08 July 2013

குருடன் வழி காட்டினால்

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

போரெக்ஸ்:குருடன் வழி காட்டினால்:

நீங்கள் முதல் முதலாக ஊட்டி அல்லது கொடைக்கானல் செல்லும்போது முதன் முறையாக ஊட்டி சென்ற நபர் எத்தனை நாளில் உச்சியை அடைந்திருப்பார் என்று யோசித்தது உண்டா? ஒரு ஆறு மாதம் என்று வைத்துக் கொள்வோம், அவர் ஒரு வழித்தடத்தை உருவாக்கி இருப்பார், அடுத்து சென்றவர் மூன்று மாதத்தில் சென்று இருப்பார், ஒரு ஒற்றை அடிப் பாதையை உருவாக்கி இருப்பார். அடுத்து சென்றவர் ஒரு மாதத்தில் சென்று இருப்பார், இப்படியே ஒரு விசாலாமான வழித்தடம் உருவாகி இன்று நாம் வெறும் மூன்று மணி நேரத்தில் அங்கு செல்ல முடிகிறது.
ஆனால் ஆறு மாதத்தில் சென்றவர் அந்த மலையினைப் பற்றி அதிகம் தெரிந்து இருப்பாரா? இல்லை மூன்று மணி நேரத்தில் சென்ற நாம் அதிகம் தெரிந்து இருப்போமா? நிச்சயம் அவர் தான் அதிகம் பயணித்தவர் அதனால் அதிகம் கற்றவரும் கூட அவர்தான் . எந்த மாற்றமும் இல்லை.

இப்படிதான் மார்க்கெட்டைப் பற்றி பல ஆண்டுகள் அனுபவம் உள்ள முறையான வழிகாட்டியும், ப்ரொபசனல் ட்ரேடரும் இருகிறார்கள், ஏதோ ஒன்று இரண்டு செமினார் களை அட்டன்ட் பண்ணி விட்டு, முறையான பயிற்சி இல்லாமல் டெமோவில் வொர்க் பண்ணி விட்டு நானும் அவ்வளவு எடுத்துத் தருகிறேன், தினமும் கொட்டும், தூங்கினாலும் வருமானம் வரும் என்று ஆசை வார்த்தை காட்டும் பல வழிகாட்டிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உங்கள் பேராசையின் அளவைப் பொருத்து அவர்களின் வாக்குறிதிகள் இருக்கும். ஆனால் ஒரு முறையான வழிகாட்டி, ப்ரொபசனல் ட்ரேடர் நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்ட மாட்டார். அதில் உள்ள ரிஸ்க் பாக்டர் (ரிஸ்க்கின் அளவுக் காரணங்கள்) கட்டாயம் சொல்வர்.

ஒரு முறையான வழிகாட்டியிடம், ப்ரொபசனல் ட்ரேடரிடம் அவரிடம் ஏற்கனவே நல்ல முறையில் லாபத்தோடு ட்ரேடில் இருக்கும், கிளைன்ட்களின் அக்கௌன்ட் சமரி கட்டாயம் இருக்கும். என்னிடம் 2007 to 2013 வரை உள்ள அனைத்து கிளைன்ட்களின் சமரி உண்டு. பலரின் அக்கௌன்ட் அவர்கள் எடுக்கும் ரிஸ்க் பொருத்து மூன்று மடங்கு லாபம் கூட வந்து இருக்கிறது. அவர்களின் சொந்த விபரம் தவிர அனைத்தையும் நீங்கள் செக் செய்து பார்க்கலாம். சில கிளைன்ட்கள் அவர்களின் சொந்த விபரம் கூட தருவார்கள்.

சில முறையான வழிகாட்டிகள், ப்ரொபசனல் ட்ரேடர் அதிகபடியான வாக்குறுதிகள் தருவதில்லை. நான் என்னிடம் உள்ள கிளைன்ட்களுக்கு எப்போதும் சொல்வது இதுதான், நான் மாதம் இவ்வளவு தருகிறேன் என்று என்னால் கட்டாயம் சொல்ல முடியாது. ஆனால் உங்கள் முதலுக்கு நான் உத்திரவாதம் தர முடியும். நீங்கள் ஒரு 30% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் என்னால் ஒரு மூன்று முதல் நான்கு வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும்.
50% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் இரண்டு முதல் மூன்று வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் மாதம் மாதம் இவ்வளவு கிடைக்கும் என்பதை என்னால் 100% உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மார்க்கெட் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
நன்றாக யோசியிங்கள் 4 வருடத்தில் இரட்டிப்பு என்பது 4*12 = 48 மாதங்கள், தோராயமாக மாதத்திற்கு நான் 2.08% லாபம் தருவதாக மட்டுமே நான் உத்திரவாதம் தருகிறேன். அதுமட்டும் இல்லை உங்கள் முதலீடு 70% அப்படியே இருக்கும். ஆனாலும் நான் மாதா மாதம் இவ்வளவு கிடைக்கும் என்று உறுதி சொல்வது கிடையாது. சில மாதங்களில் 5% கூட கிடைத்து இருக்கிறது. அதற்கு மேல் ரிஸ்க் எடுப்பது கிடையாது.
ஒரு ப்ரொபசனல் ட்ரேடர் கண்டிப்பாக உங்கள் முதுகில் சவாரி செய்ய மாட்டார்கள். லாபம் வந்தால் மட்டும் பங்கு, நஷ்டம் வந்தால் எனக்குத் தெரியாது என்று கை கழுவ மாட்டார்கள். அவர்கள் முதலீட்டு நிர்வாகம் பற்றி நன்கு அறிந்து இருப்பதால், ரிஸ்க்கின் அளவினை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுவார்கள். சிலர் ஒரு அளவிற்கு மேல் ரிஸ்க் எடுப்பதே இல்லை. மேலும் அவர்களின் முதலீடு மேலாண்மை பேங்க்கின் சிஸ்டம் பாலோ செய்வதால் நீண்ட கால முறையில் குறைந்த ரிஸ்க்கில் அதிக வருமானம் கிடைக்கும் வகையில் இருக்கும். பேங்க் ஒரு லட்சத்திற்கு அதிகம் மாதம் எழுநூறு தான் தருகிறார்கள் என்பதால் வெறும் பத்து சதவிகிதம் கூட ரிஸ்க் இல்லை, ஆதலால் தான் பேங்க்கின் நம்பகத்தன்மை இன்றும் குறையாமல் இருக்கிறது. ஆனால் போரெக்ஸ் மார்கெட்டில் ஒரு ஐந்து ஆண்டுகளில் மட்டுமே எவ்வளவு பிரச்சனைகள்?

என்னைக் கேட்டால் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தை பத்திரமாகப் பாதுகாப்பதும் ...உங்கள் கடமை தான். பேங்க்கில் முதலீடு செய்தால் என்ன வருகிறதோ? அதைக் காட்டிலும் ஒரு ஐந்து மடங்கு ரிஸ்க் எடுப்பதே போதுமானது என்பேன்.


வீண் வாக்குறிதிகளை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். முதலுக்கே மோசம் போகும் சூழ்நிலை வரும் போது தான், அசலாவது கிடைத்தால் பரவா இல்லையே என்று மனம் ஏங்கும். அதுவரை மனம் அங்க எவ்வளவு? இங்க எவ்வளவு தராங்க? என்றுதான் குழம்பும்,  குருடன் வழி குருட்டு வழி தான். இருவரும் குழியில் விழுவதைதக் கூடவே போய்த் தடுக்க யாரும் முடியாது. குழி இருக்கும் பாத்துப் போனு சொல்லத்தான் முடியும்.

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும் .