18 July 2011

லாபம் பெரும் இருவர்

 பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இது ஒரு முக்கியமான பகுதி சற்று கவனமாக படிக்க. போரெக்ஸ் மார்கெட் என்பது பணகாரர்களுக்கான சந்தை.


எப்படி எனில் :

ஒருவர் நூறு ரூபாய் போரெக்ஸ் மார்கெட்டில் முதலீடு செய்து பத்து ரூபாய்க்கு பை ( buy ) அல்லது செல் ( sell )   பண்ணுகிறார் என்று வைத்து கொள்வோம்.  மார்கெட் ஒரு இருபது ரூபாய் லாஸ் (loss ) ஆகிறது எனில் மீதம் என்பது ரூபாய் இருக்கும் .இன்னும் ஒரு முப்பது ரூபாய் லாஸ் ஆகிறது எனில் மீதம் ஐம்பது ரூபாய் இருக்கும் .மறுபடியும் ஒரு ஐம்பது ரூபாய் லாஸ் ஆகிறது எனில் மீதம் எதுவும் இன்றி நம் பணம் எல்லாம் லாஸ் ஆகி அக்கௌன்ட் முடிந்து விடும்.


ஒரு வேலை ஐம்பது ரூபாய் மீதம் இருக்கையில், மறுபடி நூறு ரூபாய் முதலீடு செய்தால், 
அக்கௌன்ட் இன்னும் நூற்று ஐம்பது ரூபாய் லாஸ் வரை தாங்கும். ஒருவேளை மறுபடி நூற்று ஐம்பதில், நூறு லாஸ் ஆகி ஐம்பது இருக்கும் பட்சத்தில், மறுபடியும் நூறு ரூபாய் முதலீடு செய்தால் இன்னும் ஒரு நூற்று ஐம்பது ரூபாய் லாஸ் வரை அக்கௌன்ட் நீடிக்கும்.இப்படி எத்தனை முறை லாஸ் ஆனாலும் ஒருவரால் டாப் அப் (top up ) பண்ணும் வசதி இருந்தால், மார்கெட் எவ்வளவு லாஸ் ஆனாலும் நம் அக்கௌன்ட் நிலைத்து இருக்கும் .
பெரிய பெரிய பேங்க் மற்றும் கார்பரேட் கம்பனிகள் எல்லாம் இந்த வகை முதலீட்டாளர்கள் தான். அப்படி எனில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் மார்க்கெட்டில் பணம் பண்ண முடியாதா? கட்டாயம் முடியும். இதற்கு தேவைதான்  முதலீட்டு நிர்வாகம் ( fund management ).  அதாவது பணம் + நேரம் சேர்ந்த கலவை தான் முதலீட்டு நிருவாகம் என்பது.


டாப் அப் பண்ண வசதி இல்லாத ஒருவர் நூறு ரூபாய் மார்கெட்டில் முதலீடு செய்து பத்து ரூபாய்க்கு பை அல்லது செல்பண்ணுவதற்கு பதிலாக ஒரு ரூபாய்க்கு பை அல்லது செல் பண்ணினால் நஷ்டம் என்பது மிக குறைவு, அக்கௌன்ட் சீக்கிரம் லாஸ் ஆகி முடிந்து விடாது.
உதாரணமாக சொன்னால் பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழியின் அடிப்படை தான் இது .டெமோ அக்கௌன்ட் ட்ரேடு பண்ணும் போது புரியும் படி சொல்கிறேன். 
சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள் நண்பர்களே. ....உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பதிவு செய்க.


பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்