16 August 2013

நேரம் தாரும் முன்னே பணம் வரும் பின்னே.

 பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


போரெக்ஸ்: நேரம் தாரும் முன்னே பணம் வரும் பின்னே.

போரெக்ஸ் மார்க்கெட்டில் நேரம் மிகவும் முக்கியம். நேரம் என்றதும் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று நினைத்து விட வேண்டாம். இங்கு நான் நேரம் என்று குறிப்பிடுவது கால அவகாசம்.

உதாரணமாக ஒரு இடத்திலிருந்து,மற்றொரு இடம் செல்ல 50KM வேகத்தில் சென்றால் 1 மணி நேரம் கால அவகாசம், 100KM வேகத்தில் சென்றால் அரை மணி நேரம் என்று கால அவகாசம் இருப்பது போல,மார்க்கெட்டிலும் கால அவகாசம் உண்டு. நாம் எடுக்கும் கால அவகாசத்தைப் பொருத்தும் நம் ரிஸ்க்கின் அளவும் மாறும்.  நான் முன்பு சொன்னது போல்தான் 4 வருடங்களில் இரட்டிப்பு என்றால் 30% ரிஸ்க் போதுமானது. இதே ஒரு வருடம் தான் இரட்டிப்புக் காலம் என்றால் ரிஸ்க்கின் அளவு கேட்கவே வேண்டாம்.

இதுமாத்திரம் அல்ல மார்க்கெட்டிலும் டெய்லி, வீக்லி,மன்த்லி போன்ற கால அவகாசங்களும் உண்டு. இதனை சார்ட் டெர்ம், லாங் டெர்ம் என்றெல்லாம் சொல்வார்கள். உதாரணமாக மாதம் 10000 ரூபாய் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து 10000 வகுத்தல் 30 நாட்கள், ஒரு நாளைக்கு தோராயமாக 333 ரூபாய் எடுத்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டெல்லாம் மார்க் கெட்டில் டிரேடு செய்யக் கூடாது. ஏன் எனில் மார்க்கெட் எல்லா நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 30% ரிஸ்க்கில் 10000 ரூபாய் லாபம் எடுக்க வேண்டும் என்ற அணுகு முறையில் மட்டும் தான் நாம் டிரேடு செய்ய வேண்டுமே ஒலிய இத்தனை நாள் என்பதையெல்லாம்  நாம் உறுதியாக முடிவு செய்து விட்டு டிரேடு செய்யக் கூடாது. 

மார்கெட்டில் லாபம் மட்டும் அல்ல நஷ்டம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதையும், அதனையும் மீறி நாம் லாபம் பார்க்க போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதை மறக்கவே  கூடாது. முக்கியமான டேட்டா வரும் நாட்களில் எல்லாம் மார்க்கெட் சுத்தமாக மூவ்மென்ட் இருக்காது, ஆனால் டேட்டா வந்த பின்னரோ கொட்டித் தீர்த்து விடும். நீண்ட கால அடிப்படையில் டிரேடு செய்யும் பொது வேண்டுமானால் நாம் கால அவகாசம் வைத்துக் கொள்ளலாம்.

இன்று மழை வரும் என்பதைக் கட்டாயம் அனுமானிக்க முடியாது, ஆனால் இந்த வருடத்திற்குள் மழை வரும் என்பதை நாம் அனுமானிக்கவே வேண்டியது இல்லை. ஏனெனில் கட்டாயம் மழை வந்துவிடும், அதுபோல்தான் குறுகிய கால அனுமானம் மற்றும் அவகாசத்தோடு டிரேடு செய்வதற்கும், நீண்ட கால அனுமானம் மற்றும் அவகாசத்தோடு டிரேடு செய்வதற்கும் உள்ள இடைவெளி. புதியதாக டிரேடு செய்பவர்கள் நீண்ட கால அவகாசம் கொடுத்து டிரேடு செய்யும் போது மார்க்கெட் பற்றிய அனுமானம் சரியாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. அதிக அளவிலான டிரேடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது, பேங்க் எல்லாம் நீண்ட கால அடிப்படையிலேயே பெரும்பாலும் டிரேடு செய்வர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நீண்ட கால அடிப்படையில் டிரேடு செய்தால் ஆவரேஜ் செய்வதும் எளிது. 100 ரூபாய்க்கு 10 ஷேர் வாங்கி லாபம் வந்தால் ஓகே,இல்லையெனில் நஷ்டம் அதிகம் ஆக வாய்ப்பு உண்டு, 100 ரூபாய்க்கு வாங்கிய 10ஷேர்  90...80...70..50..என்று நஷ்டம் வந்து மறுபடி 99 ரூபாய் வந்தால் கூட ஷேர்க்கு ஒரு ரூபாய் நஷ்டம் தான். இதற்குப் பதிலாக 100 ரூபாய்க்கு 10 ஷேர் வாங்குவதற்குப் பதிலாக 100இல் 1 ஷேர்,90ல் 1 ஷேர்,80ல் 1ஷேர் என வாங்கினால் மார்க்கெட் மறுபடி 90ரூபாய் வந்தாலே போதும் ஓவர் ஆல் லாபம் வந்து விடும். இதுபோல பல சிஸ்டம் நீண்ட கால அடிப்படையில் டிரேடு செய்தால் மட்டுமே பாலோ பண்ண முடியும். சுருக்கமாகச் சொன்னால், உங்களால் நிறையப் பணம் மறுபடி மறுபடி முதலீடு செய்ய முடியாது எனில் நீங்கள் நீண்ட கால அவகாசத்தோடு பொறுமையாக டிரேடு செய்வதே நல்லது.


அதுபோல் ஒரு இலக்கு நிர்ணயம் செய்து விட்டு போதிய அவகாசம் இல்லாமல் உடனே க்ளோஸ் செய்யக் கூடாது. நாம் நிர்ணயம் செய்த இலக்கு இன்றே வந்து விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் எல்லாம் டிரேடு செய்யவே கூடாது. டிரேடு என்பது MP3 பிளேயர் அல்ல,அது ஒரு FM ரேடியோ போல,  அவர்கள் ஒலிபரப்பும் பாடலைத் தான் நாம் கேட்க வேண்டுமே ஒலிய,நாம் நினைக்கும் நேரமெல்லாம், நாம் விரும்பும் பாடல் வரவே வராது.


அதுபோல டிரேடிலும்,நாம் ஒரு பொசிஷன் எடுத்து விட்டு நம் இலக்கு வரும் வரை கட்டாயம் காத்திருந்து தான் ஆக வேண்டுமே ஒலிய, அவசரப் படுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும் .