10 December 2013

அனுமதி பெறாத நிறுவனங்கள் - ஜாக்கிரதை

 பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

எல்லா வங்கிகளுக்கும் RBI ( Reserve Bank of India ) தான் அனுமதி வழங்குகின்றன. ஆனால் ஒரு வங்கி லோன் தருவதற்கு அதிகப் படியான ஆவணங்கள் கேட்கின்றன, மற்றொன்று ஒரே ஒரு காசோலை கொடுத்தாலே லோன் தருகின்றன, எப்படி இந்த வித்தியாசம்?

இதை மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது, சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் வங்கியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், சில வங்கிகள் தோராயமாக 70% (Rs.70000) தொகையினை அரசு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வார்கள்,மீதம் அவர்கள் கைகளில் இருப்பது 30% (Rs 30000)  மட்டுமே. அதைத் தான் அவர்கள் கல்விக் கடன்,வாகனம்,வீடு,தொழில் மற்றும் பல கடன்கள் வழங்கப் பயன் படுத்துவார்கள். இருக்கும் கொஞ்சம் தொகையையும் அவர்கள் வாரி வழங்க முடியாது, அதனால் தான் அவர்கள் நிறைய ஆவணங்கள் லோன் வழங்கும் பொழுது கேட்பார்கள். ஆனால் சில வங்கிகள் தோராயமாக 30% மட்டுமே அரசு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.அவர்களின் கைகளில் இருப்பதோ அதிகம், அதனால் தான் அவர்கள் ஒரு சில ஆவணங்கள் இருந்தாலே லோன் தருகிறார்கள். ஆனால் மேலோட்டமாகப் பார்க்கிற பொழுது எல்லாம் RBI  அனுமதி பெற்றவைதான்.
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் அரசுப் பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் அனுமதி தருவது அரசு தான், ஆங்கிலமும்,தமிழும் மொழிதான் ஆனால் இரண்டிற்கும் உள்ள மதிப்பு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

அது போலவே எல்லா போரெக்ஸ் கம்பெனிகளும் ஒன்று போலத்தான் தெரியும், ஆனால் அடிப்படையில் நிறைய வேறு பாடுகள் உண்டு, நீங்கள் டிரேடு செய்யும் பொழுது ஒன்று போலதான் இருக்கும்,பெரிய வித்தியாசம் தெரியாது, ஆனால் பாதிப்பு வரும் பொழுது உங்கள் நிலைமை பிரேக் இல்லாத வாகனம் போல் ஆகிவிடும்.
இந்தியாவில் பங்குச் சந்தையினை கண்காணிக்க SEBI செபி என்ற அமைப்பு உள்ளது போல,ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு அமைப்பு உள்ளது, ஒரு அமெரிக்கக்காரர் இந்தியாவில் முதலீடு செய்கின்ற பொழுது அவருடைய முதலுக்கு செபி பொறுப்பு வகிக்கிறது. டிரேடு செய்து  நஷ்டம் வந்தால் செபி பொறுப்பு அல்ல, அவர் முதலீடு செய்த நிறுவனம், அவர் முதலீடு செய்த ப்ரோக்கர் நிறுவனம், மற்றும் சில காரணங்களால் முதலீட்டாருக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற பொழுது செபி பாதுகாப்பு அளிக்கிறது. அந்த முதலீட்டாளர் செய்ய வேண்டியதெல்லாம் முதலீடு செய்யும் முன்னர் அதற்கு, அந்த முதலீட்டுப் ப்ரோகருக்கு செபி அனுமதி வழங்கி உள்ளதா என்பதைக் காட்டாயம் பார்க்க வேண்டும். ஒருவேளை செபி அனுமதி இல்லாத ஒன்றில் அவர்  முதலீடு செய்தால் கட்டாயம் 100%  செபி பொறுப்பு ஏற்காது.

அது போலத்தான் நாமும் ஒரு நாட்டில் முதலீடு செய்கின்ற பொழுது, அந்த நாட்டின் அமைப்பு அனுமதி பெறாத நிறுவனத்தில் முதலீடு செய்கின்ற பொழுது நம் பணத்தை இழப்பது நிச்சயம். ஒன்றை மறக்க வேண்டாம், எல்லா நாட்டிலும் ஆட்கள் ஏமாற்றவும்,ஏமாறவும் செய்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். ஆனால் ஏமாற்றுகிற எல்லா நிறுவனங்களும், ப்ரோகர்களும் கூட நாங்களும் அனுமதி பெற்றுள்ளோம் என்பதைக் கூற மறப்பதில்லை. ஒரு நிறுவனம் அனுமதி பெற்றுள்ளோம் என்று கூறும் பொழுது நீங்கள் அனுமதி எண்ணினைக்  கேட்கக் தவறக் கூடாது. நிறைய நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளோம் என்பதை கூறுவார்கள் அல்லது வெப்சைட்டில் சொல்லி இருப்பார்கள், கண்மூடித் தனமாக நம்ப வேண்டாம், ஒரு வேலை அனுமதி நம்பர் வழங்கினாலும் அது அவர்களின் அனுமதி நம்பர் தானா? என்று தெளிவு படுத்த வேண்டும்.

நான் உங்களின் தெரிந்து கொள்ளுதளுக்காக FXCM -  இன் அனுமதி எண்ணினை இங்கு பயன்படுத்துகிறேன். ஒரு நிறுவனம் (NewYork) USA இல் அனுமதி பெற்று இருந்தால்  NATIONAL FUTURES ASSOCIATION இன் அனுமதி எண் கட்டாயம் வேண்டும், NFA#0308179 என்று அனுமதி எண் வழங்கி இருப்பார்கள். ஒவ்வொரு நிறுவனத்தின் வெப்சைட்டிலும் Regulations என்ற பக்கத்தில் இந்த தகவல் இருக்கும், தயவு செய்து அனுமதி எண் இல்லாத நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.
For Example:
என்ற பக்கத்திற்கு சென்று அவர்கள் தரும் அனுமதி எண்ணினைக் காணலாம், அது மட்டும் அல்ல அவர்கள் ஒருவேளை அனுமதி எண் தந்து இருந்தாலும் அதைக் கண் மூடித் தனமாக நம்ப வேண்டாம், அது முறையான மற்றும் சரியான அனுமதி எண் தானா? என்பதனையும், இப்பொழுதும் அந்த அனுமதி எண் நடைமுறையில் உள்ளதா என்பதையும்  கண்காணிக்க வேண்டும். 90% - கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதி பெறுவதில்லை. ஜாக்கிரதை.
NFA இல் ஒரு நிறுவனம் அனுமதி பெற்று இருந்தால்,
http://www.nfa.futures.org/basicnet/welcome.aspx      என்ற இணையதளப் பக்கதிற்குச் சென்று அவர்களின் அனுமதி எண்ணினை சோதனை செய்து கொள்ள மறக்க வேண்டாம். ஒருவேளை அந்த நிறுவனம் UK  இல் அனுமதி பெற்று இருந்தால் FINANCIAL CONDUCT AUTHORITY –இன்  அனுமதி எண் காட்டாயம் பெற்று இருக்க வேண்டும், FCA#217689 என்று அனுமதி எண் வழங்கி இருப்பார்கள்.
என்ற இணையதளம் சென்று அனுமதி எண்ணினை சோதனை செய்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலியாவில் அனுமதி பெற்று இருந்தால் AUSTRALIAN SECURITIES & INVESTMENTS COMMISSION  - இன் அனுமதி கட்டாயம் தேவை.
என்ற இணையதளம் சென்று அனுமதி எண்ணினை சோதனை செய்து கொள்ளலாம். 
ஹாங்காங் இல் நிறுவனம் அனுமதி பெற்று இருந்தால்,
SECURITIES & FUTURES  COMMISSION  இன் அனுமதி கட்டாயம் பெற்று இருக்க வேண்டும்.
என்ற இணையதளம் சென்று அனுமதி எண்ணினை சோதனை செய்து கொள்ளலாம்.  இந்தியாவில் அனுமதி பெற்று இருந்தால் SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA  இன் அனுமதி அவசியம் தேவை.
என்ற இணையதளம் சென்று அனுமதி எண்ணினை சோதனை செய்ய மறக்க வேண்டாம்.
மறுபடியும் சொல்கிறேன் ஜாக்கிரதையாகச் செயல்படாவிட்டால், உங்களின் பணம் எல்லாம் ஏமாறவும் இழக்கவும்  நேரிடும். ஜாக்கிரதை.
அனுமதி இல்லாத நிறுவனங்களிடம் எக்காரணம் கொண்டும் முதலீடு செய்ய வேண்டாம்.

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.