08 July 2013

முதலீட்டு மேலாண்மை

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


முதலீட்டு மேலாண்மை:

இது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. நீங்கள் முதல் முதலாகச் சென்னை சென்று வர வேண்டும். உங்கள் அப்பா, அம்மா அல்லது பாஸ் யாரோ ஒருவர் 1000 ரூபாய் கொடுத்து சென்று வரச் சொன்னால், ஜெட் ஏர்வேய்ஸ் சென்று சென்னைக்கு கட்டணம் கேட்டால் 4500 என்கிறான். இது சரிப்பட்டு வராது என்று நல்ல ஒரு ட்ராவல்ஸ் ஆம்னி பஸ்ஸில் கேட்டால் அவன் எழுநூறு என்கிறான், ஏனென்றால் அது ஏசி கோட்சாம். போய் விடலாம், ஆனால் திரும்பி வரப் பணம் போதாது என்பதால், அதுவும் ரத்து.


இறுதியாகப் புகைவண்டி முன்னூறு தான்...அடடா போக வர அறநூறு தான். ரெடி சூட்டென்று கிளம்பிவிடுவோம் இல்லையா? அதுபோல்தான் முதலீட்டு மேலாண்மை என்பது. ஒவ்வொரு மார்க்கெட்டிலும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையில் முதலீட்டு மேலாண்மை செய்ய வேண்டும். போகப் போக விரிவாக லைவ் ட்ரேடிங் அக்கௌண்டில் பார்க்கலாம்.

ஆனால் இது ஒன்றில் மட்டும் நீங்கள் சரியாகக் கற்று அதன் படி நீங்கள் நடந்து விட்டால்... உங்களுக்கு லாபம் வருவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
நஷ்டம் வராது என்று அர்த்தம் இல்லை, நஷ்டத்தை விட லாபம் அதிகம் பெறலாம். கிணற்றின் ஆழம் எவ்வளவோ அதனை விட கயிறின் நீளம் அதிகமாக இருந்தால் தான், கிணற்றில் தண்ணீர் அள்ள முடியும். அதுபோல மார்க்கெட்டின் ஆழத்தை விட நம் அறிவின் நீளம் அதிகம் இருப்பின் அள்ள அள்ளப் பணம் தான்.
நான் எத்தனை முறை கேட்டாலும் இதைத்தான் சொல்வேன், மார்கெட்டில் ஒரு அரைமணி நேரத்தில் உங்கள் பணத்தைக் கொண்டு நிச்சயம் லாபம் சம்பாதிக்க சொல்லித் தர முடியும், ஆனால் அதன் படி நீங்கள் நடப்பதில் தான் வெற்றி இருக்கிறது.  மறுபடியும் சொல்கிறேன் 99.99% மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கு பொறுமையான, உறுதியான மனநிலை தான் முக்கியம்.

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனிடமும் ஆளுக்குப் பத்து லட்சம் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பணம் வாங்கியவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. அடுத்த வருடம் இதே நாளில் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.
கொடுத்த வாய்ப்பு அனவருக்கும் சமமானது. ஆனால் அடுத்த வருடம் ஒரு பிரிவினர்  பத்து லட்சத்தை இருபது லட்சமாகப் பெருக்கி இருகிறார்கள், சில பிரிவினர் பத்து லச்சமும் போய் சில லட்சங்கள் கடன் வேறு, சிலரிடம் கூடவும் இல்லை, குறையவும் இல்லை, சிலரிடம் எதுவும் இல்லை. இந்த வேறுபாடு எப்படி வந்தது? அவர்கள் மனதளவில் எப்படி அதனைப் பயன் படுத்தினார்களோ அதனுடைய வெளிப்பாடு தான் இது. முதலீட்டு மேலாண்மையில் மனநிலைதான்  மிக மிக முக்கியம்...அது போதிய பயிற்சியின் வாயிலாகக் கட்டாயம் பெறலாம்.

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்