16 September 2013

பேராசை பெரும் நஷ்டம்.

 பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


போரெக்ஸ்: பேராசை பெரும் நஷ்டம்.  

பொன் முட்டை இடும் வாத்தை ஒரே நாளில் அறுத்த கதை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். ச்சே.... 1 லாட்டிற்குப் பதிலாக 100 லாட் எடுத்திருந்தால் 100 மடங்கு லாபம் வந்து இருக்குமே என்றெல்லாம் நடந்து முடிந்த மார்க்கெட்டைப் பார்த்து கனவுக் கோட்டை எல்லாம் கட்டக் கூடாது. ஒரு பொசிஷன் எடுத்தால் நமக்கு வருவதை விட, நாம் இழப்பது என்ன? என்பதைப்  பற்றித் தான் நம் கவனம் அதிகமாக இருக்க வேண்டும். வந்தால் சந்தோசம் தான்,ஆனால்  நிறைய டிரேடர்களுக்குப் பிரச்னையே  பொசிஷன் எவ்வளவு எடுக்க வேண்டும் என்பதில்தான்.

டிரேடு என்பதும் ஒரு மறைமுக யுத்தம் தான், நீங்கள் பழைய கால சினிமாவில் போர்க் காட்சி பார்த்து இருக்கிறீர்களா? சண்டை போடும் போது உடனே பெரிய ஆயுதம் எடுக்க மாட்டார்கள், எதிரியின் பலம் அறிய ஒரு அம்பு மட்டும் பாய்ந்து செல்லும், அடுத்து நாலு அம்பு,அதன் பின் நெருப்பு அம்பு...இப்படியாகச் சென்று கடைசியில் தான் பெரிய ஆயுதம் மூலம் எதிரியைக் கொல்வார்கள்,பார்த்து  இருக்கிறீர்களா? இது மறைமுகமாக எதை குறிக்கிறது என்றால், ஒவ்வொரு முறையும் அவர்கள் சும்மா யுத்தம் செய்யவில்லை, எதிரியை சோர்வடையச் செய்து... சோர்வடையச் செய்து...கடைசியாக அவர்களை அழிப்பார்கள். 

எடுத்த எடுப்பில் பெரிய ஆயுதம் அனுப்பி இருந்தால்,எதிரி சோர்வில்லாமல் முழு பலத்தோடு இருப்பதால், அந்த ஆயுதத்தை முறியடித்து  இருக்க வாய்ப்பு உண்டு. ஒரு வேலை எதிரி பெரிய ஆயுதத்தை முறியடித்து இருந்தால் இன்னொருவரின் நிலை அதோ கதிதான். அது போலத்தான் 99% டிரேடர்கள் எடுத்த எடுப்பிலேய 10,000ரூபாய் வைத்து இருந்தால்                     9,000 ரூபாய்க்குப் பொசிஷன் எடுத்து விடுவார்கள். 100 பிப்ஸ் அல்லது புள்ளிகள் ரிவர்ஸ் ஆனாலும் 10,000 ரூபாயும் ஒரே டிரேடில் காலி ஆகி விடும். இப்படி டிரேடு செய்தால் நீங்கள் எப்படி மார்க்கெட்டில் தாக்குப் பிடித்து நிற்க முடியும்? எதிரியை எப்படி வெல்ல முடியும்? எப்படி கற்றுக் கொள்ள முடியும்? 

நீங்கள் 10,000 ரூபாய் வைத்து இருந்து 100 ரூபாய்க்கு மட்டும் பொசிஷன் எடுத்து இருந்தால்,நஷ்டம் என்பதும் மிகக் குறைவு, அடுத்த நான்கு அல்லது ஐந்து டிரேடுகளில் கூட நீங்கள் அந்த நஷ்டத்தை சரி செய்து லாபமாக மாற்றி இருக்க வாய்ப்பு உண்டு. இதைவிட முக்கியமான விஷயம் நீங்கள் மார்க்கெட்டில் நிதானமாகக் கற்றுக் கொண்டும் அதோடு கூடப் பணமும் பார்க்கலாம் இல்லையா? அனுபவம் கூடக் கூடத்தான் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றமும் அதிகம் என்பது உண்மைதானே?

பணம் சம்பாதிக்க இயற்கை ஒரு நியதி வைத்து இருக்கிறது தெரியுமா? கஷ்டப் படாமல் எதுவும் வராது,அப்படியே வந்தாலும் அதுவும் நிலைக்காது என்று நீங்கள் கேள்விப் பட்டது உண்டா? அதுபோல் தான் இங்கும்,ஒரே டிரேடில் அள்ளி விடலாம் என்றால்,ஒரு வேலை அள்ளலாம்,ஆனால் அடுத்த டிரேடில் எல்லாம் சேர்த்து கட்டாயம் சென்று விடும். பொதுவாக ஒரு தொழிலில்,உங்கள் பணத்தை முதலீடு செய்தால் என்ன ரிட்டன் திரும்ப வருமோ, அதை விட அதிகமாக டிரேடில் நீங்கள் எதிர் பார்த்தால்,கண்டிப்பாக உங்கள் பணத்தை இழப்பது உறுதி. எழுதி வேண்டுமானாலும் கொடுக்க நான் தயார்.  ஏனெனில் இதுவும் ஒரு தொழில்தான், இது ஒன்னும் பணம் காய்க்கும் மரம் அல்ல. பேராசையோடு டிரேடு செய்து விட்டு மார்க்கெட்டை குறை சொன்னால் உங்கள் அறியாமையை என்ன சொல்வது?

டிரேடர்கள் அல்லது ப்ரோக்கர்கள் நிறையப்  பொசிஷன் எடுக்கச் சொன்னாலும் கண்டிப்பாக நீங்கள் எடுக்க வேண்டாம்,அவர்கள் கமிசனுக்காக எடுக்கச் சொல்வார்கள் என்பதை ஒரு போதும் மறக்க வேண்டாம், நீங்கள் போனாலும் உங்களை மாதிரி ஆயிரம் பேர்கள் அவர்களுக்கு உண்டு,அல்லது நீங்களே இன்னும் கொஞ்சம் அமௌன்ட் ரெடி பண்ணிக்கொண்டு விட்டதைப் பிடிக்க வருவீர்கள் என்று அவர்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும் என்பதை ஒருநாளும் மறக்க வேண்டாம். இன்று இந்தப் பங்கு கட்டாயம் இவ்வளவு புள்ளிகள் உயரும் என்று புரளி அல்லது ஆசை வார்த்தை கூறினாலும் மசிய வேண்டாம்,கடவுளே வந்து கனவில் சொன்னாலும் ஓவர் பொசிஷன் எடுக்க வேண்டாம். உங்கள் மன உறுதியை உடைக்கும் சூழ்நிலைகள் கட்டாயம் வரும்,ஒருவேளை அவர்கள் சொன்னது போல் நடந்தாலும் நீங்கள் மனம் மாறக் கூடாது, ஒருவேளை நடக்காமல் போனால் பாதிப்பு உங்களுக்குத் தான், அவர்களுக்கு கட்டாயம் கமிசன் வந்து விடும். 

மார்க்கெட்டின் நெளிவு சுளிவு தெரியும் வரை நீங்கள் மிக மிகக் குறைந்த  பொசிஷன் மட்டுமே எடுங்கள். இந்தியன் ஷேர்ஸ் பண்ணுபவர்கள் ஒரே ஷேரில் முதலீடு செய்ய வேண்டாம். வெவ்வேறு துறைகளில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்யவும். ஓவரால் லாபம் பார்க்க முடியும். ஒவ்வொரு அடியாக நடந்தால்,ஓராயிரம் மைல்கலைக் கூட கடந்து விடலாம்,ஆனால் ஒரே தாவில் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால் ஒரு மைல் கூடக் கடினம் தான்.

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும் .