06 August 2013

மனம்-ஒரு-குரங்கு

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

மனதை அடக்குபவனே மாபெரும் வீரன் என்பார்கள். மனம் ஒரு குரங்கு என்பார்கள், நான் ஏன் மனம் பற்றியே சொல்கிறேன் என்றால், மனநிலைக்கும் டிரேடுக்கும் அவ்வளவு தொடர்பு உண்டு.
இப்பொழுது எங்கு பார்த்தாலும், வால்மார்ட் வர வேண்டாம் என்றும்,மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் ஒரே போராட்டம் நடப்பதைக்காணலாம். நான் ஒன்று கேட்கிறேன், நாம் அனைவரும் குடிக்காமல் இருந்து விட்டால் வியாபாரம் இல்லாமல் கடைகளை மூடித்தானே ஆக வேண்டும், ஆனால் நாம் குடிக்கவும் செய்கிறோம்,கடைகளை மூடவும் சொல்கிறோம். அங்குதான் பிரச்சனையே.

இதுபோலதான் 99% டிரேடர்கள் இலக்கை நிர்ணயம் செய்வார்கள்,ஆனால் பொறுமையோடு காத்திருக்க மாட்டார்கள். மணிக்கொரு சிஸ்டம் பாலோ ( SYSTEM FOLLOW ) பண்ணுவார்கள். இரண்டு லாஸ் வந்தால் போதும்,உடனே அந்த இண்டிகேட்டர் சரி இல்லை என அடுத்த இண்டிகேட்டர்,அதுவும் ஒரு டிரேட் லாஸ் ஆனால் போதும் மறுபடியும் அடுத்த சிஸ்டம் என குரங்கு போல தாவிக்கொண்டே இருக்கும் மனம் தான் 99% டிரேடர்களின் மிகப்பெரிய பலவீனம்.

ஒரு ஸ்திரமான மன நிலை வரும் வரையில் நாம் முறையான பயிற்சி பெற வேண்டும், மார்க்கெட்டைப் பொருத்தவரை மனம் ஒரு நிலை அடையும் வரை நாம் அதற்கு விடாத தொடர் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

டிரேடுக்குத் தேவையான மன நிலையினை அடைய நாம் எந்த விலையும் கொடுக்கத் தேவை இல்லை, முறையான பயிற்சி மட்டும் தேவை, ஆனால் அந்த மனநிலையினை அடைந்து விட்டால் அது தரும் நன்மைகள் அளவில்லாதது. இதனை அடையப் பல வழிகள் உண்டு, ஆனால் மிகவும் எளிமையான வழிமுறைகளை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். 

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும் .