29 June 2013

ஆராய்ச்சியாளரா - கற்பவரா

 பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


உங்கள் வாகனம் மட்டுமல்ல, உங்கள் வாழ்வும் உங்கள் கையில்தான். பத்து கோடி ரூபாய் முதலீடு செய்து இழந்த பிறகும் ... வாழ்க்கைத்தரம் மாறாமல் அப்படியே வாழ்வோரும் உண்டு. ஒரு பத்தாயிரம் கடனுக்காக குடும்பத்தோடு மாண்டோரும் உண்டு.


பணத்தை இழந்த பிறகும், மீண்டும் அதனைச் சம்பாதிக்க நமது மனநிலை மற்றும் உடல் நிலை மற்றும் நமது குடும்பச் சூழ்நிலை கட்டாயம் உதவிகரமாக இருக்கும் என்ற சூழலில் வேண்டுமானால் நாம் கண்மூடித் தனமாக ரிஸ்க் எடுக்கலாம்.
                                                             
                                                               டிரேடுக்கு முன்


                     

                          டிரேடுக்குப் பின் 
ஒரு நொடி ரிஸ்க் எடுத்தால் சாலையைக் கடந்து விடலாம் என்பது போல, ஓரிரு மாதங்களில் அசலைத் தேத்தி விடலாம் என்ற நொண்டிச் சாக்கோடு எந்த ஒரு டிரேடும் செய்யாதீர்கள்.உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ,மிகவும் உடல் நிலை சரி இல்லை என்றால் நாம் ஏன் மருத்துவரை (DOCTOR ) நாடுகிறோம். ஏனெனில் அவர்கள் மருத்துவம் பார்க்கும் அளவிற்கு படித்து இருக்கிறார்கள், அவர்கள் மருத்துவம் பார்க்கலாம் என்றும் ஒரு அனுமதி அரசு வழங்கி இருக்கிறது நாம் ஒரு விபத்தைக் கண்டால் அதில் பாதிக்கப்பட்டவர் மயக்க நிலையில் அமைதியாக இருப்பார். நாமோ பட படப்போடு இருப்போம். ஒரு டாக்டரிடம் அவசரம் அவசரமாக ஆம்புலேன்சில்  எடுத்துச் சென்றால் அங்கு வையுங்கள் என்று கூலாகச் சொல்வார்.


காரணம் என்னவெனில் தினமும் அவர் விபத்து அடைந்தவரைப் பார்த்துப் பார்த்து, எந்த சூழ்நிலையிலும் நிதானமாக இருக்கும் மனநிலையினை அடைந்து விட்டார். எந்த ஒரு துறையிலும் இந்த நிலையினை அடைந்தவரைதான் ப்ரொபசனல் என்கிறோம்.

நாமெல்லாம் ஆரம்பத்தில் ஒரு சைக்கிள் ஓட்டிப் பழகும்போது பக்கத்தில் ஒரு பைக் வந்தாலே கீழே இறங்கிவிடுவோம்  நியாபகம் இருக்கிறதா?
 ஆனால் இன்று ஒரு கையில் பைக், கார் ஓட்டுகிறோம்.  அன்று நாம் டிரைனர் ( TRAINER )  இன்று ட்ரைவிங் பொறுத்தவரை நாமும் கூட ப்ரொபசனல் தான். வின்னர் படத்தில் கூட “ அட விடுங்க பாஸ், இவங்க எப்பப் பாத்தாலும் சும்மா நொச்சு நொச்சுன்னு அடிச்சுக்கிட்டு தான் இருப்பாங்க, அத எல்லாம் பார்த்த தொழில் பண்ண முடியுமான்னு? ஒரு திருடன் கேட்ப்பான், பார்த்து இருக்கிறீர்களா? திருட்டைப் பொறுத்தவரை அவன் ஒரு ப்ரொபசனல். ஏனெனில் அவன் எந்த சூழ்நிலையிலும் நிதானமாக இருக்கும் மனநிலையினை அடைந்து விட்டான். நாம நம் விசயத்துக்கு வருவோம்.பெரும்பாலோனோர் ஏன் லாபம் பெற இயலவில்லை?


இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால் ஒரு வருடம் கூட பிளாக் எழுதலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது. முக்கியமானதை முதலில் சொல்கிறேன்.


ஒரு முறைப்படுத்தப் பட்ட கல்வி இல்லை:
நம் நாட்டில் ஒரு அரசியலவாதி ஆக எப்படி ஒரு கல்வித் தகுதி தேவை இல்லையோ, அது போலத்தான் ட்ரேடுக்கும் ஒரு முறையான கல்விக் களம் இல்லை. ஏனெனில் அது தேவையும் இல்லை, யார் வேண்டுமானாலும் ட்ரேடு செய்யலாம் என்ற ஒரு நிலையே உண்டு. அது மாத்திரமல்ல டிரேடு என்பது ஒரு அறிவு நிலை சார்ந்தது, என்று சொல்வதை விட அது ஒரு மன நிலை சார்ந்தது. வெறும் 10% ட்ரேடிங் அறிவு இருந்தால் போதுமானது. மீதம் 90% மனநிலை ( Trading Pshycology) சார்ந்தது. நாம் எப்படி நீந்துவது என்று ஆயிரம் புத்தகங்களைப் படிப்பதை விட ஒரு முறை நீரில் குதிப்பது மேலானது.  அனுபவம் பெறப் பெற நம் மனநிலை நிச்சயம் மாறும். ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்று புரிவதற்குள் வாழ்க்கை முடிவது போல, டிரேடில் வெற்றி பெரும் மன நிலை அடைவதற்குள் 99% டிரேடர்களுக்கு அக்கௌண்டில் பணம் முடிந்து விடுகிறது.

ஆராய்ச்சியாளரா(ANALYST ) ? - கற்பவரா(TRAINER- LEARNER )?:


எந்த ஒரு காரியத்திலும் 90% நபர்கள் ஆராய்ச்சியாளர்களாகவே இருக்க விரும்புவார்கள், கற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. எந்த ஒரு துறையிலும் ஒரு ஆராய்ச்சியாளராக அதிக அறிவு தேவை. முறையான அறிவு இன்றி செய்யப்படும் ஆராய்ச்சி ஆபத்தானது. நீங்களும் நானும் மருத்துவம் பயிலாமல் இப்பொழுது உள்ள அறிவை வைத்துக் கொண்டு ஒரு இருதய ஆராய்ச்சி செய்து, ஒரு நோயாளிக்கு ஆபரேஷன் செய்தால் எப்படி இருக்கும்? ஐயோ....பாவம்.ஆனால் ஒரு லேனராக இருக்க ஒரு அறிவும் தேவை இல்லை. டிரேடிங்கில் நிறைய பேர் தவறுவது இங்குதான், எதை செய்ய வேண்டாம் என்கிறோமோ அதைத்தான் மிகச்சரியாகச் செய்வார்கள். அடிப்படை கூடத் தெரியாமல் ஆராய்ச்சி செய்வதால் பணம் விரயமாவது இன்னும் வேகமாகிவிடும். ஒரு குழந்தைக்கு இட்லி மட்டும் தான் ஜீரணம்ஆகும் என்றால் இட்லி தான் தர வேண்டும். பிரியாணி கொடுத்தால், என்னவாகும்? மறுநாள் இட்லி கூடக் கொடுக்க குழந்தை இருக்காது. அவ்வளவுதான்.


நான் முன்னரே சொன்னது போல,கார் ஓட்டுவது போல்தான் டிரேடிங்கும், முதலில் பழகும் போது யாரும் இல்லாத இடம், மிதமான வேகம், நன்கு பயிற்சி பெற்ற ஒரு உதவியாளர் கட்டாயம் வேண்டும்.  இதை விட அதிக முக்கியம் அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்ய வேண்டும். ஒரு சதவீதம் கூட கூட்டியோ குறைத்தோ செய்யக் கூடாது. செய்தால் என்னவாகும் என்று ஆராய்ந்தால்....அவ்வளவுதான்.

டிரேடிங் சம்மந்தம்மான ஒரு பழமொழி உண்டு இதை நினைவில் வைக்காமல் நீங்கள் ஒருக்காலும் டிரேடு செய்யவே கூடாது.


A Good Analyst Cant Be A Good Trader-
  A Good Trader Cant Be  A Good Analyst.
பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்