29 June 2013

ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில்..

 பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.


ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு :


நாம் அனைவருக்கும் இரண்டு கண்கள். இந்தப் பயிற்சியை செய்து பார்க்க வேண்டாம்,சற்று உணர்ந்தால் போதும். ஒரு கண்ணில் வெள்ளரிக்காய் ஒரு பீஸ் வைப்போம்,சும்மா குளு குழுவென இருக்கும். அந்த நிமிடமே மறு கண்ணில் ஒரு மிளகாயினை வைத்தால் அந்தக் கண் எப்படி எரியும்?இதில் என்ன ஒரு அதிசயம் என்றால் ஒரு கண் மட்டுமே மிளகாயினால் எரிகிறது,ஆனால் இரண்டு கண்ணும் கட்டாயம் அழும். ஒரு கண்ணில் தான் வெள்ளரி தானே இருக்கிறது அது ஏன் அழ வேண்டும்.




இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால், போரெக்ஸ் மார்கெட்டில் லாபம் வரும்போது வரும் மகிழ்ச்சியின் மன நிலையை விட, நஷ்டம் வரும் போது வரும் மன நிலையின் வலி மிக மிக மிக ...அதிகம்.


ஆனால் நாம் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் பொழுதுதான் நாம் டிரேடிங்கில் நாம் ஒரு ப்ரொபசனல் டிரேடராக ஆக முடியும்.
மார்கெட்டில் லாபமும் நஷ்டமும் ஒரு தாய்க் குழந்தைகள்,ஒருதாய் இரண்டு குழந்தைகளையும் எப்படிப் பாரபட்சம் இல்லாமல் பார்கிறாரோ அது போல்தான் நாமும்  மார்கெட்டை கையாள வேண்டும்.



99% டிரேடர் செய்கிற தவறு என்னவெனில் நஷ்டம் வரும்பொழுது
சின்னலாசில் வெளியே வர மாட்டார்கள்,லாபம் வந்துவிடும்..வந்துவிடும்.. என்று மாதக் கணக்கில் அந்த பொசிசனை (trade position ) க்ளோஸ் பண்ணவே மாட்டார்கள். ஆனால் லாபம் வரும்பொழுது ஒரு சின்ன பைசா அளவில் லாபம் வந்தாலும் டபக்கென்று... கட் பண்ணி வெளியே வந்து விடுவார்கள். டிரேடில் லாபம் என்பது எப்படி வரும் தெரியுமா?
மொத்த லாபத்தை விட ,மொத்த நஷ்டம் குறைவாக இருந்தால் மட்டுமே டிரேடில் லாபம் வரும்.
ஆனால் லாபம் பத்து ரூபாய்,நஷ்டம் நூறு ரூபாய் என்றால் நஷ்டம் தான் 90 ரூபாய் வருமே ஒலிய லாபம் ஒருக்காலும் வராது.

என்ன செய்ய வேண்டும்?


நீங்கள் நூறு ரூபாய் நஷ்டம் வந்தாலும் எப்படி பொறுமையாய் இருகிறீர்களோ, அதுபோல 110 ரூபாய் லாபம் வரும் வரையில் கட்டாயம் பொறுமையாக இருந்து தான் ஆக வேண்டும்,அல்லது எப்படி பைசா அளவில் லாபம் வந்ததும் உடனே கட் பண்ணி ப்ராபிட் எடுக்கிறீர்களோ,

அதுபோல் பைசா அளவில் நஷ்டம்வரும் போதும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கட் பண்ணி எறிய வேண்டும்.
1:2 மற்றும் 1:3  என்றெல்லாம் தொழில் ரீதியாகச் சொல்வார்கள். அதாவது 1 மடங்கு நஷ்டம் 2 மடங்கு லாபம் என்பார்கள்.
பத்து ரூபாய் நஷ்டம் வந்ததும் ஒரு பொசிசனை க்ளோஸ் செய்தல் அல்லது இருபது ரூபாய் ப்ராபிட் வந்ததும் க்ளோஸ் செய்தல் என்பது தான் இது. போகப் போக விரிவாகப் புரியும்.



பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்