07 August 2013

பார்வையாளர் - பிளேயர் – கோச்சர்

 பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


முதலில் பார்வையாளர்,பிறகு பிளேயர் பின்னர் தான் கோச்சர். இதுதான் சரியாகக் கற்றுக் கொள்ளும் முறை ஆகும். ஆனால் எந்த ஒரு துறையிலும் பார்வையாளர் மட்டும் தான் அதிகம் விமர்சகர்களாக இருப்பார்கள்.

அதுபோல் எந்த ஒரு துறையிலும் 90% மக்கள் பார்வையாளராகத்தான் இருப்பார்கள், பிளேயர் 7% இருப்பார்கள், அதிலும் கோச்சர் வெறும் 3% பேர் மட்டுமே. விளையாட்டில் கூட பார்வையாளர்கள் செய்யும் விமர்சனம் இருக்கிறதே, தாங்க முடியாத விமர்சனம். தானும் விளையாட மாட்டார்கள், விளையாடுபவரையும் விமர்சனம் செய்வதை நிறுத்த மாட்டார்கள்.

சச்சின் என்னடா அடிக்கிறான் என்பார்கள் கூலாக... ஏன் நீங்கள் போய் அடிக்க வேண்டியது தானே? உங்களுக்குத் திறமை இருந்தால் சச்சினை விட ஒரு பெரிய பிளேயர் ஆக வேண்டியது தானே? யார் உங்களைத் தடுத்தது.? இல்லை உங்களுக்குப்  பிடித்த ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர் ஆக வேண்டியது தானே? இதில் வேடிக்கை என்னவென்றால், நீங்கள் சொல்லும் விமர்சனத்தை அவர்கள் காது கொடுத்தே கேட்கப் போவதில்லை, அவர்கள் காது கொடுத்துக் கேட்பதெல்லாம் அந்த விளையாட்டைப் பற்றி அந்த கோச்சர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி மட்டுமே.  ஏனெனில் அவர் மட்டுமே அதைப் பற்றிச் சரியாகச் சொல்ல முடியும், அது மட்டுமின்றி அவர் தான் அதற்கான தீர்வையும் மிகச் சரியாகச் சொல்ல முடியும். நீங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களைப் போல அவரும் ஒரு சராசரி மனிதனாகத் தான் மாற முடியுமே ஒலிய சாதனையாளராக மாறவே முடியாது.

நாட்டில் 90% மக்கள் தானும் முன்னேற மாட்டார்கள்,அடுத்தவரையும் முன்னேற விட மாட்டார்கள். ஒரு சரித்திர உண்மை இருக்கிறது, அடுத்தவர்களை 100% நம்புகிறவர்கள் 10% அல்லது 20% மக்களால் கட்டாயம் ஏமாற்றப் படுவார்கள், ஆனால் வாழ்கையில் 100% வெற்றி காண்பார்கள். ஆனால் யாரையுமே நம்பாத ஒரு கூட்ட மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் யாரையும நம்ப மாட்டார்கள், ஏன் தன்னைக் கூட 100%  நம்ப மாட்டார்கள்,அவர்கள் வாழ்கையில் கூட அதே நம்பிக்கையற்ற நிலைதான். வெற்றி என்பது பக்கத்தில் கூட வராது.

நம்ம விஷயம் :

இதுபோல்தான் டிரேடில் கூட நாம் பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டிய ஒரு நிலை உண்டு, ஆனால் அப்பொழுது நாம் பிளேயராக அவதாரம் எடுத்து விடுவோம், பார்வையாளரக இருப்பது என்பது சும்மா இருப்பது இல்லை, நாம் வேர் விட்டு வளருவது இந்த நிலையில் தான்.  டிரேடு யார் வேண்டுமானாலும் உடனே பண்ணி விட இயலும், ஆனால் எவ்வளவு டிரேடு லாபத்தோடு குளோஸ் செய்கிறோம் என்பதில் தான் நமது வருமானம் இருக்கப் போகிறது.

உங்களின் முதலாவது இலக்கு உங்கள் முதல் தொகையினை(INITIAL AMOUNT ) பாதுகாப்பது பற்றியே இருக்க வேண்டும், அதன் பின்னர் தான் லாபம் என்பதெல்லாம். கிரிக்கெட்டில் பிளேயரின் முதல் இலக்கு ஸ்டெம்ப் அவுட் ஆகாமல் இருப்பது தான், அதன் பின்னர்தான் ரன் எடுப்பது பற்றி அவர்கள் கவனம் செல்லும், மூன்றாவது யாரிடமும் கேட்ச் கொடுத்து விடாமல் இடம் பார்த்து அடிப்பது. பந்து சரியாக வராத நேரங்களில் அவர்கள் எப்படியாவது ஸ்டெம்ப் அவுட் ஆகாமல் இருக்கத் தான் 100% கவனம் செலுத்துவார்களே ஒலிய  அப்பொழுது அவர்கள் ரன் அடிப்பது பற்றி யோசிப்பதே இல்லை.

நாமும் டிரேடில் 70% கவனம் நமது முதல் தொகையினைக் ( INVESTMENT AMOUNT ) காப்பாற்றுவதிலும், 20% கவனம் லாபம் எடுப்பதிலும், 10% கவனம் கற்றுக் கொள்வதிலும் இருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலானோர் தவறுவது இங்குதான். அவர்கள் கவனம் எல்லாம் லாபம் பற்றியே இருக்கும், அவர்கள் கற்றுக் கொள்வதை நிறுத்தும் போதே லாஸ் வருவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகி விடும். டிரேடில் யூஸ்டூ  மார்ஷின் (USED MARGIN )  யூசபில் மார்ஷின் ( USABLE MARGIN )  என்றெல்லாம் உண்டு, இதுதான் உங்கள் முதலைப் (CAPITAL AMOUNT ) பாதுகாக்க உதவும். ஒரு நிறுவனத்தின் வரவு செலவு நிர்வாகம் போன்றது தான் இந்த விஷயம் எல்லாம். இதில் மிகுந்த கவனமுடன் செயல் பட வேண்டும்.


நாம் எத்தனை டிரேடு செய்து இருக்கிறோம் என்பது இங்கு விஷயம் அல்ல, எவ்வளவு லாபம் எடுத்து இருக்கிறோம் என்பது தான் இங்கு விஷயம். கனி கொடுக்காத மரம் இருந்து என்ன,இல்லாமல் என்ன?

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும் .