29 June 2013

பெரும்பாலோனோர் ஏன் லாபம் பெற இயலவில்லை?பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.உங்கள் நண்பரிடம் ஒரு பைக் அல்லது ஒரு கார் இரவல் வாங்கிச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவு நீங்கள் பயணம் செய்து, அங்கு வேலையை முடித்து, மறுபடியும் நூறு கிலோ மீட்டர் வர, சராசரியாக ஒரு 5 முதல் 7 மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.


ஆனால் நீங்கள் இரவல் வாங்கும் போதே.. நாளைக்குத் தருகிறேன் என்று கூறி வாங்கி இருந்தால் உங்களுக்கு 24 மணி நேரம் இருக்கிறது. அவசரம் இல்லாமல், பொறுமையாகச் சென்று வரலாம்.
ஒருவேளை நீங்கள் 5 மணி நேரத்தில் தருகிறேன் என்று சொல்லி வாங்கி இருந்தால், அதிக வேகம் செல்ல வேண்டும், அதிக வேகம் செல்வதால்,
விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு பஞ்சர் ஆனால் கூட உங்கள் பாடு திண்டாட்டம் தான்.அதுமட்டும் இல்லாமல், நீங்கள் கட்டாயம் 5 மணி நேரத்தில் வந்து விடுவீர்கள் என நம்பி, உங்கள் நண்பர் ஒரு முக்கியமான வேலைக்கு அவர் வாகனத்தை எதிர் பார்த்தால் ..... உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?


இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில்,


நேரத்தைக் குறைக்க வேகத்தைக் கூட்ட வேண்டும், வேகம் கூடினால் விபத்தின் வாய்ப்பும் ( RISK ) அதிகம்.
நம்ம விஷயம்:


நீங்கள் பத்து லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள வங்கிக்குச் செல்கிறீர்கள், அங்கு பிக்ஸ்டு டெப்பாசிட் ( FIXED DEPOSIT FD ) செய்தால், அதிக பட்சம், மாதம் பத்து லட்சம் ரூபாய்க்கு 6000 ரூபாய் முதல் 10000 வரை தான் கிடைக்கும். கிட்ட தட்ட 9 வருடங்களில் இரட்டிப்பு ஆக வாய்ப்பு உண்டு.
ஆனால்,ஒரு படிக்காத தற்குறி ஈமு கோழியில போட்டா ஒரு வருசத்துல டபுள் ஆகும் மச்சின்னு
சொல்றான்.  நியூஸ் பேப்பரப் பார்த்தா, கண்ண மூடிட்டு முதலீடு பண்ணுங்க, நாங்க அதிகம் பிராமிஸ் பண்ணல.. ஒரு நாளைக்கு 3% லாபம் தான் ப்ராமிஸ் பண்றோம்னு சிம்பிளா சொல்றான். அவன் கணக்குப் படி பாத்தா ஒரே மாதத்தில் டபுள். அப்பப்பா... கண்ணக் கட்டுது.
நான் தெரிஞ்சே கேக்குறேன்.. ஒரு அமௌண்ட டபுள் பண்ண ஒருத்தருக்கு 9 வருடம் டைம், அதாவது 9*12 = 108 மாதங்கள்.
ஆனால் ஒருத்தர் சொல்றதோ 1,2,3,...6 என்று சொற்ப மாதங்கள்.
ஏன் பேங்க்ஸ்ல  அறிவாளியான முதலீட்டு நிர்வாகி ( FUND MANAGERS ) இல்லையா? இல்ல ஒரு ஈமு கோழி நிர்வாகியவிட அவர்கள் எல்லாம் முட்டாளா?
நீங்க என்ன சொன்னாலும் சரிங்க, நானே ஒரு தடவை அந்த கமாடிட்டி டிரேடுல ஒரு மாதத்துல நான் டபுள் பண்ணி இருக்கேன், என் கண்ணால கண்டத பொய்னு சொல்லச் சொல்றீங்களா?னு கேட்கலாம்?
நான் மறுபடியும் தெளிவா சொல்றேன்.. ஒரு மணி நேரத்தில் கூட டபுள் ஆக்க முடியும்.


வாகனம் ஓட்டுவது போலத்தான்...  மெதுவா ஒட்டுனா ரிஸ்கும் கம்மி, விபத்து இல்லாமல் சென்று வர வாய்ப்பும் அதிகம். நாம சரியாப் போனாலும்..வர்றவன்... னு நீங்க இழுக்கிற நொண்டிச் சாக்கு எனக்கும் கேக்குது. இரண்டு காரும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் மோதினால் ஆகும் சேதத்தை விட, ஒரு கார் 50KM, மற்றொன்று 100 KM  வேகத்தில் செல்லும் போது ஆகும் விபத்தின் சேதம் நிச்சயம் குறைவே.
அது போல 9வருடத்தில் இரட்டிப்பு ஆகும் போது இருக்கும் ரிஸ்க்கை விட 9 மாதத்தில் இரட்டிப்பு ஆகும் போது இருக்கும் ரிஸ்க் பல ஆயிரம் மடங்கு அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில்,


நேரத்தைக் குறைக்க வேகத்தைக் கூட்ட வேண்டும், வேகம் கூடினால் விபத்தின் வாய்ப்பும் ( RISK ) அதிகம்.பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்