30 June 2013

எலிக்காக வீட்டைக் கொளுத்தாதே

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.



வீட்டிற்குள் எலி,கரப்பான்பூச்சி வருவது இயற்கையான ஒன்று. எலியை எப்படியாவது விரட்ட வேண்டுமே ஒழிய,அதற்காக வீட்டையே கொளுத்தினால் என்னாவது?

ஒரு ரூமில் எலியைப் பார்த்தவுடன் அங்கு கொலுத்த ஆரம்பிப்பது,எலி குடு குடுவென அடுத்த அறைக்கு ஓடி விடும்,அடுத்ததையும் கொலுத்த, அங்கிருந்தும் எலி அடுத்ததிற்கு ஓட.... இப்படியே ஓடி ஓடி,கொளுத்தி கொளுத்தி வீடு முழுதும் எறிந்தாலும்,வீட்டை விட்டு எலி ஓடுமே ஒழிய அப்பொழுது கூட எலி சாகாது.
அதுபோல்தான் நிறைய டிரேடர்கள் ஒரு லாசைக் குறைக்க இன்னொரு டிரேடு,அதையும் குறைக்க இன்னொன்று...என ஒவ்வொரு டிரேடாகக் கூட்டிக் கூட்டி,கடைசியில் அக்கௌன்ட்டயே காலி பண்ணி விடுவார்கள்.



என்ன செய்ய வேண்டும்?

முடிந்தவரை ஒரு டிரேடை லாபம் அல்லது நஷ்டத்தில் கட் பண்ணி விடுங்கள். அல்லது ஆவரேஜ் பண்ணியாவது வெளியே வந்து விட வேண்டும். என்ன நடந்தாலும் பரவா இல்லை மேலும் அமௌன்ட் முதலீடு என்னால்பண்ண முடியும் என்கின்ற சூழ்நிலையிலும் கூட,ஒரு சிஸ்டம் பாலோ பண்ண மறக்க வேண்டாம். ஆயிரம் ரூபாயில் லாபம் பார்க்காதவன் ஆயிரம் கோடி கொடுத்தாலும் லாபம் பார்க்க முடியாது, ஒரு டிரேடிங் சிஸ்டம் இல்லாமல்.


ஒருவன் மலை ஏறுகிறான்..இரண்டு கையிலும் பெரிய சாமான்கள். ஒரு மைல் தூரம் போனதும் முதுகிலும் ஒரு சாமான் எடுத்துக்கொண்டான். மற்றொரு ஒரு மைல் போனதும் தலையிலும் ஒரு சுமை. அவன் நிலைமையை சற்று யோசனை செய்து பாருங்கள். மலை ஏற ஏற களைப்பும் கூடும்,அதே வேலையில் சுமையும் கூடினால் அவன் உச்சியை அடைவது அதிகக் கஷ்டம் இல்லையா?
உங்கள் ட்ரேடும் கூடிக்கொண்டே இருந்தால்,ஒரு கட்டத்தில் பதட்டம் கூடி நஷ்டம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும்.


பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்