08 August 2013

கொடுத்தால் கிடைப்பது ?

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

போரெக்ஸ்: கொடுத்தால் கிடைப்பது ?

மார்கெட்டில் மட்டும் அல்ல; வாழ்வில் கூட நாம் கொடுப்பது தான் திரும்பக் கிடைக்கும். விதைப்பதும் அறுப்பதும் என்ற ஒரு நியதி உள்ளது. நாம் எதை விதைப்போமோ? அதனையே அறுப்போம். நாம் மாங்காயை விதைத்து விட்டுத் தேங்காயை எதிர்பார்க்கக் கூடாது.
அதுபோல் நாம் மார்க்கெட்டிலும் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது. முதலாவது எந்த ஒரு துறையிலும் நாம் ஈடுபாட்டை முழு அர்பணிப்போடு கொடுக்காத வரை அதில் நாம் சொல்லிக்கொள்வது போல் வளரவே முடியாது. பசிக்காகச் சாப்பிட்டால் பழையதும் இனிக்கும், அதேவேளை ருசிக்காகச் சாப்பிட்டால் புதியதும் கசக்கும். அதுபோல்தான் நாம் இதனை ஒரு தொழிலாகப் (PROFESSION ) பார்க்க வேண்டும், ஒரு வாய்பாகப் (CHANCE )பார்க்கக் கூடாது.

கட்டாயம் ரிஸ்க் எடுக்க வேண்டும் :

ஓட்டுனர் எப்படி ரிஸ்க் எடுக்கிறார் பார்த்தீர்களா? தன் உயிரையே அடமானம் வைக்கிறார் தன் தொழிலுக்காக,மாணவன் தன் படிப்பிற்காக(தொழில்), தன் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் தியாகம் செய்கிறார்கள், இதுவும் ஒருவகை ரிஸ்க் தான், நோயாளி தன் வியாதி சரியாகத் தன் உடம்பையே ஒரு டாக்டரிடம் கொடுக்கிறார் அறுவை சிகிச்சைக்காக, இதுவும் ஒருவகை ரிஸ்க் தான். சாப்பிடும் போது கூட அடைத்துக் கொண்டு இறந்தவர் உண்டு, ஆனாலும் நாம் சாப்பிடாமலா இருக்கிறோம்? விமானம், ரயில், வாகனத்தில்  செல்கிறோம் ஒருவரை நம்பித்தானே ரிஸ்க் எடுக்கிறோம்? ஆனால் இந்தவகை ரிஸ்க் எல்லாம் தேனில் நனைத்த மருந்து மாதிரி, ரிஸ்க் ரிஸ்க் தான் . எடுத்துதான் ஆக வேண்டும்.

அதுபோல்தான் மார்க்கெட்டிலும் கட்டாயம் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும். ரிஸ்க் இல்லாமல் இவ்வளவு எடுக்கலாம், அவ்வளவு எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் தயவு செய்து...மறுபடியும் உங்கள் மேல் அக்கறையோடு சொல்கிறேன், தயவு செய்து நம்பாதீர்கள். ரிஸ்க்கின் அளவைக் குறைக்கலாமே ஒலிய, கண்டிப்பாக ரிஸ்க் எடுக்காமல் டிரேடில் பணம் சம்பாதிக்கவே முடியாது.

ரிஸ்க் என்பது என்ன?

ஒரே வரியில் சொன்னால் வரலாம்,வராமலும் போகலாம், நடக்கலாம் நடக்காமலும் போகலாம்,படித்தவுடன் வேலை கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்,காப்பாற்றலாம் இல்லை காப்பாற்றாமல் கூடப் போகலாம். இது தான் ரிஸ்க்.
நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 30% ரிஸ்க் என்பது 30,000 ரூபாய். இந்த 30,000 ரூபாய், 31,000.....32,000....33,000...40,50,60, 70,000 ரூபாய் லாபமாகக் கூட மாறலாம் அல்லது 29,000...28,0000....27,20,15,5000.....500...100...என்று நஷ்டத்தின் மேல் நஷ்டம் வந்து 30,000 ரூபாயும் இல்லாமல் கூட போகலாம். ஓபன் ஆகச் சொன்னால் இதுதான் ரிஸ்க் என்பது. நான் ஓபன் ஆகச் சொல்லிவிட்டேன், மற்றவர்கள் தேன் கலந்து கொடுப்பார்கள் நம்ப வேண்டாம்.

இதுதான் ரிஸ்க் என்பது, நீங்கள் முதலீடு செய்யும் போதே கட்டாயம் இவ்வளவு சதவீதம் தான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லவும், இவ்வளவு ரிஸ்க் எடுத்தால் என்ன லாபம் கிடைக்கலாம் என்பதைக் கேட்கவும் கட்டாயம் மறக்கக் கூடாது. இதை விட முக்கியமான விஷயம் உங்கள் முதலீடு உங்கள் பெயரில் தான் 100% இருக்க வேண்டும்,நிறைய பேர் ஏமாருவது இங்குதான். என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம். பாஸ்வோர்ட் விபரங்கள் கண்டிப்பாக உங்களிடமும் இருக்க வேண்டும்,  மெயில் ஐ டி ( MAIL ID ) உங்களுடையதாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் கண்காணிக்க முடியும். ஒருவேளை அவர்கள் பாஸ்வோர்ட் மாற்றினால் கூட உங்கள் மெயில் ஐ டி-க்கு வந்து விடும். உங்கள் மெயில் ஐ டி பாஸ்வோர்ட் கட்டாயம்  கொடுக்கக் கூடாது. காண்டாக்ட் நம்பர் கூட உங்கள் நம்பராகத் தான் இருக்க வேண்டும். நான் ஏன் சொல்கிறேன் என்றால் அக்கௌன்ட் உங்கள் பெயரில் இருந்தால் தான்,பணம் எடுக்கும் பொழுது உங்கள் பேங்க் அல்லது டி மேட் அக்கௌன்ட்க்கு பணம் வரும். அது மட்டுமின்றி, உங்களால் தினமும் கண்காணிக்க முடியும், ஒருவேளை உங்கள் டிரேடர் 30% க்கு மேல் ரிஸ்க் எடுத்தால் நீங்கள் போதும் என்று நிறுத்தி,உங்கள் மீதம் உள்ள 70% பணத்தையாவது மேலும் நஷ்டம் இல்லாமல் காப்பாற்ற முடியும். சந்தேகம் இருப்பின் என்னை மொபைலில் அழைக்கலாம். முடிந்தவரை அவர்களின் ஆலோசனையுடன் நீங்களே டிரேடு செய்வதே நல்லது. இல்லையெனில் நீங்கள் கற்கும் வரை அவர்கள் டிரேடு செய்ய அனுமதிக்கலாம். ஆனால் தினம் தோறும் கண்காணிக்க வேண்டும்.

நான் மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க் இல்லாமல் டிரேடு செய்வதோ, லாபம் பெறுவதோ கட்டாயம் முடியாவே முடியாது. ஆனால் உங்கள் ரிஸ்க் அளவை 100% முன்கூட்டியே நிர்ணயம் செய்யலாம்.

நீங்கள் ஒரு 30% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் என்னால் ஒரு மூன்று முதல் நான்கு வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும்.

50% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் இரண்டு முதல் மூன்று வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் மாதம் மாதம் இவ்வளவு கிடைக்கும் என்பதை என்னால் 100% உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மார்க்கெட் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது என்னைப் பொறுத்த வரை மட்டுமே . மற்ற டிரேடர் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்ப வில்லை. ஆனால் நீங்கள் தான் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். ரிஸ்க் இல்லாமல் பணம் கொட்டும் என்று யார் தேன் குழைத்து சொன்னாலும் நம்ப வேண்டாம்.

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும் .