16 September 2013

ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


போரெக்ஸ்:ஜாக்கிரதை!ஜாக்கிரதை!!ஜாக்கிரதை!!!

முதலீடு செய்யுங்கள், ஒரே மாதத்தில் இரட்டிப்பு, இலவச அறிமுக வகுப்பு ஒரு முறை அட்டன்ட் பண்ணி விட்டால் அடுத்த மாதமே நீங்கள் அம்பானி தான், ஒரு லட்சம் மதிப்புள்ள சாப்ட்வேர் இலவசம்
அரிய வாய்ப்பு நழுவ விட வேண்டாம், என்றெல்லாம் விளம்பரம் பார்த்ததும் உங்களையே உங்களால் கண்ட்ரோல் பண்ண முடிய வில்லையா? இலவசம் தானே ஒரு முறை பார்த்து விட்டு வந்தால் தான் என்ன? என்று உங்கள் மனம் அலை பாய்கிறதா? உங்களைச் சொல்லிக் குற்றம் இல்லை, இலவசம் என்ற வார்தையிலேயே “வசம் இருக்கிறதே, அது உங்களை வசப் படுத்தாமல் விடுமா என்ன?

நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன், அதற்கெல்லாம் நீங்கள் எதார்த்தமான பதில் சொல்லுங்கள் அது போதும். நீங்கள் உங்கள் மனைவி,பிள்ளைகளைப் பட்டினி போட்டு விட்டு, அவர்கள் பட்டினி கிடந்தாலும் பரவா இல்லை என்று அடுத்தவர் பிள்ளைகளுக்கு உணவு அளிப்பீர்களா?

நீங்கள் உண்மையிலேயே ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கின ஒரு பொருளை இலவசமாகக் கொடுப்பீர்களா?

ஒரு லட்சம் மதிப்புள்ள பொருளை, இலவசமாகத் தருகிறேன் என்று சொல்வதற்காக பல ஆயிரங்கள் உங்கள் கைக் காசையும் கொடுத்து நீங்கள் விளம்பரம் வேறு கொடுப்பீர்களா? உண்மையிலேயே அந்த அளவிற்கு நீங்கள் --------------? சொல்வதற்கு வார்த்தை இல்லை, அதற்காகத் தான் -----------.

நீங்கள் உங்கள் வாழ் நாளில் எப்போதாவது பிச்சை
கேட்ட ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது உண்டா? ஆயிரம் வேண்டாம் நூறு, அல்லது ஐம்பது இதுவும் வேண்டாம் பத்து. அப்பாட...பத்து ரூபாய் கேட்டகிரியில் பல பேர் வந்து விட்டோம்.

இது கூட வேண்டாம், உங்கள் பிள்ளையைக்  கூட நாளை உங்களைக் காப்பாற்றுவான் என்ற எதிர் பார்ப்பே இல்லாமல் படிக்க வைப்பீர்களா?

எலிப் பொறியில் மாட்டும் வரை,எலிக்கு வைக்கும் கருவாடு கூட இலவசம் தான், ஆனால் எலி மாட்டிய பிறகு இலவசக் கருவாட்டிற்கு எலி கொடுக்கும் விலை என்ன தெரியுமா? அதன் உயிர். நான் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? 

ஒருவரால் ஒரு லட்சம் கொடுத்து ஒரு சாப்ட்வேர் வாங்கி உங்களுக்கு அதனை இலவசமாகத் தர முடியும் என்றால், வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு அவர் ஏன் மார்க்கெட் பற்றி பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டும்? சின்ன புழுவைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது தான் இது. எத்தனை விளம்பரங்கள்  மார்க்கெட் என்பது  மிகப் பெரிய சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்ற உண்மையை உள்ளது உள்ள படிச் சொல்கிறது. பத்தாயிரம்,இருபதாயிரம் என்று செலவு செய்து விளம்பரம் தருகிறார்கள், நியாயம் தர்மம் எல்லாம் பார்த்தால் அவர்களுக்கு கை நஷ்டம் தான் வரும், அதனால் அவர்கள் யாரைப் பற்றியும் கவலைப் படுவது இல்லை,கவலைப் படவும் முடியாது. நீங்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இன்னும் சிலர், ஒரு சில லாபம் வந்த அக்கௌன்ட் மட்டுமே காட்டி, நாங்கள் ஒரு சில நாளிலேயே இரண்டு மடங்கு, ஐந்து மடங்கு லாபம் எடுத்துள்ளோம் இதோ ஆதாரம் என்பார்கள். நஷ்டம் வருவதற்கு 100%  வாய்ப்பே இல்லை என்பார்கள். இன்னொருவரின் அக்கௌன்ட் லாபம் வந்து விட்டது என்பதற்காக உங்கள் அக்கௌன்ட்டும் லாபம் தான் வர வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. போன மாதம் வரை சுனாமி வராமல் இருக்கலாம்,ஆனால் இந்த மாதம் சுனாமி வந்தால் அது மார்கெட்டைப் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?எனவே மார்கெட்டில் கட்டாயம் ரிஸ்க் உள்ளது என்பதைக் கூற வேண்டும்,ரிஸ்க்கே இல்லை என்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள், ஜாக்கிரதை.

நாளை நடப்பது நம் கையில் இல்லை, சில தொழில்களுக்கு வேண்டுமானால் பழைய காலத் தகவல் உதவும், ஆனால் டிரேடு என்பது போன மாதம் போல இந்த மாதமோ, நேற்று போல் இன்றோ கட்டாயம் இருக்காது,இருக்கப் போவதும் இல்லை.சிலர் நடந்து முடிந்த மார்க்கெட்டைக் காட்டி எங்கள் இன்டிகேட்டர் பார்த்தீர்களா இங்கு இருந்து இங்கு வரை ஒரே டிரேடு தான்,அள்ளி இருக்கலாம் என்பார்கள். நடந்து முடிந்த மார்க்கெட் என்பது செத்த பிணம் மாதிரி, எப்படி வேண்டுமானாலும் போஸ்ட் மாடம் பண்ணலாம்,யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. நிறைய இடங்களில் டாக்டர் வருவதற்குள் அந்த அசிஸ்டன்ட் பாதி வேலையை முடித்து விடுவார், ஆனால் ரியல் மார்கெட் என்பது உயிரோடு இருக்கும் நோயாளி போன்றது, அவரைக் குணப்படுத்த கட்டாயம் மருத்துவ அறிவு தேவை, இல்லாவிடில் உயிருக்கே ஆபத்தாகிவிடும். 

இலவச அறிமுக வகுப்பு,அதுவும் ஸ்டார் ஹோட்டலில் அந்தச்  செலவை எல்லாம் அவர்கள் வசூல் பண்ண வேண்டாமா? மக்களும் ஸ்டார் ஹோட்டலில் வைத்து நடத்துவதால் விஷயம் உள்ளவர் என்றோ, விடிவு காலம் பிறக்கும் என்றோ,எப்படியோ கவர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறார்கள். இறுதியாகச் சொல்ல வேண்டும் என்றால் யார் எல்லாம் செலவு செய்கிறார்களோ, அவர்கள்  அதனைப்  பல மடங்கு எடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு தான் செலவு செய்கிறார்கள். நானும் அப்படிதான், ஏனெனில் என் குடும்பத்தைப் பட்டினி போட்டு உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற நான் ஒன்னும் தியாகி அல்ல. எனவே எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்,அந்த முதலீட்டில் ரிஸ்க் எவ்வளவு எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். யாரையும் நம்பி டிரேடு செய்ய வேண்டாம். கண்ணால் காண்பதும்,காதால் கேட்பதும்,தீர விசாரிப்பதும் கூடப் பொய் தான், அது அடுத்தவருக்கு வேண்டுமானால் மெய்யாக இருக்கலாம், ஆனால் உங்கள்  டிரேடில் உங்களுக்கு லாபம்  வந்தால் தான் மெய்.

பூ விழுந்தால் நான் ஜெயிப்பு, தலை விழுந்தால் நீங்கள் தோர்ப்பு என்ற ஜாதிதான் அவர்கள். எது விழுந்தாலும் ஜெயிப்பு அவர்களுக்குதான். ஜாக்கிரதை.

நீங்கள் பணம் கட்டி பயிற்சியில் சேர்ந்தாலும் பணம் அவர்களுக்குத்தான், நீங்கள் இன்டிகேடட்டர் வாங்கினாலும் பணம் அவர்களுக்குத்தான், நீங்கள் பணம் முதலீடு செய்து டிரேடு செய்யும் போது கூட உங்களுக்கு லாபமோ  நஷ்டமோ அவர்களுக்கு அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை, அவர்களுக்குக் கமிசன்(பணம்) வந்து விடும், இன்னும் சிலர் நீங்கள்  லாபம் பெற்றாலும், லாபத்திலும் பங்கு, நஷ்டம் வந்தால் மட்டும் அவர்களுக்குப் பங்கும்  இல்லை, கண்டு கொள்ளவும் மாட்டார்கள் ( அவர்கள் தான் அடுத்த ஸ்டார் ஹோட்டலில் பிசியாக இருப்பார்களே..பாவம் உங்களை எப்படி கண்டு கொள்ள முடியும் )

இப்போது புரிகிறதா? எதற்கு இவ்வளவு இலவசம் என்று? ஒரு மரத்தில் ஒரு கல் எறிந்து   ஒரு பழம் விழுந்தாலே மரம் காலி ஆகி விடும், ஆனால் ஒரு கல் எறிந்தால் நான்கு ஐந்து பழம் விழுந்தால் யார் தான் சும்மா இருப்பார்கள்? அதிர்ச்சியாக இருக்கிறதா? இப்போது புரிகிறதா? ஏன் ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!  என்று மூன்று தடவை சொன்னேன் என்று. ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? அதிர்ச்சி இப்போதுதான் ஆரம்பம் போகப் போக இன்னும் பெரிய அதிர்சிகள் காத்து இருக்கிறது.

ஜாக்கிரதை-தொடரும்.......

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும் .