19 July 2011

போரெக்ஸ்:அக்கௌன்ட் பல விதம்

 பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

போரெக்ஸ் மார்கெட்டில் பல விதமான அக்கௌன்ட்கள் உண்டு. ஒவ்வொரு அக்கௌன்ட்ம் ஒவ்வொரு வகையானவை. 
 1 மினி அக்கௌன்ட்(mini account ) 
இந்த வகை அக்கௌன்ட்கள் பெயருக்கு ஏற்றாற்போல் சிறிய அக்கௌன்ட் வகையினை சார்ந்தவை.சிறிய முதலீட்டாளர்களுக்கு இந்த வகை அக்கௌன்ட் மிகவும் உதவியாக இருக்கும். லாபம் நஷ்டம் இரண்டும் சிறியதாக இருப்பதால் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைய தேவை இல்லை. பயிற்சி பெற ஆவல் உள்ள முதலீட்டாளர்கள் இந்த வகை அக்கௌன்ட் பயன் படுத்தலாம்.
ஸ்ப்ரெட் (spread ) இந்த வகை அக்கௌன்ட்ல் மிகவும் குறைவு.முதலீட்டு தொகையும் குறைவு.

ஸ்ப்ரெட் என்றால் என்ன?

பை விலைக்கும், செல் விலைக்கும் உள்ள வித்தியாசம் தான் ஸ்ப்ரெட் என்பது. குழம்ப வேண்டாம். ஷேர் மார்கெட்டில் வாங்க விற்க கமிசன் என்பார்கள் இல்லையா ? அதை போலத்தான் இதுவும். பத்து பைசா கமிசனுக்கும் இருபது பைசா கமிசனுக்கும் வேறுபாடு உள்ளது போல, ஒரு டாலர் ஸ்ப்ரெட்கும் நான்கு டாலர் ஸ்ப்ரெட்கும் நிறைய வேறுபாடு உண்டு. டெமோ அக்கௌன்ட்டில் சற்று விரிவாக காணலாம்.


நினைவில் கொள்க: 

மினி அக்கௌன்ட்டில் ஒரு லாட் என்பது ஒன்று.   
ஐம்பது டாலர் முதலீடு போதுமானது.இந்தியா ரூபாயில் 2500
நிறைய போரெக்ஸ் ட்ரேடிங் கம்பனிகள் இந்த வகை அக்கௌன்ட்கள் வைத்து இருப்பதில்லை.

2 . ஸ்டாண்டர்ட் அக்கௌன்ட் (standard account )
இந்த வகை அக்கௌன்ட் மீடியமான முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. குறைந்தபட்சம் 2000அமெரிக்க டாலர் அவசியம்.லாபம் மற்றும் நஷ்டம் அதிகம்.ஒரு லாட் என்பது 10 . குறைந்த பட்ச ஸ்ப்ரெட் 2 முதல் 5 வரை. ஸ்ப்ரெட் இல்லாமலும், ட்ரேட் பண்ணலாம் என்றால் அந்த விதமான போரெக்ஸ் கம்பனிகளை நம்ப வேண்டாம்.


பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்