ்வோர்ட் எல்லாம் தருவார். உங்களுடைய அக்கௌன்ட் ஓபன் செய்து நீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் கணக்கில்  நீங்கள் செலுத்திய தொகை டாலராக வரவு வைக்கப் பட்டு இருக்கும்,உங்களுக்கு மகிழ்ச்சி தாங்காது, ஆனால் இனிமேல் தான் சங்கு. அதற்கு முன்
டெமோ அக்கௌன்ட் பற்றி  ஒரு பார்வை:
ஒரு ஒரிஜினல் அக்கௌண்டில் என்ன மார்கெட் ப்ரைஸ் வருகிறதோ, அதே ப்ரைஸ் தான் டெமோ அக்கௌன்ட்டிலும் வரும். ஆனால் நீங்கள் ஒரிஜினல் அக்கௌண்டில் டிரேடு செய்யும் பொழுது உங்கள் ஆர்டர் ஒரிஜினலாக வாங்கப்படும். ஆனால் டெமோ அக்கௌண்டில் டிரேடு செய்யும்போது  உங்கள் ஆர்டர் ஒரிஜினலாக வாங்கப்படாமல்,வாங்கப்பட்டது போல் உங்கள் அக்கௌண்டில் காட்டப்படும். அதாவது ஒரிஜினல் அக்கௌண்டில் உங்கள் ஆர்டர் எக்ஸ்சேஞ் (exchange ) குச் செல்லும், டெமோ அக்கௌண்டில் உங்கள் ஆர்டர் எக்ஸ்சேஞ் (xchange ) குச் செல்லாமல் வெறுமனே வாங்கப்படும் அதுபோல் விற்கப்படும்.
இந்த ஒரு முறையில் தான் எல்லா விதமான டெமோ அக்கௌன்ட்களும் செயல்படுகின்றன.
அதுபோல தான் 99% ஒயிட் லேபில் மற்றும் போலிக்  கம்பனிகள் செயல்படுகின்றன, உங்கள் பணம் அவர்களிடம்  வரும், அவர்களும்  உங்கள் அக்கௌண்டில் உங்கள் பணத்தை டாலராக போலியாக வரவு வைத்து வைத்து விடுவார்கள். ஆனால் உங்கள் டிரேடை மட்டும் எக்ஸ்சேஞ்க்கு அனுப்ப மாட்டார்கள். உங்கள் லாஸ் எல்லாம் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள், லாபம் வந்தால் தர வேண்டுமே அப்பொழுது என்ன செய்வார்கள் என்கிறீர்களா? ஏங்க....எத்தனை பேர் லாபத்தோடு டிரேடு செய்கிறார்கள், பத்துப் பேரிடம் எடுத்து ரெண்டு பேருக்கு கொடுத்து போக எட்டுப் பேர் காசு லாபம் தானே. அது மட்டும் இல்லை ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் கம்பெனி காணாமல் போய் விடும். ஆனால் முறையாக அனுமதி பெற்ற நிறுவனங்கள் இந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய முடியாது. இது ஒரு முறை மட்டும் அல்ல இன்னும் பல வழிமுறைகளில் மோசடிகள் உண்டு- ஜாக்கிரதை.
அதுமட்டும் இல்லாமல் நிறைய ப்ரோக்கர்கள் வேறு ஒரு கம்பெனியோடு சேர்ந்து கமிசனுக்கு ஆசைப் பட்டு ஒயிட் லேபில் ஆரம்பிப்பார்கள், அதாவது ராசி கம்பெனி பணம் வாங்கி தூசி கம்பனியிடம் கொடுக்கும், தூசிக் கம்பெனி மொத்தமாகத் தொடச்சுட்டு போய்டுவான், பணம் போட்டவன் அதோ கதி தான். இப்பொழுது புரிகிறதா நான் ஏன் அனுமதி பெறாத நிறுவனங்களிடம் பணம் முதலீடு செய்ய வேண்டாம் என்று சொல்கிறேன் என்று.? ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஒன்றும் புரியாது. லேபில் முக்கியம் இல்லை உள்ளே இருக்கும் சரக்கு தான் முக்கியமான விஷயம் என்பது உங்களுக்குப் புரிந்தால் சரி.

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.